நீரிழிவைக் குறைக்கும்… மாரடைப்பைத் தடுக்கும்…!! (மருத்துவம்)

Read Time:8 Minute, 33 Second

‘‘சிறுநீரகத்தில் கல் வந்துவிட்டால், ‘வாழைத்தண்டு சாப்பிடுங்க’ என்ற ஆலோசனையைப் பலரும் கூறுவதுண்டு. வாழைத்தண்டுக்கு அந்த ஒரு பெருமை மட்டுமே இல்லை. சிறுநீரகக் கல்லை கரைக்கிற திறன் போல இன்னும் எத்தனையோ பல மகத்துவங்களையும் செய்ய வல்லது வாழைத்தண்டு’’ என்கிறார் சித்த மருத்துவர் சத்யா.

‘‘உணவே மருந்து என்ற தத்துவத்தின் அடிப்படையில், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை உணவின்மூலமே பெற்றுக் கொள்ளும் வழியை நம் முன்னோர்கள் பல விதங்களில் கற்பித்திருக்கிறார்கள். அதன் வழியில் வாழைத்தண்டினை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதன் மூலம் பல நோய்களை அண்டவிடாமல் வாழ முடியும்.

காய்கறிகளை சமையலில் பயன்படுத்துவது போல வாழைத்தண்டினையும் சாப்பிட்டு வர வேண்டும். ஏனெனில், நம்முடைய உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு நம் உணவில் வாரத்துக்கு இருமுறை அல்லது ஒருமுறையாவது வாழைத்தண்டு எடுத்துக்கொள்வது அவசியம்’’ என்றவரிடம், வாழைத்தண்டின் மருத்துவப் பயன்களைக் கூறுங்கள் என்று கேட்டோம்…

‘‘வாழைத்தண்டு உடலின் ஜீரண சக்தியை சீர் செய்து அதிகரிக்கச்செய்து உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றுகிறது. மனித உடலின் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது. வாழைத்தண்டில் வைட்டமின் – பி-6 நிறைந்துள்ளது. இதில் இரும்புச்சத்து மிகுந்துள்ள காரணத்தால் ரத்தத்தில் ஹீமோகுளோபின் என்னும் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும்.

உடலின் நோய் எதிர்ப்புத் தன்மையை அதிகரிக்க செய்யவும் பெரிதும் பயன்படுகிறது. வாழைத்தண்டில் Glucoside, Alkaloid, Saponin, Tannin போன்ற சத்துக்கள் மிகுதியாக அடங்கியுள்ளன. வாழைத்தண்டு Diuretic எனப்படும் சிறுநீர் பெருக்கி செய்கை உடையது. மனித உடலில் சிறுநீரகத்தில் கால்சியம் படிவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகின்றன. வாழைத்தண்டில் உள்ள சிறுநீர் பெருக்கியானது சிறுநீரை அதிகப்படுத்தி கற்களை வெளியேற்றுகிறது.

வாழைத் தண்டினை அரைத்து அடிவயிற்றின் மீது பற்று போல் போட சிறுநீர் செல்லும்போது ஏற்படும் வலி குணமாகிறது. ெபாட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் இதயத்துக்கு கேடு விளைவிக்கும் சோடியம் உப்பினை குறைத்து மாரடைப்பைத் தடுக்கிறது. வாழைத்தண்டினை அரைத்து பசைபோலாக்கி அத்துடன் மஞ்சள் சேர்த்து சரும நோய்களின் மீது பற்று போல போட்டு வர குணமாகும்.

தினமும் 25 மி.லி வாழைத்தண்டின் சாற்றை அருந்தி வர வெள்ளைப்படுதல் நோய் குணமாகும். தொண்டையில் ஏற்படும் வீக்கம், வறட்டு இருமல், ஆகியவற்றுக்கு வாழைத்தண்டு சாற்றினை அருந்தலாம். குடலில் தங்கிய முடி, நஞ்சு ஆகிய தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. அடிபட்ட வீக்கங்களுக்கு வாழைத்தண்டு திப்பியை வைத்து கட்டலாம். அதிக நார்ச்சத்து இதில் நிறைந்துள்ளதால் உடல் பருமனைக் குறைக்க ஒரு நாள் விட்டு ஒரு நாள் அருந்தலாம்.

கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைத்தண்டு சூப் செய்து அருந்த பலன் உண்டாகும். இரைப்பையில் சுரக்கும் அமிலத்தால் ஏற்படும் நெஞ்செரிச்சலைக் குணப்படுத்துகிறது. அதனால், தினமும் காலையில் வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு அருந்தலாம். இதன்மூலம் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உடலை பலம் பெற செய்யும். வயிற்றுப் புண்ணை எளிதில் குணப்படுத்தும். மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் வாழைத்தண்டினை சேர்த்து சமைத்து உண்ணலாம்.

சிறுநீர் பாதையில் ஏற்படும் நோய்களைக் குறைக்கவும் உதவியாக இருக்கும். இன்சுலின் சுரப்பினை சீர் செய்து சர்க்கரை நோயின் தாக்கத்தைக் குறைக்கிறது’’ என்பவர் வாழைத்தண்டினை சமையலில் எவ்வாறு தயார் செய்து சாப்பிட்டால் அதனுடைய முழு பயனும் நமக்கு கிடைக்கும் என்பதையும் தொடர்ந்து விரிவாகக் கூறுகிறார்.வாழைத்தண்டு கூட்டுநறுக்கிய வாழைத்தண்டு, நறுக்கிய வெங்காயம், தேவையான அளவு கடலைப்பருப்பு மூன்றையும் சிறிது தண்ணீர் விட்டு குக்கரில் வேக வைத்து எடுக்கவும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், கடலைப்பருப்பு, உளுந்து, மிளகாய் வற்றல், கறிவேப்பிலைச் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை கூட்டில் சேர்த்து மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்க்கவும். இந்த வாழைத்தண்டு கலவையை நன்றாக கொதிக்கவிட்டு இறக்கி சாப்பிடுவது நல்லது. வாழைத்தண்டு் சூப்தனியா, சீரகம், மிளகு மூன்றையும் தனித்தனியாக வறுத்து பொடிக்கவும். வெங்காயம், தக்காளி, மிளகாய் வற்றல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, இஞ்சி, பூண்டு அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.

பாத்திரத்தில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் அரைத்த விழுது சேர்த்து பச்சை வாசம் போக வதக்கவும். இதில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கி தூவிய தண்டு சேர்த்து ஆறு கப் நீர் விட்டு கொதிக்க விடவும். பாதி வெந்தி–்ருக்கும் நேரம் பொடி செய்த தூள் உப்பு, தேவையான அளவு மஞ்சள் தூள் சேர்த்து மீண்டும் நன்றாக கொதிக்க விடவும். கடைசியாக கொத்தமல்லி கறிவேப்பிலை சிறிது தூவி எடுத்தால் சத்துமிகுந்த வாழைத்தண்டு சூப் ரெடி.

வாழைத்தண்டு சாலட் வாழைத்தண்டை மிகவும் மெல்ல வட்டமான துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். பச்சை மிளகாயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வாழைத்தண்டுடன் பச்சை மிளகாய் கறிவேப்பிலை மற்றும் உப்பு தேவையான அளவு கலந்து கொள்ளவும்.அதனுடன் எலுமிச்சைச்சாறு பிழிந்து விடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம் சேர்த்து தாளிக்கவும். தாளித்தவற்றை வாழைத்தண்டுடன் சேர்த்து கையால் தூக்கி குலுக்கிவிட்டால் வாழைத்தண்டு சாலட் ரெடி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post நீரிழிவு நோயாளிகளுக்கு…!!(மருத்துவம்)
Next post உறவு கொள்ள இயலாத நிலை எப்போது வரும்?(அவ்வப்போது கிளாமர்)