இன்று சர்வதேச யோகா தினம் 19 வயது இளைஞர் போல கலக்கும் 109 வயது தாத்தா!! (மகளிர் பக்கம்)

Read Time:2 Minute, 41 Second

தினமும் யோகா செய்வதால், திருவில்லிபுத்தூரைச் சேர்ந்த 109 வயது முதியவர், 19 வயது இளைஞரைப்போல் இன்னும் சுறுசுறுப்பாக செயல்படுகிறார். விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் ஊரணிப்பட்டிதெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மனைவி சில வருடங்களுக்கு முன்னர் இறந்துவிட்டார். இவருக்கு 3 மகள்களும், 2 மகன்களும் உள்ளனர். தற்போது கொள்ளுப்பேத்தி எடுத்து மூன்று தலைமுறைகளை பார்த்துவிட்டார்.

109 வயதான இவர், எந்த நோய்களும் அண்டாமல், ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார். இந்த தள்ளாத வயதிலும் அனைத்து வேலைகளையும் தானே இழுத்துப்போட்டு செய்கிறார்.இந்த சுறுசுறுப்புக்கும் ஆரோக்கியத்திற்கும் இவர் கூறும் ஒரே காரணம், யோகா. தன்னுடைய 75வது வயதில்தான் யோகா கற்றுக்கொள்ள தொடங்கினார். யோகாவில் கைதேர்ந்த கோபால் என்பவர் இவருக்கு கற்றுக்கொடுத்துள்ளார்.

அன்று முதல் இன்றுவரை தனது அன்றாட கடமைகளில் ஒன்றாக யோகாவை செய்து வருகிறார். தன்னைப்போல் உடலும், மனதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு யோகாவை செய்யுமாறு மற்றவர்களுக்கும் பரிந்துரைக்கிறார்.குருசாமி மேலும் கூறுகையில், ‘‘யோகா செய்தால் எந்த நோயும் அண்டாது. தினமும் சுறுசுறுப்பாக இருக்கலாம். வயதான காரணத்தால் பத்மாசனம், காலாசனம், சர்வாங்காசனம் என சில ஆசனங்களை மட்டுமே செய்து வருகிறேன்.

பகல் நேரங்களில் மகன் வீட்டில் உள்ள பெடல் தறியில் வேலை செய்கிறேன்.அதில் எந்த கஷ்டமும் தெரியவில்லை,’’என்றார் உற்சாகத்துடன். இந்த காலத்தில் 40 வயதை கடந்த உடனேயே கை, கால், மூட்டுவலி என்று மக்கள் முடங்கிக் கிடக்கின்றனர். ஆனால் 109 வயதிலும் யோகாவால் 19 வயது இளைஞரைபோல் சுறுசுறுப்பாக காணப்படும் இந்த குருசாமி, நம்மை ஆச்சர்யப்படத்தான் வைக்கிறார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கல்லீரலை பலப்படுத்தும் விபரீத சலபாசனம்!! (மகளிர் பக்கம்)
Next post ஆரோக்கிய வாழ்க்கைக்கு வழிகாட்டும் app!! (மருத்துவம்)