பிரசவத்தை இலகுவாக்கும் சுகப்பிரசவ கஷாயம்! (மருத்துவம்)
குழந்தைப் பேறு என்று வரும் போது சுகப்பிரசவம் என்பது ஒரு வரப்பிரசாதமாக பார்க்கப்படுகிறது. நமது பாட்டி, கொள்ளு பாட்டி எத்தனை குழந்தைகள் பெற்றபோதும், சுகப்பிரசவமாகவே அவர்களுக்கு இருந்தது. இப்போது மாறி வரும் வாழ்க்கை சூழலில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பெற்றுக்கொள்வது தவிர்க்க இயலாததாகி இருக்கிறது. எனினும் சுகப்பிரசவம் ஆக வேண்டும் என்று எந்த பெண்ணுக்குத்தான் ஆசை இருக்காது. அப்படிப்பட்ட கர்ப்பிணி பெண்களுக்கான சுகப்பிரசவ கஷாயம் பற்றி விவரிக்கிறார் ஸ்ரீவர்மா ஆயுர்வேத மருத்துவமனை, மருத்துவ இயக்குனர் டாக்டர் கௌதமன் B.A.M.S.
சுகப்பிரசவ கஷாயம் செய்யத் தேவையான பொருட்கள்
கடுக்காய்,
நெல்லிக்காய்,
தான்றிக்காய் சேர்ந்த திரிபலா சூரணம் 2 கிராம்,
அதிமதுரம் சூரணம் 2 கிராம்.
செய்முறை
மேற்கண்ட இரு சூரணங்களையும் 300 மில்லி தண்ணீரில் இட்டு கொதிக்க வைத்து 100 மிலியாக வற்றியவுடன் இறக்கி வடிக்கட்டவும். இந்த கஷாயத்தை தினமும் ஒருவேளை பருகி வரலாம்.
குழந்தை உண்டாகி 5 மாதங்களில் இருந்தே இந்த கஷாயத்தை கர்ப்பிணிப் பெண்கள் பருகி வரலாம். தாய், சேய் ஆரோக்கியம் மிக நன்றாக இருக்கும். கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆகும்.சுகப்பிரசவம் மட்டும் அல்ல ஆஸ்துமா, கொழுப்பு, தொப்புள் கொடிக்கு கீழே இருக்கும் நோய்கள், தசை இறுக்கம் சரியாகிவிடும்.
மருத்துவ குணங்கள்
பொதுவாகவே கரு அடைவது மிகப்பெரிய விஷயம். அடைந்த பிறகு சுகப்பிரசவமாக குழந்தை பெற்றுக்கொள்ள ஆசை இருக்கும். இயற்கை முறையில் சுகப் பிரசவம் ஆக வைத்து, அறுவை சிகிச்சை காரணிகளை அழிக்கும் வல்லமைக் கொண்டது இந்த சுகப்பிரசவ கஷாயம். ஒவ்ெவாரு பெண்ணுக்கும் சுகப்பிரசவம் ஆக இந்த கஷாயம் மிகப்பெரிய அருமருந்து.
அடிவயிறு சுருங்கி விரியும் தன்மையை உண்டாக்கி சுகப்பிரசவம் ஆக வழிவகை செய்கிறது இந்த சுகப்பிரசவ கஷாயம். 8ம் நூற்றாண்டு கோயில்களில் கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் ஆக செய்ய வேண்டி பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்து சிற்பங்களாக வடித்து இருப்பது ஆச்சரியம் அளிக்கக் கூடிய வகையில் இருக்கிறது. சுகப்பிரசவத்துக்கு மட்டுமே அல்ல, ஆஸ்துமா, தைராய்டு பிரச்சனைக்கும் இந்த கஷாயம் அருமருந்தாக இருக்கும். இந்த சுகப்பிரசவ கஷாயத்தை இப்படியான பிரச்சனை உள்ளவர்களும் தேநீர் போல அருந்தி வரலாம், தைராய்டு பிரச்சனை, ஆஸ்துமா பிரச்சனை முற்றிலுமாக குணமாகிவிடும்.
Average Rating