முத்து ஆபரணங்களை பாதுகாப்பது எப்படி? (மகளிர் பக்கம்)

Read Time:1 Minute, 42 Second

*காற்றோட்டமான பாதுகாப்பான இடத்தில் முத்துக்கள் பதிக்கப்பட்ட நகைகளை வைக்க வேண்டும்.

*சூரிய ஒளி, வெப்பம் இவற்றுக்கு அருகே முத்துக்களின் அணிகலன்கள் இருக்கக் கூடாது.

*ஸ்ப்ரே, பெர்ஃப்யூம் உபயோகித்தால் முத்து நகைகள் ஒளி இழக்கச் செய்யும்.

*ஒவ்வொரு முறை அணிந்துவிட்டு எடுத்து வைக்கும் போதும் மென்மையாக பட்டுத் துணியால் துடைத்து வைக்க வேண்டும்.

*பட்டு நூலில் கோர்த்த முத்து மாலைகளில் ஆண்டிற்கு ஒரு முறை பட்டு நூலை மாற்ற வேண்டும். உள்ளே உள்ள பட்டு நூல் நைத்து அறுந்து போவது நமக்குத் தெரியாது. இதனால் விலை உயர்ந்த முத்துக்களை நாம் இழக்க நேரிடும்.

*முத்துக்களை வாங்குவதற்கு முன் இயற்கை வெளிச்சத்தில் வைத்து பார்த்து வாங்க வேண்டும்.

*முத்துக்கள் அடங்கிய மாலையை மற்ற அணிகலன்களுடன் சேர்த்து வைக்கக் கூடாது.

*துடைக்கும் போது முத்துக்கள் ஒன்றோடு ஒன்று உரசாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

*முத்துக்களை தங்கத்தில் பதிந்து நகை செய்தால் முத்து தங்கத்தில் கரைந்து விடும். வெந்நீரில் கழுவவும் கூடாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post வானவில் கூட்டணி பலவண்ணப் பழங்கள் தரும் பலன்கள்! (மருத்துவம்)
Next post பெரும்பாடு என்னும் டிஸ்மெனோரியா!! (மகளிர் பக்கம்)