அறியாதவை ஆனால் அவசியமானவை!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 9 Second

செம்மந்தாரை சாலை ஓரங்களில் காணப்படும். அழகிய இப்பூவில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சர்க்கரை நோய், இதய நோய், இருமல், ரத்தப்போக்கு ஆகியவற்றுக்கு மருந்தாகிறது. செம்மந்தாரை இலைகள் ஈரலுக்கு மருந்தாகி பயன் தருகிறது. இருமலை போக்குகிறது. உடல் வலியை தீர்க்கிறது. மரப்பட்டைகளும் பயனுள்ளதாகிறது. இது, சிவப்பு மந்தாரை என்றும் அழைக்கப்படுகிறது. செம்மந்தாரை பூக்களை பயன்படுத்தி இருமலை போக்கும் மருந்தும் தயாரிக்கலாம். செம்மந்தாரை மரப்பட்டை வீக்கத்தை கரைக்கும் தன்மை கொண்டது. வலியை தணிக்கக் கூடியது. நீர் கட்டி, சதை கட்டி உள்ளிட்ட அனைத்து கட்டிகளையும் கரைக்கும். செம்மந்தாரை மரப்பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அரை ஸ்பூன் செம்மந்தாரை பொடியுடன், 5 மிளகு தட்டி போடவும். ஒரு டம்ளர் நீர்விட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி 50 முதல் 100 மில்லி வரை எடுத்துக்கொண்டால் சுரப்பிகளில் ஏற்படும் வீக்கம் கரையும்.

இயற்கையின் கொடை இன்சுலின் செடி!

இன்சுலின் செடி இயற்கையாகவே சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் குணம் கொண்டதாக விளங்குகிறது. நமது தட்ப வெப்ப நிலைக்கு ஏற்ப ஈரமான இடங்களில் நன்கு விளையக் கூடியது இந்த இன்சுலின் செடி. நாட்டு புறங்களில் மிகவும் இயல்பாக இன்சுலின் செடி கிடைக்கிறது. இஞ்சி, மஞ்சள் வகையைச் சேர்ந்த இந்த இன்சுலின் செடி காஸ்டஸ் பிக்டஸ் என்ற தாவர பெயரை கொண்டதாகும். கொச்சியிலும் தமிழகத்திலும் கன்னியாகுமரியிலும் இந்த தாவரத்துக்கான நர்சரிகள் உள்ளன. நாம் இதை வீட்டுத் தோட்டங்களிலும் தொட்டிகளிலும் கூட வளர்க்கலாம். இது மலைக் காடுகளிலும் நீர் நிலைப் பகுதிகளிலும் 10 அடி உயரத்திற்கு மேல் வளரக்கூடியது. இந்த செடியை பயன்படுத்தி சர்க்கரை நோயை கட்டுப்படுத்தக் கூடிய மருந்தை தயார் செய்யலாம். இதற்கு தேவையான பொருட்கள் இன்சுலின் செடியின் இலைகள், கறிவேப்பிலை. ஒரு கொத்து இன்சுலின் இலைகள் மற்றும் ஒரு பிடி கறிவேப்பிலை ஆகியவற்றை எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் நீர் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். இதை வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டும் இதை காலை மாலை என இரு வேளைகளிலும் பருகி வர வேண்டும். இந்த கஷாயத்தை குடிப்பதால் சர்க்கரை நோயை கட்டுப்படுகிறது.

நோய்களை விரட்டுது நிலவேம்பு!

இதோ மழைக்காலம் துவங்கி விட்டது. மழை வருவது மகிழ்ச்சிதான். கூடவே சீஸன் நோய்களும் வருமே? எப்படி சமாளிப்பது?இருக்கவே இருக்கிறது நமக்கென்று ஒரு சர்வரோக நிவாரணி, நிலவேம்பு கஷாயம்.இது ஒன்பது வகை மூலிகைகள் அடங்கிய அருமருந்து. நம் பாரம்பரிய மருத்துவர்கள், உயிர்களை காக்க உலகத்துக்கு கண்டறிந்து தந்திருக்கும் மாபெரும் கொடை.

என்னென்ன பலன்கள்?

*உடல்வலி, மூட்டுவலி அறவே நீங்கும்.
*சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
*நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்யும்.
*காய்ச்சலால் அவதியுறுபவர்கள் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் முப்பது மில்லி அளவுக்கு ஒருவாரம் இந்த கஷாயத்தை அருந்திவந்தால் காய்ச்சல் வந்த தடம் தெரியாமல் ஓடிவிடும்.
*காஃபி, டீ அருந்துவதை போல தினமும் நிலவேம்பு கஷாயத்தை அருந்தி வருபவர்களை சீஸன் நோய்கள் அண்டவே அண்டாது.

நிலவேம்பு கஷாயம் செய்முறை!

நிலவேம்பு (சிறியாநங்கை), வெட்டிவேர், விலாமிச்சம் வேர், பற்படாகம், பேய்புடம், கோரைக்கிழங்கு, சந்தனச்சிறாய், சுக்கு, மிளகு ஆகியவற்றை அருகிலிருக்கும் நாட்டு மருந்துக் கடைகளில் கேட்டு வாங்கிக் கொள்ளவும்.இந்த ஒன்பது வகை மூலிகைகளை நன்கு உலர வைத்து சம அளவில் கலந்து அரைத்துப் பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். இந்தப் பொடியை தண்ணீரில் கலந்து நன்கு கொதிக்க வைக்கவும். காய்ச்சி வடிகட்டி கஷாயமாக மிதமான சூட்டில் பருகினால் போதும்.

உஷார் மே தேக்கோ!

*பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நிலவேம்பு கஷாயம் தரவேண்டுமானால், முறையான மருத்துவ ஆலோசனை பெறப்பட வேண்டும். மற்றவர்கள் அருந்துவதில் பிரசினை இல்லை.

*கஷாயம், காய்ச்சப்பட்டு நான்கு மணி நேரத்துக்குள் பருகிவிட வேண்டும். இல்லையேல் அதிலிருக்கும் மருத்துவக் குணங்கள் முழுமையான பயனைத் தராது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காமம் என்பது என்ன? (அவ்வப்போது கிளாமர்)
Next post மருத்துவ குணங்கள் நிறைந்த மகிழம்பூ! (மருத்துவம்)