
பாட்டி சமையல்!! (மகளிர் பக்கம்)
பயத்தங்கஞ்சி
தேவையானவை:
பாசிப்பருப்பு – 1 கப்,
வெல்லம் (பொடித்தது) – அரை கப்,
பால் – ஒரு கப்,
ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன்,
நெய் – 1 டீஸ்பூன்.
செய்முறை:
கடாயில் நெய் விட்டு, பாசிப்பருப்பை லேசாக வறுத்துக் கொள்ளவும். குக்கரில் ஒரு பங்கு பருப்புக்கு இரண்டு பங்கு தண்ணீர் விட்டுக் குழைய வேக வைக்கவும். வெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கொதிக்க வைத்து, வடிகட்டவும். வெந்த பாசிப்பருப்பில், வெல்லக் கரைசலைச் சேர்த்து கொதிக்க வைக்கவும். நன்றாக கொதித்து வரும்போது பாலை சேர்த்து, ஒருமுறை கொதித்ததும் இறக்கவும். அதில் ஏலக்காய்த்தூள் சேர்த்துப் பரிமாறவும்.
தவலை அடை
தேவையானவை:
பச்சரிசி – ஒரு கப்,
மிளகு – ஒரு டீஸ்பூன், சீரகம் – அரை டீஸ்பூன்,
தேங்காய் துருவல் – கால் கப்,
கடுகு – கால் டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
உளுத்தம்பருப்பு – அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பச்சரிசியுடன் மிளகு, சீரகம் சேர்த்து ரவை போல பொடித்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், காய்ந்த மிளகாய் தாளித்து, அதில் தேங்காய் துருவலை சேர்க்கவும். அதனை லேசாக வதக்கி, உப்பு, தண்ணீர் சேர்க்கவும். அது கொதிக்க ஆரம்பிக்கும்போது பொடித்த ரவையை மெதுவாகப் போட்டுக் கிளறி, கெட்டியாக வரும்போது இறக்கவும். ஆறியதும், சிறுசிறு அடைகளாகத் தட்டி தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சுட்டு எடுக்கவும்.