ஆயுர்வேதம் தரும் ஆரோக்கியம்! (மருத்துவம்)

Read Time:7 Minute, 32 Second

இன்று உலகம் முழுதுமே பாரம்பரிய மருத்துவங்களுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் காலமிது. அலோபதியில் என்னதான் சிறப்பான தீர்வு இருந்தாலும் பக்கவிளைவு இல்லாத அல்லது பக்கவிளைவுகள் மிகக் குறைந்த தீர்வுகள் பாரம்பரிய மருத்துவங்களிலேயே கிடைக்கின்றன. அப்படியான அற்புதமான பாரம்பரிய சிகிச்சைமுறைகளில் சிறப்பானது ஆயுர்வேதம்.

ஆயுர்வேதம் இந்தியாவுக்கான தனித்துவமான பாரம்பரிய மருத்துவங்களில் முதன்மையானது. அதர்வண வேதத்தின் பகுதிகளில் ஒன்றான ஆயுர்வேதம் இயற்கையான வழிமுறைகளில் ஆயுளைக் காக்கும் மருத்துவம் எனப்படுகிறது. வாதம், பித்தம், கபம் என மூன்று தோசங்கள் நம் உடலில் உள்ளன. இவற்றை முக்குணங்கள் என்பார்கள். ஆரோக்கியமான உடலில் இந்த மூன்று தோசங்களுமே சமநிலையில் இருக்க வேண்டும். இந்த சமநிலை குறையும்போது அது நோயாகிறது.

ஆயுர்வேத நிபுணர் எந்த தோசம் எவ்வாறு இருக்கிறது என்று கண்டறிந்து அதைச் சமநிலைப்படுத்தும் சிகிச்சையைத் தருவார். ஆயுர்வேதம் நோயின் வேர் வரை சென்று நோய்க்கான அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து சிகிச்சை தருவதாகும். எனவே, நோயின் அறிகுறிகளைவிட நோய்க்கான காரணத்துக்கு சிகிச்சை தருவதையே முதன்மையாகக் கொண்டது. ஆயுர்வேதத்தில் எல்லாவகை நோய்களுக்குமே நல்ல சிகிச்சைகள் உள்ளன.

இன்று நவீன வாழ்க்கைமுறை உருவாக்கியுள்ள நோய்களான சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மன அழுத்தம், தூக்கமின்மை, இடுப்பு வலி, கழுத்து வலி போன்ற வாழ்வியல் முறை நோய்கள் முதல் நுரையீரல், சிறுநீரகம், கல்லீரல், பித்தப்பை, இதயம், நரம்பு மண்டலங்கள், சருமம் போன்ற உடலுறுப்புகளில் ஏற்படும் கோளாறுகள் வரை எல்லாவகை நோய்களுக்கும் ஆயுர்வேதத்தில் சிறப்பான தீர்வு உண்டு.

நாட்பட்ட நோய்கள் மற்றும் நீண்ட கால நோய்களுக்கும் ஆயுர்வேதத்தில் நல்ல தீர்வு உண்டு. உதாரணமாக, சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறுகள் போன்றவற்றுக்கு மிகத் தொடக்கநிலையில் முழுமையான தீர்வைத் தர இயலும். சிறுநீரகம் பழுதடைந்தவர்களுக்குத் தொடக்க நிலையில் நல்ல குணம் தர முடியும். டயாலிசிஸ் நிலையில் இருப்பவர்களைக்கூட உடல் நிலையைத் தேற்றிக் கொண்டுவர இயலும்.

மிகத் தொடக்க நிலையில் வரும்போது நோயின் அடிப்படைக் காரணத்தை எளிதாகக் கண்டுபிடித்துவிட முடிகிறது. பிற உள்ளுறுப்புகளும் கெடாது இருக்கும். எனவே, நோய்க்கான காரணத்தைக் கண்டறிந்து முழுமையாகக் குணமாக்குவது எளிதாக இருக்கிறது. எலும்பு தொடர்பான நோய்களுக்கு ஆயுர்வேதத்தில் அருமையான தீர்வு உள்ளது. அலோபதியில் டிஸ்க் தேய்தல் போன்ற முதுகெலும்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு அறுவைச்சிகிச்சையைத் தீர்வாகச் சொல்வார்கள்.

