பெண்களின் நலன் காக்கும் மருத்துவம்!! (மருத்துவம்)

Read Time:5 Minute, 17 Second

மாற்று மருத்துவங்களில் பெரிதும் கவனிக்க வேண்டிய, நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய மருத்துவமுறை என்று ஹோமியோபதியை சொல்லலாம். அறுவை சிகிச்சையே தீர்வு என நவீன மருத்துவம் கைவிரிக்கும் பல நோய்களை கத்தியின்றி, ரத்தமின்றி ஹோமியோபதி மருத்துவம் குணப்படுத்தியுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு பெரும் உதவி செய்யும் மருத்துவ முறை என்றும் ஹோமியோபதியை சொல்லலாம்.

பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தில் பலருக்கு மாதவிடாய் அதிகமாகவும், நீண்ட நாட்களுக்கு தொடர்வதும் வாடிக்கையாகிவருகிறது. இந்தப் பிரச்னை உள்ளவர்களின் கர்ப்பப்பை சுவர்கள் தடித்து காணப்படும். இதற்கு தீர்வாக நவீன மருத்துவத்தில் கர்ப்பப்பை நீக்கம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், தகுந்த ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக் கொண்டால் உதிரப்போக்கு பிரச்னை நீங்கி அறுவை சிகிச்சையின்றி கர்ப்பப்பையை காப்பாற்ற முடியும்.

PCOD எனப்படும் அண்டகத்தில் (Ovary) ஏற்படும் நீர்க்கட்டிகள், இன்றைய சுற்றுச்சூழல், மனச்சூழல், உணவுப்பழக்கம் ஆகியவற்றால் மிகுந்த அளவில் இளம்பெண்களை பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. இதன் தாக்கத்தால் குழந்தையின்மை, உடல் எடை கூடுதல், மாதவிடாய் உள்ளிட்ட பிரச்னைகள் உண்டாகின்றன. இதனால் பல பெண்களுக்கு நீர்க்கட்டிகளை அறுவை சிகிச்சை மூலமாக அகற்ற வேண்டிய நிலை உருவாகிறது. ஆனால், இதனை சரியாக கண்டறிந்து ஹோமியோபதி மருந்துகளை உட்கொள்ளும்போது உடல் எடை சீராகுதல், மாதவிடாய் சீராகுதல், நீர்க்கட்டிகளை முழுமையாக கரைக்க முடியும். குழந்தையின்மை பிரச்னைக்கும் தீர்வு காண முடியும்.

மேலும் இன்றைய உணவுப் பழக்கங்கள், ஹார்மோன் மருந்து, மாத்திரைகள் மற்றும் தாய்ப்பால் முறையாக கொடுக்காமை ஆகிய காரணங்களினால் இன்றைய பெண்களில் பலர் ஃபைப்ராய்டு கட்டிகள், கேன்சர் அல்லாத மார்பகக் கட்டிகள், இதர கர்ப்பப்பை கட்டிகள் போன்ற பிரச்னைகளில் பரிதவிக்கின்றனர். இத்தகைய கேன்சர் அல்லாத கட்டிகளை ஹோமியோபதி மருந்துகளின் உதவியுடன் முழுமையாக குணப்படுத்தலாம்.

இதேபோல் 40 வயதிற்கு மேற்பட்ட உடல் எடை அதிகமுள்ள பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்னைகளில் ஒன்று பித்தப்பை கற்கள். இதனை ஆரம்ப காலகட்டத்திலேயே கண்டறியாவிடில் கற்கள் பெரியதாகி பித்த நாளத்தை அடைக்கும் அபாயம் ஏற்படும். உடனே அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரும். இந்த பிரச்னையை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்துகள் எடுத்துக்கொண்டால் அறுவை சிகிச்சை தேவையில்லை. பித்தப்பையையும் காக்க முடியும்.

நமது சருமத்தின் பாதப் பகுதியிலும் சிலருக்கு மருக்கள் தோன்றலாம். அதேபோல் உள்ளங்கை மற்றும் பாதங்களில் தோல் திசுக்கள் இறுகி ஆணிகளாக உருவாகலாம். இதனால் பலரும் நடக்க முடியாமல் திணறுவர். உள்ளங்கை மற்றும் பாதங்களில் தோன்றும் ஆணிகளுக்கு ஹோமியோபதி மருந்துகள் எடுத்துக் கொண்டால் முழுமையாகக் குணப்படுத்த முடியும். இதுபோக மூக்கில் சதை வளர்ச்சி, கல்கேனியல் ஸ்பர் எனப்படும் குதிகால் குருத்தெலும்பு வளர்ச்சி, கொழுப்புக் கட்டிகள், தசைநார் வீக்கம், டென்னிஸ் எல்போ, ப்ராஸ்டேட் சுரபி வீக்கம் போன்ற நிலைகளுக்கு ஆபரேஷன் இல்லாமல் தகுந்த ஹோமியோபதி மருந்துகள் உட்கொண்டால் உரிய நேரத்தில் குணப்படுத்த முடியும். உடலில் உள்ள நோய்களை தக்க நேரத்தில் கண்டறிந்து நாமும் ஹோமியோபதி மருந்துகளை எடுத்துக்கொண்டு நோயற்ற வாழ்வு வாழலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தோழி சாய்ஸ்!!! (மகளிர் பக்கம்)
Next post புதிய தொழில்நுட்பங்களால் முதியோரை பாதுகாக்கலாம் !! (மருத்துவம்)