சர்க்கரை நோயாளிகள் கவனத்துக்கு…!! (மருத்துவம்)
சிகிச்சை முறைகள்
உணவு, உடற்பயிற்சி. இன்சுலின் ஊசி மருந்துடன் மாத்திரைகள். டயாபடீஸைக் குறித்த
விழிப்புணர்வு ஆகியவை.
தவிர்க்கவேண்டிய உணவு
தேன், சர்க்கரை, ஸ்வீட்ஸ், டிரை ஃப்ரூட்ஸ், குளூகோஸ், சாக்லேட், மிட்டாய் போன்ற நேரடி இனிப்புகள். கேக், பேஸ்ட்ரீஸ், பொரித்த உணவுகள், இனிப்பான குளிர் பானங்கள், மது, ஜூஸ் வகைகள்.
அதிகம் பரிந்துரைக்கப்படும்
சில உணவுகள்:
வெஜிடபிள் சாலட், ப்ரூட் சாலட், ஆவியில் வேகவைத்த உணவுகள் (இட்லி, இடியாப்பம், கொழுக்கட்டை), வேகவைத்த மீன், முட்டை வெள்ளைக்கரு ஆம்லெட், பருப்பு, பயறு, சுண்டல் வகைகள், கீரை பொரியல், இனிப்பு இல்லாத காபி, டீ, இனிப்பு இல்லாத இஞ்சி டீ, பிளாக் டீ, எல்லா வகையான சூப்.
தேவையான உணவு
கீரைகள், சூப் வகைகள், எலுமிச்சை, வெங்காயம், புதினா, வெண்ணெய் எடுக்கப்பட்ட மோர், நட்ஸ், நறுமணமூட்டிகள் (Spices).
ரத்த பரிசோதனை
இதன் சாம்பிளும் வெறும் வயிற்றிலும், காலை உணவுக்கு பின்னரும் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்பட்டு டெஸ்ட் செய்யப்படும். இதில், கணக்கிடப்படும் அளவு 110 mg/dl – 180 mg/dl-க்கு அதிகமாக இருந்தால் `டயாபடீஸ்’ என்கிறார்கள்.
சிறுநீர் பரிசோதனை
வெறும் வயிற்றிலும், சாப்பிட்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து சிறுநீர் சாம்பிள் எடுக்கப்பட்டு, டெஸ்ட் செய்யப்படும். இது, நோயின் தாக்கத்தை பொறுத்து `+’ முதல் `+ + + +’ வரை என குறிப்பிடப்படும்.
HbA1C டெஸ்ட்
இதுவும் ஒரு ரத்த பரிசோதனைதான். இதன் மதிப்பு 7 அல்லது 7-க்கு கீழே இருந்தால் நார்மல். உடலின் சுகர் கட்டுப்பாட்டு திறனை அறிய உதவுகிறது.