நவராத்திரி சுபராத்திரி! (மகளிர் பக்கம்)

Read Time:8 Minute, 12 Second

சக்தி தேவியை வணங்கி அனுஷ்டிக்கும் விரதங்களில் ஒன்றுதான் நவராத்திரி விரதம். மனிதனுக்கு அவசியமான ஆற்றலின் அதிதேவதையாக விளங்குபவள் தான் சக்தி. அவளை பத்து நாட்கள் விரதமிருந்து வணங்கும் நாட்கள் தான் நவராத்திரியாக இந்தியா முழுதும் கொண்டாடப்படுகிறது. நவராத்திரியில் முதல் மூன்று நாட்கள் துர்க்கையின் ஆட்சிக் காலம். நடுவில் உள்ள மூன்று நாட்கள் லட்சுமியின் காலம். இறுதி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவிக்கு உகந்த நாட்கள். முப்பெரும் தேவியினரை வணங்கி கல்வி, செல்வம், வீரம் என்ற மூன்றையும் பெறலாம். பத்து நாள் அனுஷ்டிக்கப்படும் இந்த பூஜையின் சிறப்பு பற்றி தெரிந்து கொள்ளலாம்.

*நவராத்திரி பூஜையை தினமும் முறைப்படி சங்கற்பம் செய்து, கணபதி பூஜை, ப்ரதான பூஜை, கண்டா பூஜை, ப்ராண பிரதிஷ்டை, அங்க பூஜை நாமாவாள் என்று விசேஷமாக செய்யலாம்.

*பண்டைய புராணங்களில் ராமர், காளிதாசர், அபிராமி பட்டர், விஷ்ணு, பிரம்மா ஆகியோர் நவராத்திரி பூஜை செய்து சக்தியின் அருளைப் பெற்றதாக சொல்லப்படுகிறது.

*வீரம், செல்வம், கல்வி கிடைக்க நவராத்திரி விரதம் இருந்தால் கிடைக்கும் என்று உறுதியாக நம்பப்படுகிறது.

*தேவி பாகவதத்தில் ஸ்ரீ ராமர் நவராத்திரி விரதத்தை கடைபிடித்த பிறகு தான் சீதை இருக்கும் இடம் தெரிந்ததாக சொல்கிறது.

*நவராத்திரி விரதம் நவமியுடன் முடிவதால் நவமி தேவி பூஜை, சரஸ்வதி பூஜையுடன் முடிவதால் சரஸ்வதி பூஜை என்றும், கடைசி நாளில் ஆயுதத்தை பூஜிப்பதால் ஆயுத பூஜை என்று அழைக்கப்படுகிறது.

*நவராத்திரியில் முப்பெரும் தேவியரின் கதைகளை நாம் கேட்டால் அம்மை நோய் வராது என்பது ஒரு வகை நம்பிக்கை.

*வளமான வாழ்க்கை, கல்வி சிறந்து விளங்க, அரசியல், பொது வாழ்க்கையில் மேம்பட, உத்தியோகத்தில் உயர்வு ஏற்பட என நினைப்பவர்கள் நவராத்திரி பூஜை அவசியம் செய்ய வேண்டும்.

*நெமிலியில் திரிபுரசுந்தரி கோயில் உள்ளது அனைவரும் அறிந்ததே. இந்த கோயிலின் மிகச் சிறப்பு என்னவென்றால் ஒரு நவராத்திரிக்கு வைக்கப்படும் தேங்காய் அடுத்த நவராத்திரி வரும் வரை கெடாமல் இருக்கும்.

*ஓம் லலிதா தேவியே நம என்பதை நவராத்திரியில் 108(அ)1008 தடவை சொன்னால் நாம் வேண்டியதை அம்பாள் தருவதாக ஐதீகம்.

*நவராத்திரியில் எல்லா நாட்களிலும் சர்க்கரைப் பொங்கல், மெதுவடை அம்பாளுக்கு நைவேத்தியம் செய்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

*உடுப்பியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணருக்கு நவராத்திரி அனைத்து நாட்களிலும் புடவை அணிவித்து சிறப்பு பூஜை நடத்தப்படும்.

*விஜய தசமி அன்று தான் அர்ஜுனன் தன் போர்க் கருவிகளை பூஜை செய்து வணங்கினார். அதனால் அவனுக்கு பாரதப்போரில் வெற்றி கிடைத்தது.

*திருமணம் தடை உள்ளவர்கள் நவராத்திரி நாட்களில் வரும் வெள்ளிக்கிழமையில் 5 சுமங்கலிப் பெண்களுக்கு உணவு அளித்து புடவை மற்றும் தாம்பூலம் கொடுத்தால் உடனடியாக திருமணம் கைகூடும்.