ஆனால், இதனால் முழுமையான குணம் கிடைக்கும் என்று சொல்வதற்கில்லை.ஆயுர்வேதத்தில் அறுவைசிகிச்சையே தேவை இல்லாமல் முதுகெலும்பு உள்ளிட்ட எலும்புப் பிரச்சனைகளுக்குத் தீர்வளிக்க முடியும். நோயாளியின் தன்மை, நோயின் தன்மை போன்றவற்றை அவதானித்து, எலும்புகளுக்கு உட்புற மருந்து கொடுத்தும் வெளிப்புறப் பூச்சு கொடுத்தும் உட்புறமாகவும் வெளிப்புறமாகவும் எலும்புகளை வலுவாக்கி குணமாக்கலாம். செரிமானக்கோளாறுகள், மூலநோய் போன்றவற்றுக்கும் ஆயுர்வேதத்தில் தீர்வுண்டு.

என்னவகை நோயாக இருந்தாலும் நோயாளியின் ஒத்துழைப்பு அவசியம். உணவுக் கட்டுப்பாடும் வாழ்க்கைமுறை மாற்றமும் மிகவும் முக்கியம். சர்க்கரை நோய் வந்தவர்கள் சர்க்கரையை உண்டுகொண்டே மருந்தையும் எடுத்துக் கொண்டிருந்தால் நிச்சயம் நோய் குணமாகாது. எனவே, மருத்துவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொண்டு, மருத்துவர் பரிந்துரைப்படி வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து, உணவியல் முறையைப் பின்பற்றினால் எந்த நோயாய் இருந்தாலும் நாம் வென்றெடுக்க இயலும் என்பதே எல்லா மருத்துவத்துக்கும் அடிப்படை. ஆயுர்வேதமும் இதனை பல்லாயிரம் ஆண்டுகளாக வலியுறுத்திவருகிறது.

இன்று கொரோனா உலகையே அச்சுறுத்தி வரும் பெருந்தொற்றாக இருந்துவருகிறது. கொரோனாவுக்கான தடுப்பூசிகள் வந்துவிட்டாலும் இன்னமும் கொரோனா அச்சம் தரும் ஒரு நோய்தான். கொரோனா போன்ற மோசமான நுரையீரல் தொற்றுக்கு, ஆயுர்வேதத்தில் விரைவான தீர்வுண்டு.

தொகுப்பு : இளங்கோ

நுரையீரலை வலுப்படுத்தும் கைமருந்து!

இரவு உணவுக்குப் பின், உறங்குவதற்கு முன்பு, ஒரு வெற்றிலை, ஒரு சிட்டிகை மஞ்சள், ஒரு சிட்டிகை மிளகுத்தூள், கொஞ்சம் கிராம்பு, ஓர் ஏலக்காய் இவற்றை ஒன்றாக வைத்து நன்றாக மென்று விழுங்க வேண்டும். (சிறிது எச்சிலைத் துப்பினாலும் தவறில்லை) பதினைந்து நிமிடங்கள் கழித்து அரை டீஸ்பூன் தேன் பருக வேண்டும்.இப்படி, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் செய்துவந்தால் நுரையீரல் ஆரோக்கியமாகவும் எந்தவகையான சுவாசக்குழாய்த் தொற்றும் நெருங்காது. நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும். கொரோனாவின் கொடும்தொற்றிலிருந்து தப்பலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஃபிட்தான் எப்பவும் கவர்ச்சி! அலியா பட்!! (அவ்வப்போது கிளாமர்)
Next post ஹெல்த்தி சிறுதானிய ரெசிப்பிகள் 3 ..!! (மருத்துவம்)