வயாகரா… சொல்வதெல்லாம் உண்மையல்ல! (அவ்வப்போது கிளாமர்)

Read Time:15 Minute, 21 Second

‘‘வயாகரா மாத்திரை பற்றி நிறைய கற்பிதங்களும், கட்டுக்கதைகளும் இருக்கின்றன.இதன் எதிரொலியாக ரகசியமாக மாத்திரையைப் பயன்படுத்துவது, அளவுக்கதிகமாக உட்கொள்வது போன்ற காரணங்களால் உயிரிழப்பு வரையிலும் நிகழ்கிறது.வெளிப்படையாக அது பற்றிய விவாதங்களோ, விழிப்புணர்வோ இல்லாததுதான் இந்த குழப்பங்களுக்குக் காரணம்.
Advertisement
Powered By Powered by – Dinakaran x eReleGo

பாலியல்ரீதியான குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் வயாகரா, வேறு பல மருத்துவ முக்கியத்துவங்களையும் கொண்டது. எனவே, இதுபற்றிய பல தகவல்கள் நாம் தெரிந்துகொள்வது அவசியம்.வயாகரா பற்றி பரவலாக பலரின் மனதில் இருக்கும் சந்தேகங்களுக்கு பாலியல் சிகிச்சை சிறப்பு மருத்துவர் ஷா துபேஷ் இங்கே பதிலளிக்கிறார்.

வயாகரா என்பது என்ன?

வயாகரா(Viagra) என்றதும் பெரும்பாலானோர் பாலுணர்வைத் தூண்டக்கூடிய, வாழ்க்கைத் துணைவியாரைத் தாம்பத்திய உறவில் மகிழ்ச்சிப்படுத்த உதவுவதுதான் என நினைக்கின்றனர். இது தவறான எண்ணம். வயாகரா என்பது மருத்துவம் அடிப்படையிலும் எண்ணற்ற பயன்களையும் தன்னகத்தே கொண்டது.

குறிப்பாக இதயம், நுரையீரல் போன்றவற்றைப் பலப்படுத்த இந்த மாத்திரை உதவுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. உண்மையில் வயாகரா தாம்பத்ய நோக்கத்துக்காக மட்டுமே தயாரிக்கப்படவில்லை. அது மிகவும் தற்செயலான மருத்துவ விபத்து என்று கூட சொல்லலாம்.

அமெரிக்காவின் பிரபலமான மருந்துப்பொருட்கள் தயாரிப்பு நிறுவனத்தைச் சேர்ந்த வல்லுனர்களான ஆண்ட்ரில் பெல், டேவிட் பிரவுன் மற்றும் நிக்கோலஸ் டெரேட் ஆகியோர் இதய தமனியை விரிவடைய செய்வதற்கான மாத்திரை ஒன்றை புதிதாகக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இருந்தனர்.

பரிசோதனை முறையில் மனிதனின் உடலில் அதனை செலுத்தியபோது இதய தமனி பெரிதாக விரிவடைந்தது. இதனுடன், அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தும் விதமாக அவனுடைய இனப்பெருக்க உறுப்பும் பல மணி நேரம் விறைப்புத்தன்மையுடன் காணப்பட்டது. இதனால் குழப்பம் அடைந்த மருத்துவ வல்லுனர்கள் மேலும் எண்ணற்ற பரிசோதனைகளை மேற்கொண்டனர். அதன்பிறகே, ஆணுறுப்பின் விறைப்புத்தன்மையை அதிகரிக்கச் செய்து பாலுணர்வை நீட்டிக்க செய்ய இந்த மாத்திரை உதவும் என்ற முடிவுக்கு வந்தார்கள்.

வயாகரா ஆண்களுக்கு எப்படி உதவுகிறது?

