மட்பாண்டக் கைத்தொழில் மண்ணாகி போகிறது !! (கட்டுரை)

Read Time:5 Minute, 16 Second

இன்றைய நாகரிக மாற்றத்தின் பிடியில், முழு உலகமுமே சிக்கியுள்ள நிலையில், இந்த நாகரிக உலகத்துடன் போராடியேனும் மட்பாண்ட உற்பத்தி போன்ற சில பாராம்பரிய கைத்தொழில்களை, அழிவடையாமல் தக்கவைத்துக்கொள்ள பாராம்பரிய கைத்தொழிலாளர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

என்னதான் நாகரிக போர்வையை உலகம் போர்த்திக்கொண்டாலும், பழையதுக்கான மௌசு முழுமையாக அழியாமல் ‘குற்றுயிரும் குறை உயிரும்’ ஆகக் காணப்படுகின்றது. பழைமையை விரும்புவர்கள் இருப்பதால், ஒரளவாவது தலைத்தூக்கியிருப்பதையும் மறுக்க முடியாது. ஆனால், நாம் அறிந்தவரை இலங்கையில் மட்பாண்ட பொருள்களுக்கான கேள்வி நாளுக்கு நாள் அதிகரித்தே செல்கின்றது எனலாம்.

இந்தப. பாரம்பரிய கைத்தொழிலை, குடிசைக் கைத்தொழில் என்றும் வரையறுப்பார்கள். காரணம், இந்தப் பாராம்பரிய கைத்தொழில்களைச் செய்பவர்கள், பரம்பரை பரம்பரையாகச் செய்து வருவதுடன், நவீன தொழில்நுட்ப இயந்திரங்களோ, தொழிற்சாலை வசதிகளோ இன்றி, முழுக்கமுழுக்க தமது உடல் உழைப்பையும் சிறியளவு நிலப்பரப்பிலும் முன்னெடுக்கப்படுவது சிறப்பம்சமாகும்.

ஆனால், தமது பாராம்பரிய தொழில்களுக்கு உரிய சந்தை வாய்ப்பு இல்லை; இதற்கான மூலப்பொருளான களிமண்ணைப் பெறுவதற்கு அரசாங்கத்திடம் விசேட அனுமதி பெறுவது; குறித்த மூலப்பொருளின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு, தொடர்ச்சியாக முகம்கொடுத்து வருகின்றார்கள். இருந்தபோதிலும், இம்மக்கள் தமது அத்தொழிலை முழுமையாகக் கைவிட்டு விடாமல் தொடரும் நிலையில், இயற்கை இவர்களின் உற்பத்திகளுக்கு அடிக்கடி தடையை ஏற்படுத்தி விடுகிறது.

அந்த வகைளில், பாரம்பரிய கைத்தொழில்களில் ஒன்றான மட்பாண்ட உற்பத்தியை மாத்திரம் நம்பி, தமது வாழ்வாதாரத்தை முன்னெடுக்கும் புத்தளம் மாவட்டத்தின் 10க்கு மேற்பட்ட கிராமங்களில், முந்தல்- புளிச்சாகுளம் கிராமம் சிறிது விசேடமான கிராமமாகும்.

அதாவது, வேறு எங்குமே தயாரிக்கப்படாத கறுப்பு மட்பாண்டங்களும் எரிவாயு அடுப்பில் வைத்து சமைக்கக் கூடிய மட்பாண்டங்களும் இங்கு மாத்திரமே தயாரிக்கப்படுவது சிறப்பம்மாகும்.

இந்தப் புளிச்சாங்குள கிராமத்தில் உள்ள 30 குடுபங்களைச் சேர்ந்த 300 பேர், பாராம்பரிய மட்பாண்ட கைத்தொழிலை முன்னெடுத்து வரும் நிலையில், இவர்கள் வேறு எந்தத் தொழிலிலும் ஈடுபடாமல், முழு மூச்சாக இக்கைத்தொழிலை மாத்திரமே முன்னெடுத்து வருகின்றனர்.

இவர்களின் பிரச்சினைகள், ஊடகங்களில் தொடர்ச்சியாக சுட்டிக்காட்டப்பட்டமைக்கு அமைய, இவர்களது உற்பத்திகளுக்கான தொழில்நுட்ப தெளிவுபடுத்தல்களும் சில அமைப்புகளால் வழங்கப்பட்டுள்ளன.

எனினும், அண்மையில் பெய்த கடும் மழையால், புளிச்சாகுளம் கிராமம் நீரில் மூழ்கியதுடன், இவர்களின் மட்பாண்ட தயாரிப்புகளும் வெள்ளத்தில் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளதால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், குறித்த வெள்ள அனர்த்தத்துக்கு முன்னரே, கொரோனா பிரச்சினையால் தமது கைத்தொழில்துறை ஓரளவு சரிவை சந்தித்து வந்ததாகவும் குறிப்பாக கோவில், தேவஸ்தானங்கள், விகாரைகளில் இடம்பெறும் கொண்டாடங்களின் போது, தமது தயாரிப்புகள் அதிகம் விற்கப்பட்டதாகவும், தற்போது கொரோனாவால் அனைத்து உற்சவங்களும் நிறுத்தப்பட்டுள்ளதால், தமது தயாரிப்புகளை விற்றுக்கொள்ள முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது என்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரத்தத்தை குடிக்கும் மந்திரக்கோல்!! (வீடியோ)
Next post உடலுறவின் போது ஏற்படுகின்ற வலிகள்!! (அவ்வப்போது கிளாமர்)