இனி பெண்களும் உலகத்தை சுற்றி வரலாம்! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 45 Second

“ஆகாசத்த நான் பாக்குறேன்!! ஆறு கடல் நான் பாக்குறேன்!!” என மகிழ்ச்சியாக தனியாக ஒரே பெண் உலகத்தை சுற்றி வர இயலுமா? நிச்சயம் முடியும். உலகமே நம் உள்ளங்கைகளில் காட்சி பொருளாய் மாறி நவீன தொழில்நுட்பங்கள் பெருகி கிடக்கும் இக்காலங்களிலும் பெண்கள் தனிப் பயணம் போகலாமா? அது பாதுகாப்பானதா? என்ற ஐயமும் கேள்விகளும் பலருக்கும் எழாமல் இல்லை.

பெண்களும் இந்த பூமியை சுற்றி தாராளமாக வலம் வரலாம். அதற்கான பாதுகாப்பான தடம் அமைத்து தந்துள்ளது நவீன உலகம். பெண்கள் பெற்றோர்கள், கணவன், பிள்ளைகளின் பாதுகாப்பில் இருந்த காலக்கட்டங்கள் மாறி தைரியமாக சுதந்திரமாக காலடிதடங்களை பதிய வைக்கும் வீரப் பெண்களாக மாறி வருகின்றனர். அதற்கு மாறிவரும் நடைமுறை மாற்றங்களும், நவீன தொழில்நுட்ப வசதிகளும், கல்வியறிவும் பெரிதும் உதவிபுரிகின்றன என்பதிலும் மிகையில்லை.

தற்போது பெண்கள் தங்களது உயர்கல்விக்காகவும், வேலைவாய்ப்பிற்காகவும் உலகம் முழுவதும் துணைகள் ஏதுமின்றி தனியாக பறந்து செல்லும் சூழ்நிலை உருவாகிவிட்டது. தினந்தோறும் கல்விக்காக வெளிநாடுகளுக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவது ஆரோக்கியமான விஷயமே. இவர்களின் இந்தப் பயணத்தை நவீன தொழில்நுட்ப வசதிகள் சுலபமாக்கி தருவதும் ஒரு முக்கிய காரணம்.

நெட் பேக் வசதியுடன் ஒரு ஸ்மார்ட் போன் கையில் இருந்தால் போதும் உலகின் அனைத்து வசதிகளும் தகவல் தொழில்நுட்பத்தின் வளையத்திற்குள் வந்து விடுகிறது. இதற்கேற்பவே இன்றைய நவீன செயலிகள் பல உருவாக்கம் செய்யப்பட்டுள்ளன. உலகின் எந்தப் பகுதியிலிருந்தும் விமான பயணம் முதல் பேருந்து பயணம் வரை இதன் மூலம் முன்பதிவு செய்து கொள்ள செயலிகள் உள்ளன. எங்கு தங்கலாம்? தங்குமிடம் வசதியாக இருக்குமா? நமது பட்ஜெட்டில் அடங்குமா? அந்த ஊர் எத்தகையது என்பதை தீர்மானித்து அதற்கேற்ப நமது பயணங்களை திட்டமிட வேண்டும். இதனை நவீன வசதிகள் கொண்ட நமது மொபைல்போனிலே தெரிந்து கொள்ளலாம்.

தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அறிவு இருந்தாலே தனி பயணங்களை மேற்கொள்ள போதுமானது. நாம் செல்லும் ஊர்களில் உள்ள லோக்கல் பயண வசதிகளையும் கூட ஆன்லைனில் அறிந்து கொள்ளலாம். நாம் செல்ல வேண்டிய இடங்கள் எங்கே இருக்கிறது, எவ்வளவு தூரம், எவ்வளவு நேரங்களில், எந்த வழியில் செல்லலாம் என்ற தகவல்கள் நம் போனிலேயே அறிந்து கொள்ளும் வசதிகள் உண்டு. நமது பயணம் பாதுகாப்பானதாக இருக்கிறதா? ஓட்டுனர் சரியான வழியை தேர்தெடுக்கிறாரா என்பதை போனிலேயே தெரிந்து கொள்ளலாம்.

பயணத்தின் இடையே ஏதேனும் பாதுகாப்பு குறைபாடுகள், பிரச்னைகள் ஏற்பட்டாலும், அதனை சமாளிக்கவும் நம்மை பாதுகாக்கவும் குறிப்பாக பெண்களுக்கு என பல பாதுகாப்பு செயலிகள் உள்ளன. அதனை பதிவிறக்கம் செய்து கொண்டு பாதுகாப்பாய் நமது பயணங்களை மேற்கொள்ளலாம்.

பெண்கள் இவ்வாறான தனிப்பயணங்கள் மேற்கொள்வது என்பது அவர்களது தன்னம்பிக்கையை பெரிதும் அதிகரிக்க உதவும். ஒரு பெண்ணின் தனிப் பயணங்கள் அவள் தன்பலம் என்ன என்றும் தன்னைப் பற்றி தானே அறிந்துகொள்ளவும் உலகத்தை புரிந்து கொள்ளவும் பெரிதும் உதவுகிறது. அவளது தைரியத்தையும் துணிச்சலையும் பன்மடங்கு அதிகரிக்கும் என்பது நிஜம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கற்றுக் கொண்டால் குற்றம் இல்லை! (அவ்வப்போது கிளாமர்)
Next post நன்றி குங்குமம் தோழி !! (மகளிர் பக்கம்)