நெகிழ வைத்த தியோ!! (மருத்துவம்)
உடல் உறுப்பு தானம் எந்த அளவுக்கு மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறது என்பதற்கான உன்னத உதாரணம் இது. மனதை நெகிழ வைக்கும் உதாரணமும் கூட.
லண்டனில் உள்ள மருத்துவமனை ஒன்றில் சமீபத்தில் பிறந்தான் தியோ. 40 நாட்களாக ஆரோக்கியமாக இருந்த அவனது உடல் ஆரோக்கியம் திடீரென பாதிக்கப்பட்டது. அவனைக் காப்பாற்ற முடியாது என்று மருத்துவர்கள் கூறியதால், அவனது உடல் உறுப்புகளை தானம் செய்ய பெருந்தன்மையோடு முன்வந்தார்கள் அவனது பெற்றோர்.
தியோ மூளைச்சாவு அடைந்த உடனே அவனது நுரையீரல் 5 மாத பெண் குழந்தை ஒன்றுக்கு பொருத்தப்பட்டுள்ளது. அவனது இரண்டு சிறுநீரகங்களும் தானம் செய்யப்பட்டுள்ளது. ‘எங்கள் மகனின் மரணம் எங்களை உலுக்கினாலும் உலகிலேயே உடல் உறுப்பு தானம் செய்த மிகக் குறைந்த வயதுடையவன் என்று பெயர் பெற்று பெருமை தேடித் தந்திருக்கிறான். உடல் உறுப்புதான விழிப்புணர்வை அதிகப்படுத்த இந்த சம்பவம் உதவும்’ என்று கண்ணீரோடு கூறியிருக்கிறார்கள்தியோவின் பெற்றோர்.சல்யூட்!
Average Rating