கலை மற்றும் கைவினைப் பொருட்களை விற்கலாம்… கைநிறைய சம்பாதிக்கலாம்!! (மகளிர் பக்கம்)

Read Time:9 Minute, 29 Second

வீட்டிலிருந்தபடியே பெண்கள் செய்யக்கூடிய சிறுதொழில்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் சிறு கடை மற்றும் தொழிலாக செய்பவற்றையும் இப்பகுதியில் தொடர்ந்து கொடுத்து வருகிறோம்.

அந்த வகையில், சென்னை மயிலாப்பூரில் ‘ஜே.பி. க்ரியேஷன்ஸ்’ என்ற பெயரில் கைவினைப் பொருட்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் பல கலைப் பொருட்களையும் சேர்த்து விற்பனை செய்து வரும் ஜெயஸ்ரீ யை அவரது கலைக்கூடத்தில் சந்தித்ததோடு அவரின் அனுபவங்கள் மற்றும் தொழில் துவங்குவதற்கு தேவையான திறமைகள் மற்றும் நுணுக்கங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். எப்படியெல்லாம் இத்தொழில் நடக்கிறது, நடத்தப்படுகிறது எனப் பார்வையிட்டோம்…

கலை எந்த வடிவில் இருந்தாலும் அழகுதான். அதுவும் நம் அன்றாட வாழ்க்கையிலும் நாம் பங்கு கொள்ளும் சுப நிகழ்வுகளிலும் தேவைப்படுகிற பொருட்களும் கலைநயம் மிக்க படைப்பாக இருந்தால் எப்படி இருக்கும்… அதற்கான ஒரு கலைக்கூடம்தான் ஜெயஸ்ரீ நடத்தும் ஜேபி க்ரியேஷன்ஸ். காலை 10 மணி முதல் இரவு 8:30 மணி வரை பரபரப்பான விற்பனைக்கு நடுவே உள் நுழைந்தால் கண்களை கவரும் விதவிதமான பொருட்கள்.

எதை எடுக்க எதை வைக்க என்று குழப்பத்தில் நிற்க, ஜெயஸ்ரீ ஒவ்வொரு பொருளின் சிறப்புகளை சொல்ல சொல்ல எல்லாவற்றையும் வாங்கிவிடும் ஆவல் ஏற்படுத்தியது. மும்பையில் படித்து வளர்ந்தவர் ஜெயஸ்ரீ, அவருடைய சிறு வயதில் இருந்தே கலை மற்றும் கைவினைப் பொருட்களின் மீதும் தீரா காதல் கொண்டிருந்தமையால் இந்த கலை பயணத்தை தொடங்கியிருக்கிறார்.

சொர்க்கமே ஆனாலும் நம்ம ஊரு போல வராதுல – ஜெயஸ்ரீ சென்னையில் முக்கியமான பகுதியான மைலாப்பூரில் இதை நடத்தி வருகிறார்.
பெண்களுக்கான ஹேண்ட்பேக் செக்‌ஷன்ல பிசியா சில பேர் பர்ச்சேஸ் பண்ணிட்டு இருந்தாங்க, பார்க்க வடமாநிலத்த சேர்ந்தவங்க மாதிரி இருக்காங்களேனு விசாரிச்சதுல அவங்க ஜேபி க்ரியேஷனோட ரெகுலர் கஸ்டமர்ஸாம்.

நம்ம கலாச்சாரம் மட்டுமல்லாமல் பல வட இந்திய மாநிலங்களோட கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகளுக்கும் இவர்களிடம் வருவதாகவும் ஜெயஸ்ரீ கூற, அதைச் சார்ந்த கலை மற்றும் கைவினைப் பொருட்களையும் அதன் நுட்பத்தையும் நமக்கு காட்டி நம்மை வியப்பில் ஆழ வைத்தார்.

‘‘இங்கே இருக்கிற பொருளை அப்படியே நீங்க வாங்கிட்டு போறது மட்டுமல்லாமல் அதிலேயே உங்களுக்கு பிடித்தமான சின்னச் சின்ன மாற்றங்களையும் செய்து கொடுக்குறாங்க.

நம்ம ஊர்ல மட்டுமில்லைங்க பல நாட்டுல இருந்து இதை ஆர்டர் பண்ணியும், நேர்ல வந்தும் வாங்கிட்டு போறாங்கனு’’ ஜெய சொல்லும்போதே ரெண்டு வெளிநாட்டு தம்பதி சில பொருட்களை வாங்கிட்டு போட்டோ எடுத்துட்டு போறதைப் பார்க்க முடிஞ்சது. தமிழ்நாட்டு கைவினை, கலை பொருட்களின் பெருமையை வெளிநாடு வரை கொண்டு சேர்க்குற பெருமையை கொண்டுள்ளது ஜேபி க்ரியேஷன்ஸ்.

