மீன் வறுவல்!! (மகளிர் பக்கம்)
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி,
எலுமிச்சை பழம் – 1,
மிளகு – 2 தேக்கரண்டி,
உளுத்தம்பருப்பு – 2 தேக்கரண்டி,
கடலைப்பருப்பு – 3 தேக்கரண்டி,
மீன் – 1/2 கிலோ,
மிளகாய்த்தூள் – 4 டேபிள் ஸ்பூன்,
மல்லித்தூள் – 5 டேபிள் ஸ்பூன்,
கடுகு – 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் – 4,
எண்ணெய் – 1½ மேசைக்கரண்டி,
கறிவேப்பிலை – 2 கொத்து,
உப்பு – தேவைக்கு.
செய்முறை
முதலில் மீனை எடுத்து சுத்தம் செய்து கழுவிக்கொள்ளவும். பின் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், உப்பு, எலுமிச்சை பழம் சாறும் பிழிந்து விழுதுபோல செய்துகொண்டு அதில் மீனை நன்கு ஊற வைத்துக்கொள்ளவும் குறைந்தது 1 மணி நேரமாவது ஊற வைக்கவும். பிறகு மிளகு, காய்ந்த மிளகாய், கடுகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை ஆகியவற்றை வாணலியில் தீயாமல் வறுத்து ஆற வைத்து பொடி செய்துகொள்ளவும். பின் ஊற வைத்துள்ள மீனை அரைத்து வைத்துள்ள மசாலாவில் இரண்டு புறமும் பிரட்டி எடுத்து அடுப்பில் உள்ள தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு பொரித்தெடுக்கவும். பின் அடுப்பின் தணலைக் குறைவாகப் பயன்படுத்தினால் மசாலா நன்கு சேர்ந்து மொறு மொறு மீன் வறுவல் கிடைக்கும்.
Average Rating