Dry Fruits… !! (மருத்துவம்)

Read Time:3 Minute, 48 Second

உலர்பழங்களை நம்முடைய அன்றாட உணவுமுறையில் சேர்த்துக் கொள்ளுவதன் மூலம் நமக்கு இதயப்பாதுகாப்பு, ஆன்டி ஆக்சிடேட்டிவ் (Anti Oxidative Property) நீரிழிவு நோய் எதிர்ப்பு, உடல் எடையைக் குறைப்பதற்கும், உடலில் கொழுப்புச்சத்தின் அளவை சீராக வைப்பதற்கும், எலும்பை வலுவாக்குவதற்கும், செரிமானம் சீராக நடைபெறுவதற்கும் உதவுகிறது. பொதுவாக உலர் திராட்சை, பேரீச்சம் பழம், உலர் அத்தி, கொடி முந்திரி, மற்றும் பாதாமி பழம்(Apricot) உலர் பழங்களாக அறியப்பட்டுள்ளன.  மேலும் மாம்பழம், பெர்ரி பழங்கள், பப்பாளி, ஆப்பிள் அன்னாசி போன்ற பழங்களிலிருந்தும் உலர் பழம் தயாரிக்கபடுகின்றன.

இதில் நுண்ணூட்டச்சத்துக்கள் அதிகம் இருப்பதால் இதனை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் இந்த சாதாரண உணவுப்பொருள் மிக சிறந்த உணவுப் பொருளாக கருதப்படுகிறது.  இவை இயற்கையாகவே இனிப்புச் சுவை உடையதால் வெள்ளைச் சர்க்கரைக்கு மாற்றாக இதனை பயன்படுத்தலாம்.

*உலர் திராட்சை இனிப்பும் புளிப்பும் கலந்த சுவை உடையது.  உலர் திராட்சையில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால் உடலில் ஹிமோகுளோபின் அளவு அதிகரித்து ரத்தசோகை குணமாக உதவுகிறது.  அமிலத்தன்மை சார்ந்த நோய்கள், மலச்சிக்கல் குணமாகவும் உதவுகிறது.  அதை சரியான அளவில் உட்கொண்டால் அதிக உடல் எடை குறைக்க வழிவகுக்கிறது.

*உலர் பிளம்ஸில் வைட்டமின் ஏ, நீர்ச்சத்து மற்றும் இரும்ச்புசத்து அதிகம் உள்ளது. இது எலும்பு மற்றும் தசை வலுப்பெற உதவுகிறது.  உடலில் கொழுப்புச்சத்தை சீரமைக்கிறது.

*பேரீச்சம்பழத்தில் இரும்புச் சத்து அதிகமாக உள்ளதால் உடலில் ரத்தத்தின் அளவு அதிகரிக்க உதவுகிறது.  வயிற்றுப்புண், இதய நோய் உள்ளவர்கள் உட்கொள்ளுதல் நல்லதாகும்.  சுகப்பிரசவம் நடைபெற உதவுகிறது.

*உலர் பெர்ரியில் நார்ச்சத்து, வைட்டமின் இ அதிகமாக உள்ளது. நாள்பட்ட நோயை தடுப்பதற்கும், இதயநோயை தடுப்பதற்கும் உதவுகிறது.

*உலர் அத்திப்பழமானது மிதமான இனிப்பு சுவை உடைய இந்த உணவில் இரும்புசத்து, கால்சியம் சத்து அதிகமாக இருக்கிறது. சுவாச ஆரோக்கியம் மற்றும் ஆண்களுக்கு விந்து உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது.  மேலும் உடலில் ரத்த அழுத்தத்தை சீராக வைக்கவும், புற்றுநோயின் வளர்ச்சியை குறைக்கவும் உதவுகிறது.

*ஆல்மண்ட் இதயக்கோளாறு உடலில் சர்க்கரையின் அளவை குறைப்பதற்கும், உடல் எடையைச் சீராக வைப்பதற்கும் உதவுகிறது.

உலர்பழங்களில் அனைத்து வகையான சத்துக்களும் செறிவூட்டப்பட்டுள்ளன.  கலோரி உட்பட.  அதனால் இதனை சரியான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.  அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற சொல் உலர் பழங்களுக்கு பொருந்தும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post மருந்தாகும் துவரம்பருப்பு!!(மருத்துவம்)
Next post என் பொம்மைகளே எனக்கான அடையாளம்! (மகளிர் பக்கம்)