ஏற்கனவே சொன்னது போல நம்ம ஊருல நடக்குற எல்லா விதமான சுபவைபோகங்களுக்கும், அதாங்க கல்யாணம் , காதுகுத்து, வளைகாப்பு, பெயர்சூட்டும் விழா போன்ற இன்னும் பற்பல நிகழ்வுகளுக்கும் இவங்க ஸ்பெஷலா ஆர்டர் எடுத்து ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் தேவைப்
படுகிற பழக்கூடைகள், தட்டுகள், பருப்புக்கூடு, பட்சண பைபாக்ஸ், ஆரத்தி தட்டு, தாம்பூலம் பை, மெழுகில் செய்த பொம்மைகள் போன்ற இன்னும் பலவிதமான பொருட்களையும் செஞ்சு கொடுக்குறாங்க.

கல்யாணத்தில், முக்கியமாக காசி யாத்திரைக்கு வைக்கும் கருப்பு குடையை வண்ணமயமாக்கி அதில் பல வேலைப்பாடுகளுடன் வைக்கும் ஐடியாவை ஜேபி க்ரியேஷன்ஸ்தான் முதன்முதலில் செயல்படுத்தியதென்றும் மற்றுமொரு சிறப்பை கூறி ஆச்சரியப்படுத்தினார். இந்தக் குடையுடன் அதற்கு மேட்சிங் ஆன பை, தடி, புத்தகம், விசிறியும் செய்கிறார்.

இதுமட்டும்தானா என்று நினைத்தால் அதுதான் இல்லை… திருமணத்தில் ஊஞ்சல் மிக முக்கியமானது, அதற்கு தேவையான பச்சபுடி செட் பெயின்ட்டிங்கிலும் மற்றும் மீனாக்காரி வொர்க்கிலும் கிடைக்கும். விளையாடல் செட், அழகழகான கைவேலை செய்த பாலிகைகள், லக்ன பத்திரிகை, கொப்பரையில் கைவேலை செய்வது, சாக்லேட் பொக்கே, வாசமான சோப்பு பொக்கே, மொபைல் பவுச், புடவை பைகள், வளையல் பைகள், ஆண்களுக்கான உடைகளை வைக்கும் பைகள், அலங்கார தோரணங்கள், கைப்பைகள் இவையனைத்தும் இங்கே உண்டு.

இதெல்லாம் விதவிதமாய் இங்கு கிடைக்கிறது. மணப்பெண், மணமகன் பெயர்களை பாயில் நெய்து தருவது இங்கே மிக ஸ்பெஷல். கல்யாணம், சீமந்தம், பூணூல், அறுபதாம் கல்யாணம் செட் இவை எல்லாம் மினியேச்சர் பொம்மைகளால் செய்து தரப்படுகிறது. தீம் வெட்டிங் (theme weddings) நடத்த ஆசைப்படுபவர்கள் இவர்களிடம் சென்றால் போதும் அன்னம், மயில், கிருஷ்ணா போன்ற பல கைவேலைப்பாடுகளுடன் நமக்கு பிடித்தமான வண்ணத்தில் பொருட்கள் தயார் செய்தும் தருகிறார்கள்.

ஜெயஸ்ரீ மகிழ்ச்சியாக இந்த கடையை நடத்தி கொண்டு வருகிறார், இந்த மகிழ்ச்சிக்கும் உற்சாகத்திற்கும் காரணம் அவருடைய கணவர் கொடுத்த ஊக்கமும், குழந்தைகள் கூட இருந்து பொருட்கள் உருவாக்க செய்த உதவிகளும்தான் என்று சொன்னதோடு இல்லாம எனக்கு மாமியார்தான் அம்மா மாதிரி உறுதுணையாக இருந்தாங்கனு சொல்லும்போது அவங்க முகத்துல அந்த மகிழ்ச்சி தெரிஞ்சுது.

ஜேபி க்ரியேஷன்ஸ் பேருக்கு ஏற்ற மாதிரி க்ரியேட்டிவிட்டில க்ரேட் மட்டும் இல்லங்க ஃபர்ஸ்ட் க்ரேடும்தான். தொழில் துறையில் பெரும்பாலும் ஆண்களே கோலோச்சும் நிலையில் இன்றைக்கு பெண்களும் தங்கள் திறமையால் கால்பதித்து வருகிறார்கள். நாடு முழுவதும் பெண்கள் சிறுதொழில்களை கற்றுக்கொண்டு செய்து வந்தாலும், இதுபோன்று அதனைச் சந்தைப்படுத்துவதில் ஒரு சிலருக்கே வாய்ப்புகள் அமையப்பெறுகிறது.
பொதுவாக எந்த தொழில் செய்தாலும் அதனைச் சந்தைப்படுத்துவதில் உள்ள உத்திகளைத் தெரிந்துகொண்டால் வெற்றிபெற்றுவிடலாம். கலாச்சாரம், பண்பாடு போன்றவற்றை கலை மற்றும் கைவினைப் பொருட்கள் வாயிலாக பிரதிபலிப்பவற்றுக்கு நல்ல வரவேற்பு உள்ள நிலையில், இதுபோன்ற தொழிலை பெண்கள் செய்தால், கைநிறைய சம்பாதிக்கவும், குடும்பத்தை பொருளாதார ரீதியாக மகிழ்வாக நடத்தவும் வாய்ப்புகள் ஏராளம் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஆள்பாதி ஆடைபாதி !! (மகளிர் பக்கம்)