By 24 September 2021 0 Comments

திரும்ப வா!! (மகளிர் பக்கம்)

‘இன்னிக்கு மீட் பண்ணலாமா?’ என்று பிராணவ் மெஸேஜ் பண்ணியிருந்தான். அவன் மெஸேஜை பார்த்ததும் ரித்திகா மனசுக்குள் பட்டாம் பூச்சி படபடத்தது. த்ரீ போர்த் ஜீன்ஸ் ஸ்லீவ் லெஸ் டாப்ஸ் அணிந்து கொண்டு ஸ்கூட்டியில் கிளம்பினாள். கூடவே அவள் தோழி நேகாவையும் கூட்டிச் சென்றாள். ஒல்லியான தேகத்தில் பார்ப்பதற்கு அழகாக இருந்தாள் ரித்திகா. பிராணவ்வும் ரித்திகாவும் அடிக்கடி சந்திக்கும் இடம் பார்க்தான். பார்க்கிற்கு வந்த பின் ரித்திகா சுற்றும் முற்றும் அவனை தேடினாள். அவளுக்காக காத்திருந்த பிராணவ் அவளை நோக்கி விறுவிறுவென வந்தான்.

பிராணவ் பார்ப்பதற்கு ஸ்டைலிஷாக இருந்தான். கையில் சிங்கிள் பேங்கிள், இடது காதில் கடுக்கண், தலைமுடியை வளர்த்து சிறிய போனிடேலாக போட்டிருந்தான். மீசை, தாடியை டிரிம் பண்ணி லவ்வர் பாய் போல் இருந்தான். ரித்திகா அவனை பார்த்து புன்னகைத்தாள். ஆனால் அவன் சிரிக்கவில்லை. ‘‘எதுக்காக காலையில் இருந்து எனக்கு போன் பண்ணிக்கிட்டு இருக்கே?” என்று கோபமாக கேட்டான். ‘‘நீ தினமும் எனக்கு ஆயிரம் வாட்டி போன் பண்ணுவே இப்பல்லாம் உன்கிட்ட இருந்து போன் கால்ஸும் மெசேஜும் வர்றதில்லை. எனக்கு உன் குரலை கேட்கணும்… உன்கிட்ட நிறைய பேசணும் பிராணவ்!”

‘‘எனக்கு இனி போன் பண்ணாத…”
‘ஏன்டா என்னை அவாய்ட் பண்ற?”
‘‘எனக்கு உன்னை பிடிக்கலை!”
‘‘எதுக்காகடா என் பின்னாடி சுத்துன… அத்தனை வாட்டி ஐ லவ் யூ ரித்திகானு மெஸேஜ் பண்ண… நாம இரண்டு பேரும் லவ் பண்ண ஆரம்பிச்ச ஒரு வருஷத்துலேயே என்னை கழட்டிவிட நினைக்கிறீயா? நான் உன்னை வெறுக்கிறேன்…” ரித்திகா கண்களில் கண்ணீரோடு சொன்னாள். ‘‘நீதானடா என் பின்னாடி சுத்தினே நானா உன் பின்னால சுத்தினேன் …. நீ தானடா என்னை பிரப்போஸ் பண்ணே… நானா உன்னை பிரப்போஸ்

பண்ணேன்… ஏன்டா என் மனசை கலைச்சே?” ‘‘எனக்கு உன்னை பிடிக்கலை… என் முகத்திலேயே முழிக்காதே போடி!”
‘‘எனக்கு நீ வேணும் பிராணவ்… நீஇல்லாம என்னால் இருக்க முடியாது… நான் உன்னை
லவ் பண்றேன்… ப்ளீஸ் என்னை கைவிட்டுடாதே!” ‘‘ஏய் வாடி, போயும் போயும் இந்த பொறுக்கிக்கிட்ட போய் கெஞ்சிக்கிட்டு இருக்க… சில பாய்ஸுக்கு பொண்ணுங்களை காதலிச்சிட்டு ஏமாற்றுவது பொழப்பா போச்சு… காதலோட வேல்யூ தெரியாதவனுங்க!” என்றாள்
ரித்திகாவின் தோழி நேகா.
‘‘என் கண்ணீர் உன்னை சும்மா விடாதுடா…. நான் பட்ட வலியும் வேதனையும் நீயும் ஒருநாள் அனுபவிப்ப அன்னிக்கு நீ என்னை தேடி
வருவடா…” கோபமாக அவனை பார்த்து
கத்தினாள் ரித்திகா.
‘‘நானெல்லாம் உன்னை தேடி வரமாட்டேன்… என்னிக்கோ என் மனசில் இருந்து உன்னை தூக்கி விட்டெரிஞ்சிட்டேன்…’’ ‘‘மனசுக்கு பிடிச்சவங்க நம்ம வாழ்க்கையை விட்டு போயிட்டா அதனால ஏற்படற மரண வலியை நீயும் ஒரு நாள் அனுபவிப்படா…” ‘‘ஹேய் உன் கண்ணீரும் உன் சாபமும் என்னை ஒண்ணும் பண்ணாது போடீ…. எங்கம்மா எங்கப்பா பார்க்கிற பொண்ணைதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்….”
ரித்திகா விக்கி விக்கி அழுதாள். ‘‘அப்படி சொல்லாதடா எனக்கு ரொம்ப
கஷ்டமாயிருக்கு…”
பிராணவ் ரித்திகாவை கண்டு கொள்ளாமல் ஓரமாக பார்க் பண்ணியிருந்த தன் காரில்
சென்றுவிட்டான்.

