
உலர்திராட்சை!! (மருத்துவம்)
Read Time:1 Minute, 8 Second
*நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராமல் தடுக்கும்.
*ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் நிறைந்துள்ளதால், எடை அதிகரிக்க நினைப்போருக்கு ஏற்றது.
*பொட்டாசியம், மக்னீசியம் நிறைந்துள்ளதால் அசிடோஸைத் தவிர்க்கும்.
*இரும்புச்சத்து நிறைந்துள்ளதால், அனீமியாவைத் தடுக்கும். ரத்தத்தை மேம்படுத்தும்.
*காம பெருக்கியாகச் செயல்படும்.போரான் இதில் நிறைந்துள்ளதால் கால்சியம் உடலில் கிரகிக்க மிகவும் உதவியாக இருக்கும்.
*எலும்புகளுக்கும், பற்களுக்கும் நல்லது. ஆஸ்டியோபொரோசிஸ் பிரச்னை வராமல் தடுக்கும்.
*இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட் கண் நலத்துக்கு நல்லது. கேட்டராக்ட், மாக்யூலா பாதிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படாமல் காக்கும்.