விறைப்புத்தன்மை குறைவால் அவதிப்படுகிற ஆண்களுக்கு, வயாகரா மாத்திரை அக்குறைபாட்டை சரி செய்யும். வயாகரா ரத்தத்தில் கலந்ததும் நைட்ரிக் ஆக்ஸைடு CGMP என்ற வேதிப்பொருளை ஏராளமாக உற்பத்தி செய்கிறது. இதன் காரணமாக, ஆண்குறி சுருக்கத்துக்குக் காரணமான PDE5 என்ற நொதிப்பொருள் உற்பத்தியாவது தடுக்கப்படுகிறது. எனவே, ரத்த நாளங்களில் அடைப்பு நீக்கப்பட்டு ஆணுறுப்பு விறைப்புத்தன்மை பெறுகிறது.
ஆணுறுப்பிற்குச் செல்கிற ரத்த ஓட்டம் அதிகரிப்பின் காரணமாக, அவர்களால் தாம்பத்ய வாழ்க்கையில் திருப்திகரமாக ஈடுபட முடியும்.

ஆனால், இனப்பெருக்க உறுப்புக்கு ரத்த ஓட்டம் அதிகரித்து விறைப்புத்தன்மை நீடிக்கும் என்பதை மட்டுமே பலர் மேலோட்டமாகப் புரிந்துகொள்கிறார்கள். இதனால், மருத்துவரின் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமலேயே ‘ஓவர் த கவுன்ட்டர்’ முறையில் சிலர் வயாகராவை வாங்கிக் கொள்கின்றனர். இந்த டிமாண்டை உணர்ந்துகொண்ட பல பார்மசிகள் இன்று சர்வசாதாரணமாக வயாகராவை விற்கிறார்கள். இது
ஆபத்தானது.

ஏனென்றால், விறைப்புத்தன்மை மட்டும்தான் தாம்பத்ய உறவில் ஈடுபாடு இருப்பதற்கான அறிகுறி. பொதுவாக, ஆண்மைக்குறைவு அல்லது ஆண் மலட்டுத்தன்மை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஒரு நாளைக்கு 25 மில்லி கிராம்தான் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரை செய்வார்கள். அதுவும் பிரச்னை இருந்தால் மட்டுமே வயாகராவை எடுத்துக்கொள்ள வேண்டும்.

மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் உட்கொண்டால் என்ன நேரும்?

பார்மசியில் இருப்பவர்களுக்கு வயாகராவைப் பற்றிய முழுமையான தெளிவு இருக்கும் என்று சொல்ல முடியாது. இதனால் யாருக்கு எவ்வளவு டோஸேஜ் கொடுப்பது என்பது தெரியாமல், அவர்களே 50 மில்லி கிராம், 100 மில்லி கிராம் என வீரியம் அதிகம் உள்ள High Dosage கொடுத்து விடுகின்றனர்.

இதனால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உண்டு. அதிலும் இதயநோய் உள்ள ஒரு சில வயதான ஆண்கள் ஹை டோஸேஜ் வயாகரா மாத்திரையை எடுத்து கொள்ளும்போது, மாரடைப்பு வருவதற்கு சாத்தியம் பல மடங்கு அதிகம். இது மாதிரியான பக்க விளைவுகளைத் தடுப்பதற்கு மருத்துவர் ப்ரிஸ்கிரிப்ஷன் இல்லாமல் வயாகராவை எடுத்துக் கொள்வது நல்லது இல்லை.

சமீபத்தில் நடைபெற்ற ஆய்வுகளின் முடிவின்படி, இந்த மாத்திரையை அன்றாடம் எடுத்துக்கொள்ள பரிந்துரை செய்வது ஆபத்தானது எனவும் கண்டறியப்பட்டு உள்ளது. ஒரு சில ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்ட மாத்திரைகளைத் தொடர்ச்சியாகவும் உட்கொள்வார்கள். இதனால், நிறைய பிரச்னைகள் ஏற்படும். எனவே, தாம்பத்ய உறவு வைத்துக்கொள்ளும் நாளில் மட்டும் மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரம்பிக்கிற டோஸ் 25 மில்லி கிராம்தான் இருக்க வேண்டும். அதுவும் என்ன மாதிரியான பிரச்னை தங்களுக்கு இருக்கிறது என்பதைத் தெரிந்துகொண்ட பிறகே வயாகராவைப் பயன்படுத்த வேண்டும்.