‘‘விடுடி போகட்டும்… அவனுக்கு மனசுல பெரிய ‘டான்’னு நினைப்பு…
டான்னா? அப்படின்னா நேகா?”
‘‘அவன்தான் உலகத்திலேயே ஆண் அழகன்னு நினைப்பு…’’ என்ற நேகாவை பார்த்து மென்மையாக சிரித்தாள் ரித்திகா. பின் சொன்னாள், ‘‘அவன் என்கிட்ட வந்துட மாட்டானான்னு என் மனசு ஏங்குது நேகா. அவன் என்னை தேடி வந்துட்டான்னா என் வலி எல்லாம் போயிடும்.”
‘‘அவன் வரமாட்டான்… திமிரு
புடிச்சவன்!”

தன் பிளாட்டில் கூலாக டிவி பார்த்துக் கொண்டிருந்தான் பிராணவ். அந்நேரம் அவன் செல்போன் கிணுகிணுத்தது. குருமூர்த்தி பேசினார்.
‘‘பிராணவ், இந்த மாசம் உன் பர்த்டே வருது எங்க கூட வந்து இருப்பா!”குருமூர்த்தி நடு
நடுவே இருமினார். ‘‘கண்டிப்பா பா, ஏன்ப்பா இருமுறீங்க?”
‘‘இரண்டு நாளா உடம்பு சரியில்லை பா…”
‘‘டாக்டர் கிட்ட போயிட்டு வாங்கப்பா… உடம்பை பார்த்துக்கோங்க!”‘‘சரிப்பா!”மறுநாள் அந்த அதிர்ச்சியான செய்தியை சுசீலா பிராணவ்விடம் சொன்னாள். ‘‘பிராணவ் எனக்கும் உன் அப்பாவுக்கும் காய்ச்சல் இருந்ததால் டாக்டரிடம் சென்றோம்…. எங்க இரண்டு பேருக்கும் கொரோனாவாம்.” ‘பயப்படாதீங்கம்மா, டாக்டர் சொல்ற மாத்திரையை போட்டுக்கிட்டீங்கன்னா கொஞ்ச நாளில் சரியாயிடும். நான் வந்து உங்களை பாக்கறேன்!”
‘‘நீ வர வேண்டாம்ப்பா நாங்க போன் பண்றோம்!”
‘‘சரிம்மா!”
சில நிமிடங்களுக்கு பின் குருமூர்த்தியிடம் இருந்து போன் வந்தது.‘‘பிராணவ், நானும் உன் அம்மாவும்
ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆயிருக்கோம்….” ‘‘அச்சச்சோ….” என அதிர்ந்தான் பிராணவ்…

‘‘பயப்படாதே பா… அஞ்சு நாளில் எங்களை டிஸ்சார்ஜ் பண்ணிடுவாங்கலாம்!” ‘‘சரிப்பா, கேர்ஃபுல்லா இருங்க!”குருமூர்த்தி சொன்னவாறு அஞ்சு நாளில் இருவரையும் டிஸ்சார்ஜ் பண்ணினார்கள். இரண்டு நாட்களுக்கு பின் குருமூர்த்திக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் பதட்டமானாள் சுசீலா. சொந்தக்காரங்க உதவியுடன் குருமூர்த்தியை ஆம்புலன்ஸில் கூட்டி சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்தாள் சுசீலா. அடுத்த ஃபிளைட்டில் கோவையில் இருந்து சென்னை வந்தடைந்தான்பிராணவ்.சுசீலாவும் பிராணவ்வும் ஹாஸ்பிட்டலில் இருந்தார்கள்.

