மூச்சே சொல்லும் ஆட்டிசத்தையும்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 32 Second

குழந்தை பிறந்தவுடன் மூச்சின் மூலமே உயிர் உடலினுள் வருகிறது. உயிர் போய் விட்டது என்பதையும் மூச்சினை வைத்தே உறுதியாகிறது. இப்படி வாழ்க்கை என்பதே மூச்சில்தானே இருக்கிறது! அதே போல மூச்சின் நீளத்தை வைத்தே ஒரு குழந்தை ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதைக் கண்டுபிடிக்க முடியும்!

ஒரு மனிதனின் மூச்சுக்காற்றின் நீளமானது, ஒரு மலரின் நறுமணத்தை நுகரும் போதும், ஒரு அழுகிய மீனின் துர்நாற்றத்தை நுகரும் போதும் வேறுபடும். மனிதன் உள்ளிழுக்கும் மூச்சுக்காற்றின் நீளம் ஒவ்வொரு நுகர்வுக்கும் தகுந்தவாறு மாற்றமடையும்.
ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளுக்கோ இந்த மூச்சுக்காற்றின் நீளத்தில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. அவர்களுடைய மூச்சின் நீளமானது நறுமணம் மற்றும் துர்நாற்றம் இரண்டுக்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறது என்கிறார்கள் இஸ்ரேல் விஞ்ஞானிகள்.

இந்த நுகர்வுப் பரிசோதனையில், குழந்தை எடுத்துக் கொண்ட நேரத்தின் அடிப்படையில், அந்தக் குழந்தைக்கு ஆட்டிச குறைபாடு உள்ளதா என்பது 81 சதவிகிதம் துல்லியமாகக் கண்டறியப்பட்டது.சாதாரண குழந்தைகளுக்கும் ஆட்டிச குறைபாடுள்ள குழந்தைகளுக்கும் இடையேயான மோப்பத் திறனானது பெருமளவில்வேறுபட்டிருந்தது. எந்த உரையாடலும் இன்றி, அவர்களின் செயல்பாட்டிலிருந்தே ஒரு குழந்தை எந்த அளவுக்கு ஆட்டிச பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்பதை, 10 நிமிடங்களுக்கு உள்ளாகவே அறிய முடிந்தது என்கின்றனர் ஆய்வாளர்கள்.

ஆட்டிச குறைபாடு எதனால் வருகிறது என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இதனால் பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது. சில பெற்றோர் குழந்தைகளிடம் காணப்படும் மாற்றங்களை பெரிதுபடுத்தாமல் மெத்தனமாக இருந்து விடுவார்கள். இன்னும் சிலரோ கோயில்களுக்கும் சாமியார்களிடத்திலும் அலைவார்கள். அது தவறு. பாதிப்படைந்த குழந்தைகளை எவ்வளவு சீக்கிரம் அடையாளம் காண்கிறோமோ, அது சிகிச்சையை விரைவில் தொடங்க உதவும் என்கிறார்கள் இவ்விஞ்ஞானிகள்.

பிரேக் லைன்:

ஆட்டிசக் குறைபாடு எதனால் வருகிறது என்பது பற்றிய ஆய்வுகள் தொடர்ந்து கொண்டே இருந்தாலும், இதனால் பாதிப்படையும் குழந்தைகளின் எண்ணிக்கை என்னவோ அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முதல் இரவுக்கு பிறகு…!! (அவ்வப்போது கிளாமர்)
Next post குளிர்காலத்தில் குழந்தைகளை குறி வைக்கும் வைரஸ்!! (மருத்துவம்)