குழந்தைகளின் பேச்சு குறைபாடு!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 20 Second

ஒரு குழந்தை கருவில் உருவாகும் போதிலிருந்து வளர்ந்து பெரியவர்கள் ஆகும் வரை அவர்களைத் தாக்கும் எந்த ஒரு பிரச்னையாலும் பேச்சுக்குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக சொந்தத்தில் திருமணம் செய்தவர்களுக்கு கரு உருவாகும் சமயத்தில் தோன்றும் குரோமோசோம் குறைபாடுகளும், கர்ப்பகாலத்தில் தாய்க்கு ஏற்படும் மன உளைச்சல், சத்தான உணவு உட்கொள்ளாமல் இருப்பது, அடிக்கடி கருக்கலைப்பு செய்து கொள்வது.

கர்ப்பகாலத்தில் நோய்வாய்ப்படுவது ஆகிய காரணங்களாலும் பேச்சுக்குறைபாடு குழந்தைக்கு ஏற்படலாம். பிரசவத்தின் போது குழந்தைக்கு கொடி சுற்றிப் பிறத்தல், பிறந்த உடன் குழந்தை அழாமல் இருத்தல், மேலும் பிரசவ சமையத்தில் ஏற்படும் எந்த விபத்தும் குழந்தையை பாதிக்கும். குழந்தை பிறந்த பின்னர் ஏற்படும் காய்ச்சல், வலிப்பு நோய், மஞ்சள்காமாலை, வயிற்றுப் போக்கு ஆகிய அனைத்தும் பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடுகளுக்குக் காரணம் ஆகும்.

இது தவிர பேச்சு மற்றும் மொழித்திறன் குறைபாடு எந்தவயதிலும் ஏற்படலாம். பிறவிக் குறைபாடுகளான காது கேளாமை, மூளை முடக்குவாதம், அறிவுத்திறன் குறைபாடு, ஆட்டிஸம், கற்றலில் குறைபாடு, உதடு மற்றும் அன்னப்பிளவு உச்சரிப்பு ஆகியவையும் ஒருவரது பேச்சுத்திறனை பாதிக்கிறது. குழந்தை வளரும் பருவத்தில் காதில் ஏற்படும் வலி, சீழ் வடிதல் ஆகியவற்றையும் கூட கவனமாகக் கையாள வேண்டும்.

இதனால் குழந்தைப் பருவத்திலேயே அவர்களுக்கு ஏற்படும் மொழித்திறன் குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்ய வேண்டும். பாதிப்பின் தன்மைக்கு ஏற்ப ஸ்பீச் தெரபி கொடுக்கப்படும். இதன் மூலம் அவர்களது பேச்சுக் குறைபாட்டினை சரி செய்து இந்த சமூகத்தில் தன்னம்பிக்கை உள்ளவர்களாக வளர்த்தெடுக்க முடியும். பேச்சுக்குறைபாட்டினையும் சரி செய்ய முடியும்.

வயது வந்தவர்களும் விதிவிலக்கல்ல

பெரியவர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், முகவாதம், திக்குவாய், குரல்வளம் பாதிப்பு, உணவு உட்கொள்வதில் மற்றும் விழுங்குவதில் ஏற்படும் பாதிப்புகளாலும் பேச்சுத்திறன் குறைபாடு உண்டாகிறது. விபத்தில் தலையில் அடிபட்டு பேச்சு மற்றும் மொழித்திறன் பாதிப்புக்கு உள்ளாகவும் வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பத்யம் திருப்தி அடைய சில யோசனைகள்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post சிசுவின் சீரற்ற பாதம்…பெற்றோர்களே கவனியுங்கள்!! (மருத்துவம்)