யோகா டீச்சர்!! (மகளிர் பக்கம்)
யோகாவின் மேல் ஷில்பா ஷெட்டிக்கு இருக்கும் காதல் அதீதமானது. தாய்மையடைந்த பிறகும், தற்போது 43 வயதானபோதும் கல்லூரி மாணவி போலவே காட்சியளிக்கும் தன்னுடைய கட்டுடலுக்கு யோகா முக்கிய காரணம் என்று பல்வேறு இடங்களில் வெளிப்படையாகக் கூறியிருக்கிறார்.
தான் கற்றுக் கொண்டதை மற்றவர்களும் பின்பற்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்ற நோக்கத்தில், யோகா பயிற்சிகளை நேரடியாக செய்து விளக்கும் இவரது வீடியோ இணையதளத்தில் மிகப்பெரிய ஹிட். SHILPA’S YOGA – An introduction to dynamic free flow yoga practice என்ற பெயரில் வெளியான டி.வி.டியும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் விற்பனையில் சாதனை படைத்திருக்கிறது.
அடிக்கடி யோகா பற்றிப் பேசுவதாலும், வீடியோ வெளியிடுவதாலும் ஷில்பாவுக்கு ‘யோகா டீச்சர்’ என்ற செல்லப்பெயரும் இணையதள வட்டாரத்தில் உண்டு. ‘நான் கற்றுக் கொண்ட உடல் வலிமைப்பயிற்சிகள், யோகா, சமையல் குறிப்புகள் மற்றும் ஊட்டச்சத்து ஆலோசனைகள் என அனைத்து ஆரோக்கியம் சார்ந்த கலவையான தகவல்களை எல்லோரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பது என்னுடைய பெரிய விருப்பம் என்கிற ஷில்பாவின் ஒரு நாள் லைஃப்ஸ்டைல் இது.
காலை உணவாக நெல்லிக்காய், கற்றாழைஜூஸ், பழங்கள் அல்லது பழச்சாறு மற்றும் முளைகட்டிய தானியங்களையும், மதிய உணவாக சப்பாத்தி, தால், ப்ரௌன் ரைஸுடன் காய்கறி சாலட்களை எடுத்துக் கொள்கிறார். காய்கறிகள் சாலட், சூப் போன்ற இரவு உணவுகளை 8 மணிக்குள் முடித்துவிடுகிறார். பவர் யோகா, தியானம், பிராணாயாமம் வாரத்தில் 2 நாட்கள். வலிமை தரும் பயிற்சிகள் 2 நாட்கள். பளுதூக்கும் பயிற்சி 2 நாட்கள். தினமும் தியானம். இதுவே ஷில்பாவின் டயட் மற்றும் ஃபிட்னஸ் மந்திரங்கள் !
Average Rating