சத்தான கோதுமை பலகாரங்கள்!! (மகளிர் பக்கம்)

Read Time:13 Minute, 51 Second

கோதுமை ஊட்டச்சத்து நிறைந்துள்ள பிரதான உணவு. இதில் சப்பாத்தி, பரோட்டா மட்டுமில்லாமல் கொழுக்கட்டை, சமோசா, நூடுல்ஸ், பீட்சா என பல வகை உணவுகளை செய்யலாம். புரதம் நிறைந்த கோதுமையில் சத்தான உணவுகளை தோழி வாசகிகளுக்காக செய்துள்ளார் சமையல் கலைஞர் மீனாட்சி. நீங்களும் வீட்டில் செய்து சுவையுங்கள்.

பனீர் ஸ்டப்டு ரோல்

தேவையானவை :

கோதுமை மாவு – 250 கிராம்,
துருவிய பனீர் – 100 கிராம்,
வெங்காயத்தாள் – 1 கட்டு,
பச்சை மிளகாய் – 10,
இஞ்சி – 1 துண்டு,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 250 கிராம்,
சீரகம் – 1 டீஸ்பூன்.

செய்முறை :

கோதுமை மாவை உப்பு சேர்த்து பிசைந்து 2 மணி நேரம் வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு, சீரகம் தாளித்து அதில் நசுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தாள், வெங்காயம் அனைத்தும் சேர்த்து நன்கு வதக்கி துருவிய பனீர் சேர்த்து உப்பு கலந்து, எலுமிச்சை பழம் பிழிந்து தனியாக வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவை சிறு பூரிகளாய் இட்டு அதனுள் பனீர் கலவை வைத்து நன்கு சுருட்டி வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். இதனையே சப்பாத்தி மாவின் நடுவில் வைத்து மூடி, மறுபடியும் சப்பாத்தியாக இட்டு தவாவில் எண்ணெய் விட்டு எடுத்தால் பனீர் சப்பாத்தி தயார்.

கோதுமை மாவு – மோர் களி

தேவையானவை :

கோதுமை மாவு வறுத்தது – 250 கிராம்,
வெங்காயம் – 100 கிராம்,
காய்ந்த மிளகாய் – 6,
கடுகு,
கடலை கருப்பு,
உளுத்தம் பருப்பு – தேவைக்கேற்ப,
மோர் – 200 மிலி (புளித்தது),
எண்ணெய் – 50 கிராம்,
உப்பு – தேவைக்கு,
கொத்தமல்லி – சிறிதளவு.

செய்முறை:

மோரில் உப்பு சேர்த்து, கோதுமை மாவு சேர்த்து நன்கு கரைத்து வைத்துக்கொள்ளவும். பின்பு வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை தாளித்து கரைத்து வைத்துள்ள கோதுமை மாவு, மோர் கலவையில் விட்டு சிறு தீயில் நன்கு வேகும் வரை மூடி போட்டு வைத்து வெந்தபிறகு கொத்தமல்லி தூவி ஒரு தட்டில் போட்டு பரிமாறினால் சுவையான கோதுமை மோர் களி தயார்.

கோதுமை மிண்ட் மசாலா பிஸ்கெட்

தேவையானவை :

கோதுமை மாவு – 1/4 கிலோ,
ஆய்ந்த புதினா – 1 கப்,
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 6,
உப்பு – தேவைக்கு
அரைத்துக்கொள்ளவும்.
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் பொரிக்க – 1/4 கிலோ.

செய்முறை:

பாத்திரத்தில் கோதுமை மாவு, அரைத்த விழுது, காய்ச்சிய 2 டீஸ்பூன் நெய் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு போல் பிசைந்து 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு அதனை சப்பாத்திகளாய் இட்டு டயமெண்ட் வடிவில் கட் செய்யவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கட் செய்து வைத்துள்ள கோதுமை பிஸ்கெட்டுகளை பொரித்து எடுக்கவும். இது மாலை நேர டீயுடன் சாப்பிட சுவையான சிற்றுண்டியாக இருக்கும்.

