ஸ்கூட்டர் ஓட்டும் பெண்களுக்கு டிப்ஸ்!! (மகளிர் பக்கம்)

Read Time:4 Minute, 9 Second

*புது வண்டி வாங்கிய முப்பது நாளில்/ 750 கிலோ மீட்டர் ஓடியதுமே கண்டிப்பாக முதல் சர்வீஸுக்கு விட வேண்டும். ரெகுலராக அடுத்தது முப்பது நாட்களில் ஒரு சர்வீஸ் செய்ய வேண்டும். ஒரு புது வண்டிக்கு இதே போல் தொடர்ச்சியாக ஏழு சர்வீஸ் அவசியம்.

*சுலபமாக ஸ்டார்ட் ஆகாவிட்டால் ‘சோக்’கைப் போட்டு ஸ்டார்ட் செய்து உடனே ஆஃப் செய்து விட வேண்டும்.

*டூவீலருக்கான பிராண்டெட் என்ஜின் ஆயிலை வாங்கிப் போடுவது நல்லது. ஒரே பிராண்ட் ஆயில் போடுவது இன்ஜினுக்கு நல்ல ‘லைஃப்’ தரும்.

*இரவில் வண்டியை நிறுத்தும் போது ஞாபகமாக லைட் சுவிச்சை ஆஃப் பண்ணி வைக்க வேண்டும். இல்லையென்றால் ‘பல்ப்’, ‘பியூஸ்’ ஆகிவிடும்.

*வாராவாரம் டயருக்கு காற்று செலுத்த வேண்டும். தினமும் துடைக்க வேண்டும். துருப்பிடிக்காது.

*ஒவ்வொரு முறை சர்வீஸுக்கு விடும் போதும் பாட்டரியை செக் செய்து டிஸ்டில் வாட்டர் லெவல் சரியாக இருக்கிறதா என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

*கூடுமானவரை இரண்டு பிரேக்கையும் சேர்த்தே பயன்படுத்த வேண்டும். இதில் முன் பிரேக்கை மட்டும் லேசாகப் பயன்படுத்த வேண்டும். இல்லையென்றால் வண்டி சாயக் கூடும்.

*வண்டியில் செல்லும் போது எக்காரணம் கொண்டும் ஒரு கையால் ஓட்டுவதோ, கால்களை புட்போர்டை விட்டு தொங்கவிட்டுப் போவதோ கூடாது.

*திருப்பத்தில் செல்லும்போது வண்டியின் ஸ்பீடை குறைத்துச் செல்லவும். இல்லாவிட்டால் வழுக்கக் கூடும். பெரிய வாகனங்கள் அருகே போகும் போதும் மெதுவாக செல்லவும், இல்லை என்றால் பெரும் வாகனங்களின் அதிர்வால் வண்டி தடுமாறக் கூடும்.

*வண்டியில் போகும் போது வழியில் நண்பர்களைப் பார்த்தால், வண்டி இன்ஜினை ஓடவிட்டவாறே பேசக்கூடாது. இஞ்சின் சக்தி வீணாவதோடு பெட்ரோலும் செலவாகும்.
*பிரேக் பிடித்தபடி ஓட்டினால் பெட்ரோல் அதிகமாக செலவாகும்.

*ஸ்பீடை திடீர் திடீரென கூட்டிக் குறைக்காமல் ஒரே ஸ்பீடில் (30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) போனால் நல்ல மைலேஜ் கிடைக்கும்.

*திடீர் திடீரேன ஆக்சிலேட்டரை கூட்டிக் குறைப்பது, பிரேக் போடுவது, மூன்று பேர் ஓவர் லோடு போவது போன்ற விஷயங்களால் மைலேஜ் கிடைப்பது குறையும்.

*கிளட்ச் கேபிள், பிரேக் கேபிள், ஹேண்ட் லிவர்ஸ், ஸ்டார்ட்டிங் கேபிள், திரட்டில் கேபிள் ஆகிய வற்றுக்கு அடிக்கடி ஆயில் போட வேண்டும். அப்போது தான் வண்டி ‘ஷார்ப்’பாக இருக்கும்.

*ஹெல்மெட் அவசியம். இதனால் எதிர்பாராத வகையில் வண்டியிலிருந்து கீழே விழுந்து விட்டால் கூட உயிரிழக்கும் ஆபத்தைத் தவிர்க்க முடியும்.

*வண்டியில் செல்லும் போது பெண்கள் சேலை முந்தானை, துப்பட்டாவை பறக்க விடாமல், கட்டிக் கொள்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post புளித்த உணவுகள்!! (மகளிர் பக்கம்)
Next post மனம் எனும் மாயலோகம்!(மருத்துவம்)