ஒரே ஒரு தடுப்பூசி போதும்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 4 Second

சர்ப்ரைஸ்

குழந்தை பிறந்த பிறகு, அந்த பிஞ்சுகளை நோய்கள் அண்டாமல் பாதுகாப்பது என்பது பெற்றோரின் மிகப்பெரும் சவால். பி.சி.ஜியில் தொடங்கி முதல் வாரம், மாதம், வருடம் என குறிப்பிட்ட இடைவெளிகளில் தடுப்பூசி போடுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவர்களின் பூப்போன்ற உடலில் ஒவ்வொரு முறை ஊசி போடும்போதும் பெற்றோருக்கு மனம் பதறித்தான் போகிறது.

எதற்கு இத்தனை தடுப்பூசி என்று யோசித்த அமெரிக்காவின் Massachusetts Institute of Technology ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஒரே ஒரு ஊசி போடுவதன் மூலம் எல்லா நோய்களையும் தடுக்கும் திறனை உருவாக்கிவிட முடியும் என்பதற்கான புதிய வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.

எம்.ஐ.டி., ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியரான ராபர்ட் லாங்கர், இதுபற்றி பல ஆச்சரியமான தகவல்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.‘‘இளம்பிள்ளை வாதம், வயிற்றுப்போக்கு, ஊட்டச்சத்து குறைபாடு, நோய் எதிர்ப்பு சக்தியின்மை, வளர்ச்சி குறைபாடு உட்பட பலவிதமான பிரச்னைகளை ஒரே மருந்தில் குணப்படுத்த முடியுமா என பலவிதமான பரிசோதனைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தோம்.

இதற்காக, மைக்ரோஸ்கோப்பிக் கேப்ஸ்யூல் ஒன்றினுள் பல மருந்துகளை செலுத்தி அந்த கேப்ஸ்யூலை ஊசி மூலம் உடலினுள் செலுத்தும் பரிசோதனை
களிலும் ஈடுபட்டோம். இதன் முடிவில், நாங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைத்தே விட்டது. இந்த மைக்ரோஸ்கோப்பிக் கேப்ஸ்யூல் உள்ள ஊசி ஒரு தடவை குழந்தைகளுக்கு செலுத்தினால் போதும். அந்த கேப்ஸ்யூலில் இருந்து குறிப்பிட்ட காலத்துக்குத் தேவையான தடுப்பு மருந்து தன்னிச்சையாகவே வெளிப்படும்.

ஒரே மருந்தில் பல நோய்களுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்படுவதால், குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். அடிக்கடி ஊசி போட வேண்டிய அவசியமும் இருக்காது’’ என்று கூறியிருக்கிறார்.இந்த ஆராய்ச்சி நடைமுறைக்கு வரும்போது, தடுப்பூசி முறையில் மிகப்பெரிய புரட்சி நடக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தடுப்பு மருந்துகள் பாதுகாப்பானவைதானா ?! (மருத்துவம்)
Next post குழந்தைகள் ஜாக்கிரதை! வீடியோ கேம் விபரீதம்!! (மருத்துவம்)