கோதுமை மாவு பிஸ்கெட்

தேவையானவை :

கோதுமை மாவு – 1/4 கிலோ,
சர்க்கரை – 75 கிராம்,
ஏலக்காய் – 4 பொடித்துக்கொள்ளவும்.
உப்பு – 1 சிட்டிகை,
வெள்ளை எள் – 4 டீஸ்பூன்,
நெய் – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 1/4 லிட்டர்.

செய்முறை:

கோதுமை மாவில் சிட்டிகை உப்பு, நெய், வெள்ளை எள், சர்க்கரை, ஏலப்பொடி சேர்த்து தண்ணீர் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். பின்பு அதனை சப்பாத்திகளாய் இட்டு விரும்பும் வடிவில் கட் செய்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான பிஸ்கெட் தயார்.

கோதுமை பிங்கோ

தேவையானவை:

கோதுமை மாவு – 1/4 கிலோ,
தக்காளி – 150 கிராம்,
மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன்,
ஓமம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் பொரிப்பதற்கு – 1/4 கிலோ,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை :

கோதுமை மாவுடன் தக்காளி அரைத்த விழுது சேர்த்து, உப்பு, மிளகாய்த்தூள், ஓமம், 2 டீஸ்பூன் நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இதனை சிறு பூரிகளாய் இட்டு, அதனை 4 துண்டுகளாக்கி ஒவ்வொரு துண்டிலும் இரண்டு, மூன்று கீரல்கள் போட்டு எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான கோதுமை பிங்கோ தயார்.

கோதுமை பயறு சமோசா

தேவையானவை:

கோதுமை மாவு – 250 கிராம்,
முளைகட்டிய பயறு – 100 கிராம்,
வெங்காயம் – 100 கிராம்,
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது),
(இஞ்சி 1 துண்டு, பூண்டு – 10 பல்) நசுக்கியது.
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பட்டை,
கிராம்புத்தூள் – 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் – 50 கிராம்,
பொரிக்க எண்ணெய் – 300 கிராம்.

செய்முறை :

வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சி, பூண்டு, மிளகாய்த்தூள், உப்பு, பட்டை, லவங்கத்தூள், முளைகட்டிய பயறு சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ளவும். கோதுமை மாவில் வெண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இதனை சப்பாத்தியாக இட்டு, நீள நீளமாக 3 துண்டாக்கி முக்கோண வடிவில் மடித்து அதனுள் வதக்கிய பயறு கலவையை வைத்து தண்ணீர் தொட்டு மடித்து காய்ச்சிய எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான ஆரோக்கியமான பயறு சோமாசா தயார்.

கோதுமை வெஜிடபிள் பாக்கெட்

தேவையானவை:

வெங்காயம் – 100 கிராம்,
கேரட்,
பீன்ஸ்,
கோஸ்,
உருளைக்கிழங்கு,
குடை மிளகாய் எல்லாம் சேர்த்து 300 கிராம்
இஞ்சி – 1 துண்டு,
பச்சை மிளகாய் – 6,
பூண்டு – 10 பல் நசுக்கியது
உப்பு – தேவைக்கு,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
வேக வைத்த பட்டாணி – 100 கிராம்,
கொத்தமல்லி – 1/2 கப் நறுக்கியது.
கோதுமை மாவு – 1/4 கிலோ,
வெண்ணெய் – 50 கிராம்,
எண்ணெய் பொரிப்பதற்கு – 300 மிலி.

செய்முறை :

கோதுமை மாவுடன் உப்பு, வெண்ணெய் சேர்த்து பிசைந்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெங்காயம், நசுக்கிய இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்பு அதில் நறுக்கிய காய்கறிகள், வேக வைத்த பட்டாணி சேர்த்து நன்கு வதக்கி ஆற வைத்துக்கொள்ளவும். பின்பு கோதுமை மாவில் சிறுசிறு சதுர வடிவ பூரிகளாய் இட்டு, நடுவில் மசாலா கலவை வைத்து, மடித்து மூடி, ஓரங்களை தண்ணீர் தொட்டு இறுக்கமாக மூடி, வாணலியில் எண்ணெய் காய்ந்ததும் பொன்னிறமாய் பொரித்து எடுக்கவும்.

தேங்காய் பூரணம் மோதகம்

தேவையானவை:

துருவிய தேங்காய் – 1 கப்,
வெல்லம் -1/2 கப்,
ஏலக்காய் – 4,
கோதுமை மாவு – 100 கிராம்,
ரவை- 100 கிராம்,
எண்ணெய் பொரிக்க – 300 மிலி,
நெய் – 2 டீஸ்பூன்.

