மைக்ரோவேவ் ஓவன் சில டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:3 Minute, 59 Second

மிக்சி, கிரைண்டர் போல் இப்போது மைக்ரோவேவ் ஓவனும் ஒவ்வொருவரின் வீட்டின் சமையல் அறையில் முக்கிய பங்கு வகிக்க ஆரம்பித்துவிட்டது. இதில் உணவை சூடு செய்வது மட்டுமில்லாமல் கேக், குக்கீஸ் ஏன் ஒரு உணவைக்கூட தயார் செய்யலாம். எல்லாவிதத்திலும் பயன்படக்கூடிய இந்த மைக்ரோவேவ் ஓவன் குறித்து சில டிப்ஸ் உங்களுக்காக…

*மைக்ரோவேவ் ஓவனில் ஒரு சமையலை முடிக்க தேவைக்கு அதிகமான நேரம் எடுத்துக்கொண்டால் ஓவனில் இருக்கும் பொருட்கள் கெட்டியாகிவிடும்.

*தயாரித்த பொருளை ஓவனில் இருந்து இறக்கிய பின்பும் பத்து நிமிடம் உணவு உள்ளுக்குள் வெந்து கொண்டிருக்கும். அதனால் சற்று குறைவாக வேகும்போதே இறக்கி விட்டாலும் தப்பில்லை.

*ஓவனில் சமையல் பொருட்களை வைக்கும்போது ஒன்றன் மீது ஒன்றாக வைக்காமல் சற்று இடம் தள்ளி பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். அவ்வாறு வைத்தால் பொருட்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் சீராக வெந்துவிடும்.

*சதுரமான பாத்திரங்களில் உணவினை வேக வைத்தால் நான்கு மூலைகளிலும் உள்ள பொருட்கள் சற்று அதிகம் வெந்துவிடும். அதனால் வட்டமான பாத்திரங்கள் ஓவனுக்கு ஏற்றதாகும்.
*உப்பை முதலிலே சேர்த்துவிட்டால் உணவு வேக அதிக நேரமாகும்.

*எண்ணெயில் முக்கிய பொருட்களை வறுக்க ஓவனை பயன்படுத்தக் கூடாது.

*சில வகை புட்டிங்குகளில் சிறிதளவு மதுபானம் சேர்ப்பார்கள். அத்தகைய உணவுகளை தயாரிக்கவோ, சூடாக்கவோ ஓவனை பயன்படுத்தக்கூடாது. பயன்படுத்தினால் தீ பிடித்து விடக்கூடும்.

*குழம்போ அல்லது கேக் தயாரிப்பதாக இருந்தால், பாத்திரத்தின் முக்கால் அளவு தான் குழம்பின் அளவு மற்றும் கேக் மாவின் அளவு இருக்க வேண்டும்.

*காய்கறிகளை வேக வைக்கும்போது தேவைக்கு அதிகமாக தண்ணீர் ஊற்றிவிடக் கூடாது. தேவைக்கு அதிகமாக தண்ணீர் சேர்த்தால் வேகுவதற்கு அதிக நேரமாகும்.

*காய்கறிகளை ஒரே மாதிரியான அளவில் நறுக்க வேண்டும். பெரியதும் சிறியதுமாக இருந்தால் பெரிய துண்டுகள் சரியாக வேகாமல் போய்விடும்.

*பாட்டில்கள் போன்று வாய்ப்பகுதி குறுகிய பாத்திரங்களை மைக்ரோவேவ் ஓவனில் சமைக்க பயன்படுத்தக்கூடாது.

*ஒரு பாத்திரத்தில் எலுமிச்சை சாறு அல்லது வினிகர் சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைத்து சில நிமிடம் ஓடவிட்டு பிறகு ெமன்மையான துணி கொண்டு துடைத்துவிட்டால் போதும் மைக்ரோவேவ் ஓவன் சுத்தமாகிவிடும்.

*மைக்ரோவேவ் ஓவனின் உட்பகுதியை தினமும் துடைத்து சுத்தப்படுத்த வேண்டும்.

*சோப் தண்ணீரால் உள்பகுதியை துடைத்தாலும் எலுமிச்சம்பழத்தோலை உள்ளே வைத்தாலும் மோசமான வாடை ஏற்படாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோதுமை டிலைட்ஸ்!! (மகளிர் பக்கம்)
Next post செயற்கை கருப்பை கண்டுபிடிச்சாச்சு!(மருத்துவம்)