*நவராத்திரி நாட்களில் இல்லத்திற்கு வரும் பெண்களுக்கு தாம்பூலம் கொடுப்பதால் பெண்களின் விருந்தோம்பல் நற்குணம் அதிகரிக்கும்.

*‘‘கரவோ’’ என்ற நடனம் குஜராத் மாநிலத்தில் நவராத்திரி எல்லா நாட்களிலும் விசேஷமாக நடைபெறும். பெண்கள், ஆண்கள் அனைவரும் கும்மியடித்து நடனம் புரிவர்.

*நவராத்திரி நாட்களில் இல்லத்தில் போடும் கோலத்தில் செம்மண் கலந்து போட்டால் அம்பாள் மன மகிழ்ந்து வருவார் என்று நம்பப்படுகிறது.

*இல்லத்தில் நவராத்திரி நாட்களில் வாசலில் மாவிலை தோரணம் கட்டி பூஜை செய்தால் ஐஸ்வரியம் பெருகும்.

*நவராத்திரி நாட்களில் முத்தாலத்தி என்றதொரு வகை கோலம் போட்டால் அம்பாள் அருள் கிடைக்கும்.

*புத்திக்கூர்மை அடைய விரும்பும் மாணவர்கள்/ மாணவிகள் நவராத்திரியில் தினமும் 108 தடவை ‘‘ஓம் மகா சரஸ்வதி சரணம்’’ என்று சொன்னால் நல்ல படிப்பு வளரும்.

*இந்தியாவில் சரஸ்வதி தேவிக்கு இரண்டே இரண்டு இடங்களில் தான் ஆலயம் உள்ளது. ஒன்று ஆந்திராவில் பாசர் என்ற கிராமத்திலும், தமிழ் நாட்டில் கூத்தனூர் என்னும் இடத்திலும் உள்ளது.

*தமிழ்நாட்டில் கொலு வைப்பது போல் ஜப்பானிலும் கொலு வைப்பது வழக்கம். நாம் இங்கு சரஸ்வதி தேவியை வணங்குவது போல் அவர்கள் பெண்-டென் என்ற தேவதையை வணங்குகிறார்கள். அந்த தேவதை கையில் புத்தகம் வைத்திருக்கும்.

*நவராத்திரியை வீர விழாவாக சந்திரகுப்தர் ஆட்சிக் காலத்தில் கொண்டாடப்பட்டது.

*தேவி மகாத்மியம், தேவி பாகவதம் நவராத்திரி நாட்களில் கேட்பதால், படிப்பதால் நம் பாவங்கள் நீங்கும்.

*நவராத்திரியை தசரா என்று அழைக்க காரணம். மைசூரில் நவராத்திரியுடன் பத்தாவது நாளான விஜய தசமியும் சேர்த்துக் கொண்டாடப்படுவதால் தசராத்திரி என்கிறார்கள். அதுவே சுருக்கமாக ‘‘தசரா’’ என்று பழக்கத்தில் உள்ளது.

*நவராத்திரி நாட்களில் சண்டி ஹோமம் செய்தால் நாம் நினைத்த காரியம் கைகூடும்.

*நவராத்திரி நாட்களில் குறிப்பிட்ட வண்ணங்களில் தான் உடை அணிய வேண்டும். முதல் மூன்று நாட்கள் சிவப்பு, அடுத்து மூன்று நாட்கள் மஞ்சள், கடைசி மூன்று நாட்கள் பச்சை நிற உடை அணியலாம்.

*நவாரண பூஜை, சுவாசினி, கன்யா பூஜைகளை நவராத்திரியில் செய்தால் செல்வம் பெருகும், மன நிம்மதி கிடைக்கும்.*நவராத்திரி நாட்கள் இல்லத்தில் ஊசியை பயன்படுத்தக்கூடாது. ஊசி முனையில் அம்பாள் தவம் இருப்பதாக நம்பப்படுகிறது.

*சித்திரையில் வரும் நவராத்திரிக்கு வசந்த நவராத்திரி என்றும் புரட்டாசியில் வரும் நவராத்திரிக்கு சாரதா நவராத்திரி என்ற பெயரும் உண்டு.

*நவராத்திரியில் எல்லா நாட்களிலும் கற்பூர ஆரத்தி, புஷ்ப ஆரத்தி, குங்கும ஆரத்தி எடுத்தால் வளம் பெருகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மேக்கப் பாக்ஸ் – ஐப்ரோ ஸ்பெஷல்!! (மகளிர் பக்கம்)
Next post ஏற்றுமதி செய்யப்படும் நித்யகல்யாணி… அப்படி என்னதான் இருக்கிறது?! (மருத்துவம்)