உடலுறவில் ஆடவன் சந்திக்கும் பல்வேறு கட்டங்கள்!!(அவ்வப்போது கிளாமர்)
உடலுறவு வேட்கை :உடலுறவு வேட்கை, ஒருவருக்கு ஏற்பட அவருடைய மன நிலையும், ஆண்மைச் சுரப்பி நீரும் காரணங்கள் ஆகக் கருதப்படுகின்றன.
ஒருவருக்கு, விந்து விதைகளை, அறுவை சிகிற்சையின் மூலம் அதாவது, விந்து விதைகளில் புற்றுநோய் காண்பது போன்ற நிலைகளில் எடுத்து விட்டால், அவருக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை குறைந்தோ, அல்லது, அறவே இல்லாமலோ போய்விடுகின்றது.
ஆண் குறி விறைத்தல்-
ஆண் குறி விறைப்பதற்கு, அதன் இயற்கை அமைப்புப் பெரிதும் துணை நிற்கின்றது.
ஆண் குறியின் ஊடே செல்லும் மூத்திரக் குழய் என்றும் யூரீத்ராவை சுற்றி கடல்பாசி போன்ற மென் பெருள் உள்ளது.
இதற்கு அடுத்தபடியாக, இந்த மென் பொருளைச் சுற்றி, குகை போன்ற அறைகள் உள்ள அமைப்புக்கள் கொண்ட, இரத்த நாளங்கள் தாராளமாக வளைந்து நௌpந்து செல்லும் கவர்னோசம் என்னும் இன்னொரு பொருள் போர்வை போல ஆண்குறியைச் சுற்றிக் கிடக்கின்றது.
ஆன் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
ஆண் குறியில் உடலுறவு சமயத்தில், விறைப்பு ஏற்பட, இந்தப் போர்வைப் பொருள் மிகவும் பயன்படுகின்றது.
உடலுறவு நேரத்தில், இந்தப் போர்வை போன்ற பொருளின் உள்ள குகை போன்ற சின்னஞ்சிறு அறைகளில், இரத்த ஓட்டம் வெள்ளம் போலப் பிரவாகமாக பெருக்ககெடுத்துச் சூடேற்றி ஆண் குறியை விறைக்க வைக்கின்றது.
இவ்வாறு இந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும், இரத்த ஓட்டம், பன்மடங்காக, ஆண்குறியில் பெருகுவதற்கு, அதில் உள்ள உணர்ச்சிகளைக் கிளறும் நம்புகள் காரணமாக உள்ளன.
இந்த நரம்புகள், ஆண்குறி, உடலுறவில் ஈடுபடும்போது ஏற்படும் கிளர்ச்சி நிலையாலும், மூளை மூளைசார்ந்த மத்திய நரம்புப் பகுதிகளின் கட்டுப்பாட்டுக்குள் உள்ள மன நிலை காரணமாகவும் செயல்படலாம்.
ஆகவேதான், வாலிபப் பருவத்தில் உள்ள ஓர் இளைஞன், எழில் பூத்துக் குலுங்கும் ஒரு பருவ மங்கையைப் பார்க்கின்ற மாத்திரத்திலேயே, அவன் ஆண் குறி விறைப்பு அடைகின்றது.
ஒழுக்க சீலன் ஆக வாழும் இளைஞனுக்கும் இந்த நிலை ஏற்படலாம்.
இஃது இயற்கை அன்னை, மனிதனின் உடலில் இயல்பாகச் செய்து காட்டும் சித்து விளையாட்டு ஆகும்.