சில ஆண்கள் விறைப்புத்தன்மை குறைபாடு இல்லாதபோதும், தாம்பத்யத்தில் ஈடுபடுகிற நேரங்களில் எல்லாம் வயாகராவை எடுத்துக் கொள்ளும் வழக்கம் கொண்டிருப்பார்கள். இதனால் வயாகராவுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படும். நாளடைவில் மாத்திரை எடுத்துக் கொள்ளாமல் உறவில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுவிடும். தலையை இரண்டாகப் பிளக்கிற மாதிரி வலி ஏற்படுவது, முதுகு வலிக்கு ஆளாவது, கண் பார்வையில் குறைபாடு, சிலருக்குக் கண்கள் நீல நிறமாகத் தெரிதல் போன்ற பாதிப்புகள் நாளடைவில் வரும்.

விறைப்புத்தன்மை நீண்ட நேரம் நீடிக்கும்போது ஆணுறுப்பு சதைகள் உயிர்ப்புத்தன்மையை இழக்கும். ரத்த ஓட்டத்தை திருப்பி உள்ளே அனுப்ப முடியாது. இதுபோன்ற சிக்கல் உண்டாகும்போது ஆணுறுப்பின் பக்கவாட்டில் ஊசியைக் குத்தி, அதிகப்படியான ரத்தத்தை வெளியேற்ற வேண்டிய நிலைக்கு ஆளாகிவிடுவார்கள். எனவே, மருத்துவரின் பரிந்துரை இல்லாமலோ அல்லது மருத்துவர் பரிந்துரைத்த அளவுக்கு மேலாகவோ உட்கொள்ளக் கூடாது. எனவே, ஆண்கள் வயாகரா விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

எப்படி பயன்படுத்த வேண்டும்?

உணவு உண்ட 45 நிமிடங்கள் கழித்து வயாகரா உட்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 10 முதல் 15 நிமிடங்களுக்குப் பின்னர் தாம்பத்ய உறவு வைத்துக்கொள்வது நல்லது. விறைப்புத்தன்மை நார்மலாக உள்ளவர்கள் இந்த மாத்திரையைத் தவிர்க்க வேண்டும்.

வயாகராவை பெண்கள் பயன்படுத்தலாமா?

வயாகரா பற்றி இருக்கும் பல தவறான நம்பிக்கைகளில் இதுவும் ஒன்று. வயாகரா ஆண்களுக்கு மட்டுமே உரித்தான மாத்திரை அல்ல. ஆண், பெண் என இரண்டு பாலினத்தினரும் இதை பயன்படுத்தலாம் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பெண்கள் மாதவிடாய் நாட்களில், டாக்டரின் பரிந்துரைப்படி வயாகராவை உட்கொள்ளலாம். கருவுற்ற பெண்கள் இந்த மாத்திரையை மகப்பேறு மருத்துவரின், அறிவுரைப்படி சாப்பிட்டு வரலாம். அவ்வாறு செய்வதன் மூலம் பலவீனமாக உள்ள குழந்தையின்(சவலைக் குழந்தை) உடல் எடை கணிசமாக அதிகரிக்கும் என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் பெண்களுக்குப் பாலியல் பிரச்னைகளை நிவர்த்தி செய்யக்கூடிய மாத்திரைகள் குறித்து ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது என அமெரிக்காவைச் சேர்ந்த FDA(Federal Drug Administration) அமைப்பு கூறுகிறது. அதேவேளையில் ஹார்மோன்களை ஒழுங்குபடுத்துதல், ஈஸ்ட்ரோஜன் க்ரீம் எனப் பல சிகிச்சைமுறைகள் பெண்களுக்கு உள்ளன. இதை முறைப்படி பாலியல் சிகிச்சை மருத்துவரின் ஆலோசனை பெற்று
பயன்பெறலாம்.

வயாகரா பயன்படுத்த விரும்புகிறவர்களுக்கான ஆலோசனை என்ன?

