மன அழுத்தம் போக்கும் மாதுளை!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 17 Second

பழங்களிலேயே பழமையானது, சிறந்தது மாதுளம்பழம்தான். உலகெங்கும் 720 வகை மாதுளைகள் உள்ளன. அயல்நாடுகளில் இப்பழத்திற்கு மற்றொரு பெயர் உண்டு. ‘சைனீஸ் ஆப்பிள்’. நீண்டநாள் உடல்நிலை சரியில்லாதவர்கள் தொடர்ந்து ஒரு மாதம் இந்தப்பழத்தை சாப்பிட்டு வந்தால் உடலுக்கு பழைய தெம்பு கிடைத்துவிடும். மருத்துவ குணங்களும், பிளேக், புற்றுநோய் போன்றவற்றை குணமாக்கும் மகத்துவம் கொண்டது.

*உடலில் நைட்ரிக் ஆக்ஸைட் (Nitric oxcide) என்னும் தனிமம் குறையும்போது மனஅழுத்தம் ஏற்படும். மாதுளை ‘நைட்ரிக் ஆக்ஸைடு’ அளவை அதிகரிக்கும் தன்மை கொண்டது. இதை சாப்பிட்டால் மனஅழுத்தம் குறையும்.

*உடற்பயிற்சி செய்வதற்கு முன்னர் ஒரு கைப்பிடி அளவு மாதுளைகளைச் சாப்பிட்டால் ரத்த ஓட்டம் சீராகி உடற்பயிற்சி செய்வதற்கான ஆற்றல் கிடைக்கும்.

*மாதுளையில் உள்ள எல்லஜிக் அமிலம் (Ellagic Acid) சூரிய வெப்பத்தால் தோல்களில் ஏற்படும் கருமையையும், தோல் புற்றுநோயையும் தடுக்கும்.

*மாதுளம் விதைகள் நம் தோல்களில் ஏற்படும் காயங்கள் மற்றும் தழும்புகளை குணமாக்கும் சக்தி கொண்டவை. மாதுளம்பழத்தைச் சாப்பிடுவதாலும், அதன் விதையிலிருந்து தயாரிக்கப்படும் எண்ணெயை காயங்களின் மீது தடவுவதாலும், காயம் விரைவில் குணமாகும். அத்துடன் தழும்புகளும் மறையும்.

*மாதுளம்பழச்சாறு தலைமுடியின் வேர்களை உறுதிப்படுத்தும். தலையில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி முடி வளர்ச்சியைத் தூண்டும். இதில் இருக்கும் வைட்டமின் மற்றும் தனிமங்கள் முடியை பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் மாற்றுகின்றன.

*தினமும் சாப்பிட்டால் மூளையில் உள்ள நரம்பியல் கடத்திகள் இயற்கையாகவே தன் சக்திகளை அதிகரித்து, மூளையைச் சுறுசுறுப்பாக்கும். ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்யும். அத்துடன் அல்சைமர் மற்றும் மூளைக்கட்டிகள் வராமல் தடுத்து பாதுகாக்கும்.

*வயோதிகத் தன்மையைத் தள்ளிப்போடும் பெரும்பாலான ‘ஆன்டிஏஜில்’ சிரப் மாதுளம்பழத்தின் கொட்டைகளில் இருந்துதான் தயாராகிறது. பழமாக சாப்பிடும்போது அதைவிட அதிக பலன்கள் கிடைக்கும்.

*அயல் நாடுகளில் பிறந்த குழந்தையின் மூளையில் எந்த பாதிப்பும் வராமல் தடுப்பதற்கு மாதுளை சிரப்பைத்தான் குழந்தைகளுக்கு கொடுக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண்கள் தினமும்
மாதுளம்பழச்சாறு குடித்துவர, குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக வளர துணை புரியும்.

*மாதுளை வயிற்றில் குவிந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் தன்மை உடையது. செரிமானப் பிரச்னைகளை சீராக்கி, உடல் எடை குறைவதற்கும், டைப் 2 வகை சர்க்கரை நோயை குறைப்பதற்கும் துணை புரியும்.

*திருமணமான பெண்களுக்கு கருவுறுதலில் பிரச்னை இருந்தால் தினமும் காலையில் வெறும் வயிற்றில் மாதுளம்பழம் சாப்பிட்டு வரலாம். ஹார்மோன் குறைபாடுகள் நீங்கி, கர்ப்பப்பை
ஆரோக்கியமாக இருக்கும்.

*மெனோபாஸ் காலங்களில் ஈஸ்ட்ரோஜென்னின் உற்பத்தி குறைந்து, மூட்டுவலி மற்றும் எலும்புத்தேய்மானம் அதிகரிக்கும். இதுபோன்ற காலங்களில் பெண்கள் தினமும் மாதுளம்பழ ஜூஸ் குடிக்கலாம். அது உடலில் ஈட்ஸ்ரோஜென் உற்பத்தியைத் தூண்டும். எலும்புகள் வலுப்பெற உதவும்.

*தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மாதுளம் பழச்சாற்றினை அருந்தி வந்தால், ரத்த அழுத்தம் குறையும்.

*சமீபத்தில் நடந்த ஓர் ஆய்வில், ஆன்டி ஆக்ஸிடெண்ட் நிறைந்த மாதுளம்பழத்தை உண்பதால், ஈறுகள் மற்றும் பற்களில் மறைந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் அழிகின்றன என்பதை நிரூபித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்லாம் பாடநூல்களை மீளப்பெறும் விவகாரம்!! (கட்டுரை)
Next post கொண்டைக்கடலையின் மருத்துவப் பயன்கள்!! (மருத்துவம்)