‘‘அம்மா, என் பர்த்டே அன்னிக்கு அப்பாக்கு ஒரு ஹேப்பி நியூஸ் வெச்சிருக்கேன்!”‘‘என்னப்பா அது?”‘‘என்னை ஆபீசில் யுஎஸ்ஸுக்கு அனுப்புறாங்க…உங்களையும் அப்பாவையும் என் கூடவே கூட்டிட்டு போயிடுவேன்…. நாம எல்லாரும் இனி யுஎஸ்ஸில் இருக்கலாம்மா!”சுசீலா அவனை பார்த்து சந்தோஷமாக சிரித்தாள். குருமூர்த்திக்கு ஆக்ஸிஜன் லெவல் குறைந்ததால்
அவருக்கு வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டது.

‘‘எந்த நிமிடம் எதுவும் நடக்கலாம்….” என்று டாக்டர் சொன்னார். பிராணவ்வும் சுசீலாவும் மிகவும் பதட்டமடைந்தார்கள். மறுநாள் குருமூர்த்தி இறந்துவிட்டார் என்ற அதிர்ச்சியான செய்தியை டாக்டர் இருவரிடமும் சொன்னார். மரண அடியாய் அந்த செய்தி பிராணவ் இதயத்தில் இறங்கியது.அவன் இதுவரைக்கும் எதற்காகவும் அழுததில்லை …. திமிராக தெனாவட்டாக திரிந்து கொண்டிருந்தான். துக்கம், வருத்தம், வேதனை, அழுகை என்னவென்பது தெரியாமல் இருந்தான்…. இன்று வாழ்க்கை அவனுக்கு எல்லாவற்றையும் காட்டி விட்டது.சற்று தூரத்தில் இருந்து குருமூர்த்தியின் உடலை பார்க்க அனுமதித்தார்கள். குருமூர்த்தியின் முகத்தை பார்த்து சுசீலாவும் பிராணவ்வும் கதறி அழுதார்கள். அவன் மனதில் ஒரு உறுத்தல் ஏற்பட்டது.

சில நாட்களுக்கு பின் ஒரு காலை வேளையில் பிராணவ் ரித்திகாவை பார்க்கில் சந்தித்தான். அவள் முகத்தை பார்த்து சொன்னான் ‘‘ஐயம் சாரி ரித்திகா, உன்னை நான் ரொம்ப காயப்படுத்திட்டேன். நீ எந்த அளவுக்கு வலியை அனுபவிச்சிருப்பேனு இப்போ புரிஞ்சிக்கிட்டேன்… நான் திருந்தி வந்துருக்கேன் என்னை ஏத்துக்குவியா?” ‘‘நானும் விஷயம் கேள்விப்பட்டேன். உனக்கு அப்பான்னா ரொம்ப பிடிக்கும்ல… இப்போ அவர் இல்லை… நீ என்ன பண்ணப்போற?”‘‘நான் ஏற்கனவே வேதனையில் இருக்கேன்…என்னை மேலும் வேதனைப்படுத்தாதே!”ரித்திகா அவனை கூர்மையாக பார்த்தாள்…

‘‘நீ போடின்னா நான் போய்டணுமா… வான்னா வரணுமா…. போடா!”அங்கிருந்து விறுவிறுன்னு சென்றுவிட்டாள் ரித்திகா.‘‘ரித்திகா நில்லு! நீ எனக்கு வேணும். நீ என்னை தேடி வரவரைக்கும் நான் இங்கேயேதான் இருப்பேன். இது சத்தியம்!”

இரவு நேரம் ரித்திகாவிற்கு போன் பண்ணினாள் நேகா. இவளுக்காக பிராணவ்அங்கேயே காத்திருப்பதாக கூறினாள்.

மனமிரங்கிய ரித்திகா பொழுது விடிந்ததும் பிராணவ் முன்பு போய் நின்றாள். அவனை பார்த்து கண் சிமிட்டியபடி, ‘ஹேப்பி பர்த்டே பிராணவ்!’ என்று பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, பெரிய கேக் ஒன்றை அவனுக்கு ஊட்டி விட்டாள் ரித்திகா. ‘‘ஐ லவ் யூ ரித்திகா! உன்னை நான் ரொம்பவே காயப்படுத்திட்டேன். அந்த வலியை அப்பா எனக்கு புரியவைத்துவிட்டார்.

என்னை மன்னிச்சிடு. இனி உன்னை விட்டு நான் போக மாட்டேன்” என்று அவள் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டான். ரித்திகா பிராணவ் தோள் மீது சந்தோஷமாக சாய்ந்து கொண்டாள்.Post a Comment

Protected by WP Anti Spam