இளமையான சருமத்துக்கு தேவையான சத்துக்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 21 Second

பெண்களுக்கு பொதுவாக இளமையாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் உண்டு. வயதானாலும் ஒருவர் இளமையாக இருக்க மிகவும் உதவுவது அவர்களின் சருமம். நம் உடலின் மிகப்பெரிய உறுப்பு சருமம்தான். அதில் ஒரு சின்ன கீரல் அல்லது தழும்பு ஏற்பட்டாலும் உடனே பதட்டமாகிவிடுவோம். சரும பாதுகாப்பிற்காக பல வகையான கிரீம்கள் இருந்தாலும், போதுமான ஊட்டச்சத்துக்களும் அவசியம். அவை கிடைக்காததால் சருமம் தன் பொலிவை இழந்து விரைவில் சுறுக்கம் மற்றும் 30 வயதிலேயே முதுமையின் அறிகுறிகள் எட்டிப் பார்க்கின்றன. இதை தவிர்க்க என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிந்து கொள்வோம்.

*செலினியம்: இதன் ஆன்ட்டி ஆக்சிடென்ட் குணம் உடல் செல்கள் சேதமடைவதைத் தடுத்து இளமைத் தோற்றத்தை உறுதி செய்கிறது. மீன், முட்டை, ஈரல், இறைச்சி, தானியங்கள், பூண்டு போன்றவற்றில் செலினியம் நிறைந்துள்ளது.

*வைட்டமின் சி: சருமம் மிருதுவாகவும் எலாஸ்டிக் தன்மையோடும் இருக்க கொலாஜன்கள் தேவை. அந்த கொலாஜன்களை உற்பத்தி செய்து தருவது இந்த வைட்டமின்தான். ஆரஞ்சு, நெல்லி, கிவி, மிளகு, எலுமிச்சை, குடமிளகாய் போன்றவற்றில் வைட்டமின் சி அபரிமிதமாக உள்ளது.

*பீட்டா கரோட்டின்: சருமம் புத்துணர்வு பெறுவதை ஊக்குவித்து, முதுமைத் தோற்றத்தைத் தடுக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இது. கேரட், பழச்சாறு, தக்காளி, உருளைக்கிழங்கு மற்றும் பச்சை இலைக் காய்களில் இது நிறைந்துள்ளது.

*வைட்டமின் இ: சருமத்தில் சுருக்கங்கள், கோடுகள் ஏற்படுவதைத் தடுக்கிறது இந்த வைட்டமின், பாதாம், தாவர எண்ணெய்கள். சூரியகாந்தி விதை போன்றவற்றில் வைட்டமின் இ அதிகம் உள்ளது.

*துத்தநாகம்: உடலின் செல்கள் தங்களை சீரமைத்துக் கொள்ளவும், வளரவும் இது அவசியம். கடல் உணவுகள், முழு தானியங்கள் மற்றும் வெங்காயத்தில் துத்தநாகம் நிறைய உண்டு.

*கொழுப்பு: சருமம் மினுமினுப்பாக இருக்கவும், வறண்டு சுருங்குவதைத் தடுக்கவும், சரும செல்கள் தங்கள் பாதிப்புகளை சீரமைத்துக் கொள்ளவும் போதுமான கொழுப்பு தேவை. குறிப்பாக ஒமேகா 3 கொழுப்பு அவசியம். ஆளிவிதை, வால்நட், கடல் உணவுகளில் இது கிடைக்கிறது. முறையாக சாப்பிட்டு, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடித்தாலே என்றும் இளமையாக இருக்கலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெற்றோர்களே உஷார்!: Chubby Cheeks பாப்பாக்கள்… !! (மருத்துவம்)
Next post “கணவன் ராஜாகண்ணுக்கு Police செய்த கொடூர சித்திரவதைகள்” !! (வீடியோ)