யூடியூப் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 7 Second

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி பகுதியில் உள்ள சிற்றூர் எடக்கு. இப்பகுதியை சேர்ந்த இளம்பெண் அன்னி யூஜின் தற்போது கொச்சியில் வசித்து வருகிறார். இவருக்கு யூடியூப் சேனல் மூலம் மாதம் ரூ.1 லட்சம் வருமானம் கிடைக்கிறது. நானும் தான் யூடியூப் பார்க்கிறேன். ஃபேஸ்புக் கணக்கு வைத்துள்ளேன். வங்கி கணக்கு கூட இல்லை. அந்த பெண் எப்படி மாதம் ரூ.1 லட்சம் சம்பாதிக்கிறார் என அதிர்ச்சியாகாதீர்கள். அவர் செய்ததெல்லாம் தன் வீட்டு தோட்டத்தில் செழித்து வளர்ந்துள்ள பழ மரங்களை வீடியோவாக போட்டு அசத்தியது மட்டும்தான்.

இவரது வீட்டுத் தோட்டத்தில் சப்போட்டா, கொய்யா, மாம்பழம் என பல விதமான மரங்களை வளர்த்து வருகிறார். அந்த மரங்களின் புகைப்படத்தை எடுத்து யூடியூப்பில் 2 நாட்களுக்கு ஒருமுறை பதிவு செய்து வருகிறார். சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் உள்ள இவர் வீட்டுத் தோட்டத்தை வைத்து எடுக்கப்பட்ட வீடியோவை கடந்த 2012ம் ஆண்டு முதல் முறையாக யூடியூப்பில் பதிவேற்றினார். தற்போது இவரது யூடியூப்புக்கு 3 லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இரண்டு கோடி பேர் இவரது வீடியோவை பார்வையிட்டுள்ளனர்.

‘‘பொருளாதாரத்தில் பட்டப்படிப்பு படித்துள்ளேன். ஆனாலும் தோட்டம் வளர்ப்பதில் எனக்கு அதிக ஆர்வமுண்டு. என் தோட்டத்தில் வளரும் எல்லா மரங்களும் இயற்கை உரம் பயன்படுத்தி தான் வளர்க்கிறேன். இயற்கை விவசாயத்திற்கு என தனி வாடிக்கையாளர்கள் உள்ளனர். ஏழு வருஷத்துக்கு முன் தான் முதல் முறையா எனது ேதாட்டத்தை வீடியோ எடுத்து படம் பிடிச்சு போட்டேன். மரங்கள் மற்றும் செடி பற்றிய குறிப்புகளும் அதனுடன் பதிவு செய்தேன். அதை பார்த்த வாடிக்கையாளர்கள் சந்தேகங்களை கேட்க ஆரம்பித்தனர்.

தற்போது அவர்களின் சந்தேகம் குறித்தும் விளக்கம் அளித்து வருகிறேன். பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாம் எந்த ஒரு வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவு செய்தாலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விளம்பரம் அளிக்க முன் வருவார்கள். என்னுடைய வீடியோவிற்கு இடையே அவ்வாறு விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அதன் மூலம் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.

என்னுடைய முதல் பதிவிற்கே 8300 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். சாதாரணமாக வீட்டில் உள்ள செடிகளை மட்டும் பதிவுெ சய்யாமல் விவசாயம் குறித்த செய்திகள் மற்றும் பூச்சிகள் வராமல் இயற்கை முறையில் பாதுகாப்பது குறித்த செய்தியும் வெளியிடுறேன். இதனால் பெரும்பாலான விவசாயிகள் எனது யூடியூப்பை பார்வையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விவசாயம் மூலம் சம்பாதிக்கிறேனோ இல்லையோ, வீடியோவை பதிவிடுவதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கிறது’’ என்றார் பெருமை பொங்க அன்னி யூஜின்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆண்டவன் விட்ட வழி!! (மகளிர் பக்கம்)
Next post பாரம்பரிய உணவுகளில் பணம் சம்பாதிக்கலாம்! (மகளிர் பக்கம்)