செய்முறை:

கனமான பாத்திரத்தில் 2 டீஸ்பூன் நெய் விட்டு, பொடித்த ஏலக்காய், துருவிய தேங்காய், பொடித்த வெல்லம் சேர்த்து பூரணமாய் வைத்துக்கொள்ளவும். கோதுமை மாவு, ரவை, 2 டீஸ்பூன் எண்ணெய், உப்பு சிட்டிகை சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்துகொள்ளவும். இந்த கோதுமை மாவை சப்பாத்திகளாய் இட்டு அதனை சிறு மூடி கொண்டு, சிறு, சிறு வட்டங்களாய் கட் செய்துகொள்ளவும். பின் அந்த வட்ட துண்டில் 1/2 டீஸ்பூன் பூரணம் வைத்து மூடி, தேங்காய் குடுமிபோல் சுருட்டிக்கொள்ளவும். பின்பு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான மோதகம் தயார்.

கோதுமை ரவை சோமாஸ்

தேவையானவை:

வறுத்த ரவை – 50 கிராம்,
முந்திரி – 10,
வறுகடலை – 50 கிராம்,
வறுத்த கடலைக்காய் – 50 கிராம்,
கொப்பரை துருவல் – 4 டீஸ்பூன்,
சர்க்கரை – 100 கிராம்,
காய்ந்த திராட்சை – 50,
ஏலக்காய் – 4,
நெய் – 4 டீஸ்பூன்,

மேல் மாவு செய்ய:

கோதுமை மாவு – 250 கிராம்,
ரவை – 100 கிராம்,
பால் – 100 மிலி,
உப்பு – சிட்டிகை,
எண்ணெய் பொரிக்க – 300 கிராம்.

செய்முறை:

கோதுமை மாவு, ரவை, உப்பு, பால் இவைகளை ஒரு பாத்திரத்தில் விட்டு சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். வாணலியில் 2 டீஸ்பூன் நெய் விட்டு முந்திரியை வறுத்துக்கொள்ளவும். அதே வாணலியில் ரவை, திராட்சை தனித்தனியே வறுக்கவும். மிக்ஸியில் ரவை, சர்க்கரை, ஏலக்காய், முந்திரி, வறுகடலை, வறுத்த கடலைக்காய் சேர்த்து கரகரப்பாய் பொடித்து வறுத்த திராட்சை சேர்க்கவும். பிசைந்த மாவில் சிறு பூரிகளாய் இட்டு, பொடித்த ரவை கலவையை 2 டீஸ்பூன் வைத்து மூடி, ஓரத்தை ஒட்டிக்கொள்ளவும். பின்பு காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுக்கவும். சுவையான சோமாஸ் தயார்.

கோதுமை வெங்காய சமோசா

தேவையானவை:

கோதுமை மாவு – 1/4 கிலோ,
பெரிய வெங்காயம் – 1/4 கிலோ,
பச்சை மிளகாய் – 6,
மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்,
சீரகம் + ஓமம் – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
எண்ணெய் – 1/2 கிலோ,
கறிவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை:

கோதுமை மாவை உப்பு -1/2 கரண்டி காய்ச்சிய எண்ணெய் சேர்த்து பிசைந்துகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், ஓமம் தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு அதில் நீளமாகக் கீரிய பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு வதக்கி ஆற வைக்கவும். மாவில் சிறு உருண்டை எடுத்து சப்பாத்தியாக இட்டு அதனை நீளவாக்கில் வெட்டி, முக்கோணமாக மடித்து அதனுள் வதக்கிய வெங்காய மசாலாவை வைத்து ஓரத்தில் தண்ணீர் தொட்டு ஒட்டி வாணலியில் எண்ணெய் வைத்து காய்ந்ததும், இதனை பொன்னிறமாய் பொரித்து எடுக்கவும். சுவையான வெங்காய சமோசா தயார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆரோக்கிய சுண்டல்கள்! (மகளிர் பக்கம்)
Next post மருந்து இல்லாமல் வெறும் ஊசியை போட்டால் என்ன ஆகும்? (வீடியோ)