கோலமே… கோலமே…!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 36 Second

பொதுவாக தினமும் வீட்டு வாசலில் கோலம் போடுவது நம் தமிழர்களின் மரபு. குறிப்பாக மார்கழி மாதம் துவங்கிவிட்டால், வாசலில் வண்ணப் பொடியால் அலங்கரித்து கோலம் போடுவதை சிறப்பாக இன்றும் மக்கள் கடைப்பிடித்து வருகிறார்கள். கலர் கோலம் போடும் முன் என்ன செய்ய வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என்று பார்க்கலாம்.

* கோல மாவை நன்றாக சலித்து சன்னமான பொடியாக வெளுப்பான பொடியாக வைத்து கோலம் போட்டால் பளிச்சென இருக்கும்.

* கோல மாவுடன் பச்சரிசி மாவை கலந்தும் போடலாம்.

* வண்ணக் கோலம் போடும் போது வண்ணப் பொடியை அப்படியே தூவ வேண்டும். தேவைப்பட்டால் அதில் சிறிது கோல மாவு கலந்து கொள்ளலாம்.

* பெயிண்ட் கோலம் போடும் போது ஒரு கலர் காய்ந்த பிறகு அடுத்த கலரை போட்டால் ஒன்றுடன் ஒன்று இணையாது.

* ரங்கோலி கோலம் போடும் போது ஒரு புள்ளியை நடுவில் வைத்து அதைக்கொண்டு விரிவுப்படுத்தினால் கோலம் கோணலாகாது.

* அரிசி மாவு கலந்து சலித்த கோல மாவை கோலக் குழாயில் திணித்துப் போடப்படும் போது குழாயின் துளைகள் அடைபடாது.

* வண்ணக் கோலம் போட நைஸான மணலைக் கலந்து போட்டால் காற்றால் கலையாது.

* கோலம் போட்ட பிறகு இடைப்பட்ட இடங்களில் காவி பூசினால் கோலம் சூப்பராக இருக்கும்.

* சிமென்ட் தரையை நன்றாக கழுவி காய்ந்த பிறகு கோலம் போட்டால் தெளிவாக தெரியும்.

* மாக்கோலம் போடும் போது பச்சரிசி மாவோடு சிறிது மைதா மாவு சேர்த்தால் கோலம் சீக்கிரம் அழியாது.

* கோலப் பொடியால் கோலம் போடும்போது தரை சற்று ஈரமாகவும், மாக்கோலம் என்றால் ஈரம் காய்ந்த பின்பும் போட வேண்டும்.

* வெள்ளை நிற டைல்ஸ் தரை என்றால் கோலம் போடும் முன்பு காவியால் லைட்டாக தடவி விட்டு அதன் மேல் போட்டால் பளிச்சிடும்.

* கோலங்களை சுற்றி வித விதமான டிசைன்களில் பார்டர் வரைந்து அதில் கலர் பொடிகளை தூவலாம். தீபம் போல், பலவிதமான பூக்கள் போல், தொங்கு விளக்கு போல வரைந்து கோலத்தில் பூக்களை வைத்தால் வாசலுக்கே தனி அழகு ஏற்படும்.

* கோலப் பொடியை மறுநாள் தண்ணீர் விட்டு கழுவாமல் பெருக்கி அள்ளி சுத்தப்படுத்தினால் தரையில் பல கலர் இணைந்து அசிங்கமாகாது.

* புள்ளிக் கோலத்தில் மிக நிறைய புள்ளிகள் வைத்துப் போடுமுன் முதலில் ஒரு முறை பேப்பரில் முந்தைய நாளே வரைந்து பார்த்து பிறகு வாசலில் போட்டால் சரியாக வரும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செங்கேணியை செதுக்கிய சிற்பி முஹமது சலீம் !! (மகளிர் பக்கம்)
Next post மூட்டு வலிக்கு மருந்தாகும் புளியன் இலை!! (மருத்துவம்)