கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும்!! (அவ்வப்போது கிளாமர்)
வாழ்க்கைத் துணையை அடிக்கடி கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறையும் என்று ஆய்வில் தெரிய வந்துள்ளது.
சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜூரிச் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பீட் டிட்சன் தலைமையிலான குழுவினர் சமீபத்தில் 51 ஜோடிகளிடம் மன அழுத்தம் குறித்து ஆராய்ச்சி செய்தனர். இந்த ஜோடிகளில் பெரும்பாலோர் திருமணமானவர்கள். இவர்களிடம் ஒரு வாரம் நடத்தப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் குறித்து பீட் டிட்சன் கூறியதாவது:
நெருக்கமாக இல்லாமல் இருக்கும் ஜோடிகளை விட நெருக்கமாக பழகி அடிக்கடி கை குலுக்குவது, கட்டிப்பிடிப்பது மற்றும் உடலுறவு கொண்ட ஜோடிகளிடம் மன அழுத்தம் குறைந்திருந்தது. இவர்களிடம் மன அழுத்தத்துக்கு காரணமான கார்டிசால் என்ற ஹார்மோன் குறைவான அளவிலேயே சுரப்பது தெரிய வந்தது.
மன அழுத்தம் காரணமாக பல பிரச்னைகள் ஏற்பட்டதாகக் கூறிய ஜோடிகள், நெருக்கமாக இருக்கத் தொடங்கிய பிறகு மன அழுத்தம் குறைந்ததாகக் கூறினர். அதே நேரம் மன அழுத்தத்தை குறைப்பதற்காக ஜோடிகள் போட்டி போட்டுக் கொண்டு நெருக்கம் காட்டக் கூடாது. இருவரும் மனம் ஒருமித்து நெருக்கமாக இருக்க வேண்டும். நெருக்கம் என்பது ஒவ்வொரு ஜோடிக்கும் மாறுபடும். தினசரி வாழ்க்கையில் குறிப்பிட்ட வகையில்தான் நெருக்கத்தை காட்ட வேண்டும் என்று அர்த்தமல்ல.
இவ்வாறு பீட் டிட்சன் கூறினார்.
Average Rating