கொரோனாவை வெல்ல கொய்யாவே போதும்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 6 Second

இந்த பெருந்தொற்று காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தி பற்றியும், சளித்தொல்லை பற்றியும், வைட்டமின் சி பற்றியும் அதிகம் பேசி வருகிறோம்.இந்த மூன்றையும் ஒன்றாகத் தரும் பழமாக கொய்யா இருக்கிறது. இதன் அருமை தெரிந்தோ, தெரியாமலோ நாம் இதை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களைத் தெரிந்து கொண்டால் மிகவும் அக்கறையோடு சாப்பிடுவோம்.

* கொய்யாவில் உள்ள வைட்டமின் சி சத்து ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட 4 மடங்கு அதிகம். வைட்டமின் சி சத்தானது உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதுடன் கிருமிகள் தாக்காமல் நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது என்பது தெரிந்ததுதானே.

* கொய்யாவில் உள்ள காப்பர் சத்து ஹார்மோன்கள் சீராக சுரப்பதற்கும், செயல்படுவதற்கும் உதவுகிறது. நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாட்டுக்கு குறிப்பாக தைராய்டு சுரப்பி செயல்பாட்டுக்கு பெரிதும் உதவுகிறது.

* புற்றுநோய் அபாயத்தை கொய்யா வெகுவாய் குறைக்கிறது. கொய்யாவில் உள்ள வைட்டமின் சி சத்தும், லைகோபேனும் திசுக்களை பாதுகாப்பதால் புற்றுநோய் தாக்கும்
அபாயம் வெகுவாய் குறைகிறது.

* சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கொய்யா. நார்ச்சத்தும், குறைந்த சர்க்கரை அளவும் கொண்ட கொய்யாவை சர்க்கரை நோயாளிகள் எடுத்துக் கொள்ளலாம்.

* கண் பார்வைத் திறன் மேம்பட கொய்யாப் பழம் சிறந்தது. இதில் போலிக் ஆசிட், வைட்டமின் பி9 இருப்பதால் கர்ப்பிணிகளுக்கும் உகந்தது. இது குழந்தையின் நரம்பு மண்டலத்தினை நன்கு பாதுகாக்கிறது.

* கொய்யாவில் உள்ள மக்னீசியம் நரம்பு களையும், தசைகளையும் தளர்த்தி விடுவதால் மனச்சோர்வு குறையும்.

* கொய்யாவில் உள்ள நியாசின் எனப்படும் வைட்டமின் பி3, பிரிடாக்ஸின் எனப்படும் வைட்டமின் பி6 மூளைக்கு ரத்த ஓட்டம் நன்கு செல்ல உதவுவதால் மூளை சோர்வின்றி இருக்கும். இதில் உள்ள வைட்டமின் சி, ஏ மற்றும் லைகோபேன், கரோட்டின் போன்றவை சரும சுருக்கங்களை நீக்குவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடவுளின் கனி!! (மருத்துவம்)
Next post மனசுக்கு பிடித்தவர்களுக்காகவே வந்துவிட்டது கஸ்டமைஸ்டு பரிசுகள்! (மகளிர் பக்கம்)