வாழைக்கிழங்கும் பயன் தரும்…!! (மருத்துவம்)

Read Time:4 Minute, 22 Second

*வாழை மரம் நமக்கு பல்வேறு உணவுப் பொருட்களையும், மருத்துவ ரீதியான உதவிகளையும் தருவது நாம் அறிந்ததுதான். ஆனால், பலரும் அறியாத ஒன்று வாழை மரத்தின் வித்தான அதன் கிழங்கினையும் நாம் உட்கொண்டு பயன்பெறலாம் என்பதுதான்.

*வாழை மரத்தின் தண்டினை பரவலாக நாம் உபயோகிக்கிறோம். இதுபோல வாழை மரத்தின் வேர்ப்பகுதியில் இருக்கும் வித்தான அதன் கிழங்கினையும் சமைத்து உண்ணலாம். இதை வாழைக்கட்டை என்று அழைப்பார்கள். இந்த வித்துக்குள் மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து, இரும்புச்சத்து, சோடியம், பொட்டாசியம் போன்ற பல்வேறு சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

*வாழைத்தண்டுக்கு உள்ள அனைத்து சத்துக்களும் வாழைக்கிழங்குக்கும் உள்ளது. இதை வாழைத்தண்டு பயன்படுத்துவது போல சாம்பாராகவோ, சூப்பாகவோ, பொரியலாகவோ பயன்படுத்தி அதன் பயன்களை பெறலாம்.

*சிறுசீரக பாதிப்பு இருப்பவர்கள் வாழைக்கிழங்கினை வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு உட்கொள்ளலாம். சிறுநீரகப் பாதை தூய்மையாகும்.

*உயர் ரத்த அழுத்தத்தால் அவதிப்படுபவர்கள் வாழைக்கிழங்கினை சாறாகவோ அல்லது உணவாகவோ பயன்படுத்தி வந்தால் ரத்த அழுத்தம் சமநிலைக்கு வரும். இதில் வைட்டமின் பி 6 அதிக அளவில் உள்ளது.

*வாழைக்கிழங்கு நெஞ்செரிச்சலைப் போக்குகிறது. வயிற்றில் அமில பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருவது நல்லது. வயிற்றின் அமிலத்தன்மையை சமநிலைப்
படுத்தி நெஞ்செரிச்சல், நெஞ்சு உறுத்துவது போல் இருப்பது போன்ற பிரச்னைகளை தீர்க்கிறது.

*வாழைக்கிழங்கு சாறுடன் நெய் சேர்த்து உட்கொள்வதனால் சிறுநீரகக் கல்லடைப்பு குணமாகும். வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பும் குறையும். தொப்பையும்
குறையும்.

*வாழைக்கிழங்கு பயன்படுத்தும்போது சிறிதளவு இஞ்சி சேர்த்து கொள்வது எளிதில் செரிமானம் ஆகும். இது வளர்சிதை மாற்றத்துக்கும் உதவும்.

*வாழைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் தொண்டை பகுதி முதல் மலக்குடல் வரை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்கிறது.

*சிறுநீரகக் கற்கள் பிரச்னை இருப்பவர்கள், தினமும் காலையில் வாழைக்கிழங்கு சாறை ஜூஸாக அருந்தி வந்தால் சிறுநீரக கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கரைந்து உடைந்து சிறுநீரோடு சேர்ந்து வெளியே வந்துவிடும்.

*வெட்டிய வாழை மரத்தின் வேர் பகுதியை வாழைக்கிழங்கு சாறுடன் எலுமிச்சைச் சாற்றைக் கலந்து பருகினால் சிறுநீரகத்தில் கால்சியம் கற்கள் உருவாவதைத் தடுக்கும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்க்கும்.

*வாழைக் கிழங்கு சாறினை ரத்த அழுத்தம் உள்ளவர்களும், சிறுநீரக கற்கள் உள்ளவர்களும், உடல் பருமன் உள்ளவர்களும் வாரத்தில் மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு வாழைக்கிழங்கினை சாறாகவோ, உணவாகவோ எடுத்துக் கொள்ளலாம். பொதுவாக, அனைவரும் வாரத்திற்கு ஒரு முறை எடுத்துக்கொண்டாலே போதும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பெண்களை தாக்கும் வழுக்கைக்கு குட்பை! (மருத்துவம்)
Next post உச்சக்கட்டம் எப்படி இருக்கும்? (அவ்வப்போது கிளாமர்)