திருமணத்துக்கு பிறகும் ஃபிட்னஸை தொடருங்கள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 52 Second

திருமணம் நடக்கும் வரை உடல் எடையைப் பராமரிக்கும் அக்கறை திருமணத்துக்குப் பின் பலருக்கும் காணாமல் போகிறது. நாம் ஏன் ஃபிட்டாக இருக்க வேண்டும் என்பது பற்றிய அறியாமையால் அதை கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். உடற்பயிற்சியின் நன்மைகள் தெரிந்திருந்தாலும் நேரம் இல்லை என்ற காரணத்தைச் சொல்கின்றனர். நாம் நமது நேரத்தை எதற்கெல்லாம் செலவிடுகிறோம் என்று திரும்பிப் பார்த்தால் எவ்வளவு நேரத்தை வீணாக செலவளிக்கிறோம் என்பது புரியும்.

இரவு டிவி சீரியல், சாட்டிங் என்று நள்ளிரவு வரை நேரம் வீணாகும். இதனால் காலையில் தாமதமாக எழுந்து அவசர வாழ்க்கைக்கும் பழகிக் கொள்கின்றனர். ஆனால் இந்த அவசரமும் ஆரோக்கியம் இல்லாத வாழ்க்கை முறையும் உடலிலும் உள்ளத்திலும் பலவிதப் பிரச்னைகளுக்குக் காரணம் ஆகிறது.  இதற்காக தம்பதியர் நேர மேலாண்மையில் அக்கரை செலுத்த வேண்டும். நேரத்தை முறைப்படி திட்டமிட்டு உடற்பயிற்சிக்கு நேரம் ஒதுக்க முடியும். உடற்பயிற்சியை சிறு வயதில் இருந்தே லைப் ஸ்டைலாக மாற்றிக் கொள்ள வேண்டும். எந்த வயதினரும் உடற்பயிற்சி மேற்கொள்ளலாம். ஃபிட்டாக இருக்கும்போது தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  இது தாம்பத்யத்திலும் எதிரொலிக்கும்.

உடற்பயிற்சியை ஆரம்பிக்கும் முன் செய்ய வேண்டியது?

உடற்பயிற்சி செய்ய எண்ணம் வந்த உடன் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வது பணத்தை வீணடித்து உடற்பயிற்சி சாதனங்கள் வாங்கிக் குவிப்பதும் பலரும் செய்வது. ஆர்வம் வந்த உடன் ஆலோசனை பெறுவது முக்கியம். உங்களின் உடல் நலம், இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் செய்து என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் மற்றும் உணவுத் திட்டத்தைப் பின்பற்றலாம் என்பதையும் மருத்துவரின் ஆலோசனைப்படி முடிவு செய்யுங்கள். உங்கள் உடல் நிலைக்குப் பொருந்தாத உடற்பயிற்சி செய்வதால் ஏற்படும் பிரச்னைகளைத் தவிர்க்கலாம்.

உடற்பயிற்சியை எப்படி ஆரம்பிக்கலாம்?

ஆரம்பத்தில் உள்ள ஆர்வத்தில் யூ டியூப் போன்ற காணொலிகளைப் பார்த்து வீட்டிலேயே பயிற்சி செய்தால் பட்ஜெட் குறையும் என யோசிப்பவர்கள் உண்டு. ஆனால், உடற்பயிற்சியைப் பொறுத்தவரை அவர்களது உடல்நிலை அடிப்படையில் முடிவு செய்ய வேண்டிய ஒன்று. சான்றிதழ் பெற்ற ஃபிட்னஸ் டிரெயினரிடம் உங்களது மருத்துவச் சான்றிதழ் அடிப்படையில் தேவையான உடற்பயிற்சியை முடிவு செய்யுங்கள். ஒரு சில மாதங்கள் உடற் பயிற்சிக் கூடத்தில் பயிற்சி எடுத்துக் கொண்ட பின்னர் வீட்டில் தேவையான உபகரணங்கள் வைத்துப் பயிற்சியைத் தொடரலாம்!    

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post செரிமானம் இப்படிதான் நடக்கிறது…!! (மருத்துவம்)
Next post தினம் வால்நட் சாப்பிடுங்க… படுக்கையில் அசத்திடுங்க…!!(அவ்வப்போது கிளாமர்)