வயிற்று வலிக்கு கிரைப் வாட்டர் கொடுப்பது சரியா?(மருத்துவம்)
Read Time:1 Minute, 16 Second
குழந்தைகள் நல மருத்துவர் சுப்ரமணியன் பிறந்த குழந்தைக்கு கோலிக் பெயின் (Colic pain) அதாவது, வயிற்றுவலி வரும் போதும், பொதுவாக மாலை நேரங்களிலும் குழந்தைக்கு 1 வயது ஆகும் வரை கிரைப் வாட்டர் கொடுப்பது நம்மூரில் வழக்கமாக இருக்கிறது. உண்மையில், அது நல்லதல்ல. ‘வயிறு உப்புசமாக இருக்கிறது, வயிற்றுவலியால் குழந்தை அழுகிறது’ என்று கிரைப் வாட்டர் கொடுப்பார்கள்.
ஆனால், கிரைப் வாட்டர் குழந்தையின் குடல் இயக்கத்தைக் கடினப்படுத்திவிடுவதால் குழந்தைக்கு மலம் கழிப்பது கஷ்டமாகிவிடும். நாம் எதை நினைத்து கிரைப் வாட்டர் ஊற்றினோமோ, அதற்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்படும். குழந்தை பிறந்த 6 மாதம் வரை தாய்ப்பால் தவிர எந்த ஒரு உணவையும் கொடுத்தால் இன்ஃபெக்ஷன் ஆக வாய்ப்பு உண்டு. அதனால் கிரைப் வாட்டரை தவிர்ப்பதே நல்லது.