உரிய அனுமதி இல்லாமல், உலகினில் திருட்டுத்தனமாக விற்கப்படும் போதை மருந்துகளில் ஒன்றாக வயாகரா மாறிவிட்டது. மருத்துவ வல்லுனர் கூற்றுப்படி கலப்படம் இல்லாத, உண்மையான வயாகரா மாத்திரையை பெறுவது கடினம் என்பதுதான் இன்றைய நிதர்சனம். மருத்துவரின் பரிந்துரை அவசியம் என்று திரும்பத் திரும்பச் சொல்வதன் காரணம் இதுதான்.

புகையிலை முதலான போதைப்பொருட்களை 18 வயதுக்கு உட்பட்டவருக்கு விற்பனை செய்வது குற்றமாகக் கருதப்படுகிறதோ, அதுபோல் இந்த மாத்திரையையும் 18 வயது நிரம்பாத நபருக்கு விற்பனை செய்வதும் குற்றம் என எழுதப்படாத விதி இருக்கிறது.

சில தகவல்கள்

* வயாகரா மாத்திரையைத் தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் நமது உடலில் காணப்படுகிற PDE 6 என்ற நொதிப்பொருள் கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, இம்மாத்திரையை உட்கொண்ட பின்னர், சில மணிநேரம் பார்வைத்திறன் குறையும். ஆகவே அதிக பொறுப்புணர்வு, விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய ரயில் ஓட்டுநர்கள், விமான ஓட்டிகள் மற்றும் கனரக வாகன ஓட்டுநர்கள் இந்த மாத்திரையைச் சாப்பிட்ட பிறகு, ஆறு மணி நேரம் பணியில் ஈடுபட தடை இருக்கிறது.

* மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்துக்குள் ஒருவருக்கு நெஞ்சு வலி, கண்களில் கோளாறு ஏற்பட்டால் சற்றும் தாமதிக்காமல், மருத்துவரை அணுகுவது உயிரையும் உடலையும் பாதுகாத்துக் கொள்ள வழிகோலும்.

* வயாகரா மாத்திரை பாலுணர்வைத் தூண்டக்கூடியது என பலரும் நினைக்கின்றனர். ஆனால், அது உண்மை கிடையாது. ஆணுறுப்பின் விறைப்புத்தன்மை குறைபாட்டைச் சரி செய்து, தாம்பத்ய உறவில் நீண்ட நேரம் நீடிக்க செய்வதுதான் இந்த மாத்திரையின் தலையாய பணி ஆகும்.

* அமெரிக்க அரசாங்கம் பெண்களுக்கான வயாகரா மாத்திரைக்கு அனுமதி தந்துள்ளது. இந்த மாத்திரைக்கு ஃபிலிபான்செரின் என பெயரிடப்பட்டு உள்ளது. ஒரே நோக்கத்திற்காக இந்த மாத்திரை தயாரிக்கப்பட்டாலும், பயன் தருவதில்
வேறுபாட்டு தன்மையுடன்தான் காணப்படுகிறது.

* ஆண்களுக்கான வயாகரா விறைப்புத்தன்மைக்கு உதவுவது போல, பெண்களுக்கு பாலியல் உணர்வைத் தூண்ட உதவுகிறது. ஆனால், பயன் தருவதில் இரண்டுக்குமிடையே வித்தியாசம் இருக்கிறது. ஆண்களுக்கான வயாகரா சாப்பிட்ட அரைமணி அல்லது ஒரு மணிநேரத்துக்குள்ளாகவே பலன் கொடுக்கும். பெண்களுக்கான வயாகராவானது மகளிர் மாதக்கணக்கில் உட்கொண்டால்தான் எதிர்பார்த்த பலன் கிடைப்பதாக செக்சாலஜிஸ்ட் தெரிவிக்கின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இந்த படம் உங்க வாழ்க்கையை மாற்றும்!! (வீடியோ)
Next post 35 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு இந்தப் புற்றுநோய் வரலாம்!! (அவ்வப்போது கிளாமர்)