இவ்ளோ நாளா இது தெரியாம போயிருச்சே…!! (மருத்துவம்)

Read Time:6 Minute, 28 Second

நமது பாரத திருநாட்டில்… அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் உணவுக்கலை மற்றும் வளம் எப்போதும் சற்று மேலோங்கி இருக்கும். விருந்தினர்களை உபசரிப்பதில் நமக்கு நிகர் நாமே. அதனால்தான் விருந்தோம்பலைக் குறித்து திருவள்ளுவரும், சிறுபாணாற்றுப்படை என்ற நூலை எழுதிய நல்லூர் நத்தத்தனாரும் விருந்தினர்களை நாம் எவ்வாறு உபசரித்தோம் என்பதைப் பறைசாற்றுகின்றனர். விருந்தோம்பல் மட்டுமா? அதோடு மட்டுமில்லை. உணவை வகைப்படுத்தல், அதனை எப்படி செம்மையாகப் பயன்படுத்துவது என்பது குறித்து நிறைய குறிப்புரைகள் காணப்படுகின்றன.

நமது பாரத தேசத்தின் பழம்பெரும் மருத்துவ முறையான ஆயுர்வேத மருத்துவத்துறை ‘ஆசார வர்க்கம்’ என்ற தலைப்பின்கீழ் உணவுகளை முறையாக வகைப்படுத்தி உள்ளது. இவற்றில் தண்ணீர் முதல் இறைச்சி வரை அனைத்து வகை ஆகாரங்களும் அடங்கும். அவற்றில் ஒன்றுதான் தானிய வகை. ஆயுர்வேதம் தானிய வகைகளை இரண்டாகப் பிரித்து கூறுகிறது ஒன்று சுக தானியம். மற்றொன்று சிம்பி தானியம். சுக தானியம் என்றால் சுனையுள்ள தானியம் என்று பொருள். இதற்கு நெல், கோதுமை, பார்லி போன்றவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம்.

சிம்பி தானியம் என்பது என்ன?

சிம்பி என்றால் பொட்டி என்று பொருள். தானியத்தை உடைத்தால் பொட்டி போன்று இரண்டு சரிபாதி அளவு பிளந்தால் அதற்கு சிம்பி தானியம் என்று பெயர். இதற்கு பொட்டுக்கடலை, பச்சை பயிறு, உளுந்து, கடலை, மொச்சை, துவரை, தட்டை பயிறு போன்றவைகளை எடுத்துக்காட்டாகக் கூறலாம். சிம்பி தானியங்கள் பொதுவாக எளிதில் ஜீரணமாகாது. குளிர்ச்சி, வீரியம் கொண்டவை. வறட்சியை உண்டுபண்ணும். வாயுவை அதிகரித்து மலத்தை அதிகரிக்கச் செய்யும். பித்த கபம், ரத்தம், கொழுப்பு போன்றவற்றால் ஏற்படும் நோய்களுக்கு கஞ்சியாக செய்து அருந்தலாம். வயிற்றில் வாயு உண்டாக்கி எளிதில் ஜீரணமாகாத  தானியம் என்பதால் இவற்றை தினமும் உண்ணக்கூடாது என ஆயுர்வேதம் கூறுகிறது. இதற்கு பச்சைப்பயிறு மட்டும் விதிவிலக்கு. ஏனெனில் பச்சைப்பயிறு எளிதில் ஜீரணிக்கக்கூடிய பயிறு மற்றும் கண்களுக்கு உகந்தவையாகும். அதனால் பச்சை பயிறை மட்டும் தினமும் பயன்படுத்தலாம். சிம்பி தானியத்தில் மிகத் தாழ்ந்தவை மொச்சை கொட்டை. ஏனெனில் மிகுதியாக வயிற்றில் வாயுவை உற்பத்தி செய்வதாகும்.

பொட்டுக்கடலைக்கு என்ன சிறப்பு?

சிம்பி தானியத்திற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு பொட்டுக்கடலையாகும். கடலையை உடைத்தால் இரண்டாக சரிபாதி பிரியும். அதன் ஒரு பகுதியை பார்க்கும்போது பொட்டுபோல் இருப்பதால் இப்பெயர் பெற்றுள்ளது. நமது உணவில் அதிகளவு பயன்படுத்தப்படும் தானியம் பொட்டுக்கடலையாகும். அது தேங்காய் சட்னி முதல் கூட்டு, பலகார உருண்டை வரை அடங்கும். பொட்டுக்கடலை சிறிதளவு சாப்பிட்டாலே அதிக அளவு சக்தியை கொடுக்கக் கூடியது. நரம்புகளுக்கும், தோலுக்கும் நன்மையளிக்கக் கூடியது. புரதச்சத்து அதிகளவில் இருப்பதால் குழந்தைகளுக்கு வேதிப்பொருட்கள் கலந்த தின்பண்டங்களை வாங்கிக் கொடுப்பதைவிட பொட்டுக்கடலை நாட்டுச்சர்க்கரை கலந்து உருண்டை செய்து கொடுத்து வரலாம். பொட்டுக்கடலையுடன் மிளகாய் வற்றல், சீரகம், சிறிதளவு கலந்து பொடி செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டு வரலாம். இதன்மூலம் வயிற்றில் வாயு சேர்வதை தவிர்க்க முடியும். நன்றாக ஜீரணமடையும்போதும் இது ஓர் ஊட்டச்சத்து உணவாகும்.

பொட்டுக்கடலையைப்  பயன்படுத்த வேண்டுமெனில் ஒரு வருடம் சென்ற பொட்டுக்கடலை மிகச் சிறந்தது. இது எளிதில் ஜீரணமாகும். வயிற்றில் வாயுவை தோற்றுவிக்காது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் யாதெனில் வருடம் செல்லச்செல்ல பொட்டுக்கடலையின் வீர்யம் நாளடைவில் குறையத் தொடங்கிவிடும். எனவே 2,3 வருடங்கள் ஆன பொட்டுக்கடலையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். பொட்டுக்கடலை உணவாக மட்டுமில்லாமல் மருந்தாகும் ஆயுர்வேத மருத்துவத்துறையில் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆம் வயிற்றில் புண்ணால் ஏற்படும் வலிக்கு பொட்டுக்கடலை சிறிதளவு ஆரம்பத்தில் பயன்படுத்தலாம். எனவே, குறைந்த அளவு பொட்டுக்கடலை அதிக ஊட்டச்சத்துக்களைக் கொடுப்பதினால் யாரெல்லாம் அதிக உடல் உழைப்பில் ஈடுபடுகிறார்களோ, யார் எல்லாம் உணவை நன்றாக ஜீரணிக்க சக்தி உள்ளவர்களோ அவர்கள் எல்லாம் பொட்டுக்கடலையைத் தினமும் உட்கொள்ளலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நோயெதிர்ப்பு சக்தி தரும் உணவுகள்!!(மருத்துவம்)
Next post நைட்டீஸ் தைக்கலாம்… நல்ல வருமானம் பார்க்கலாம்!(மகளிர் பக்கம்)