சில்லுன்னு ஒரு சிகிச்சை! (மருத்துவம்)

Read Time:6 Minute, 26 Second

வலியும் வீக்கமும் இருக்கும் இடத்தில் வெந்நீர் ஒத்தடம் கொடுப்பது நம் பாரம்பரிய சிகிச்சைதான். இதன் இன்னொரு வெர்ஷன்தான் ஐஸ்கட்டி ஒத்தடம். ஐஸ் என்பது உள்ளுறை வெப்பம் என்பதால் கிட்டதட்ட இரண்டின் பலன்கள் சமமாகவே இருக்கும். இன்று, ஐஸ்கட்டி ஒத்தடம் தருவதற்கென்றே பிரத்யேக பேக்ஸ் சந்தையில் கிடைக்கிறது. இதனைப் பயன்படுத்தி ஒத்தடம் கொடுப்பது வசதியானது. ஐஸ் பேக் ஒத்தடம் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு மட்டுமின்றி மேலும் பலவகையான பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வாக இருக்கிறது.

ஐஸ் பேக்கில், ஐஸ் கட்டிகளைப் போட்டு உடலின் எந்த இடத்தில் பிரச்னை இருக்கிறதோ, அங்கு ஒத்தடம் கொடுத்தால் போதும். “ஐஸால் கை, கால்கள் மரத்துப்போகும். ரத்தநாளங்கள் இறுகும்” என்ற பயம் சிலருக்கு இருக்கும். ஆனால், இரண்டு நிமிடங்கள் வரைதான் அசௌகர்யமாக இருக்கும். பிறகு, ரத்த நாளங்கள் நன்கு தூண்டப்பட்டு, ரத்த ஓட்டம் சீராகும். அனைவருக்கும் நல்ல பலன் அளிக்கக்கூடிய சிகிச்சை இது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைவரும் செய்யலாம்.

குழந்தைகள் பலருக்கும் சிறு வயதிலேயே உடல் பருமன் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஐஸ் தெரப்பி பலன் தரும். குழந்தைகளுக்கு வயிற்றில் ஈரத் துணியைப் போட்டுச் செய்யும் சிகிச்சையும் உண்டு. இதுவும் நல்ல பலன் தரும்.

அதீதத் துறுதுறுப்புடன் இருக்கும் குழந்தைகளுக்கு, முதுகுத்தண்டுவடத்தில் ஐஸ் மசாஜ் செய்யும்போது, நல்ல முன்னேற்றம் தெரியும். மருத்துவர் பரிந்துரைப்படி குறிப்பிட்ட காலத்துக்கு, இந்த சிகிச்சை செய்து கொள்ளலாம். இதனால், சளி பிடித்தால், சில நாட்கள் நிறுத்திவிட்டு, சிகிச்சையை மீண்டும் தொடரலாம்.

உடல் பருமன் பிரச்னை

உடல் பருமனாக இருப்பவர்களுக்கு, வயிற்றில் பழுப்புக் கொழுப்பு இருக்கும். ஐஸ் மசாஜ் கொடுக்கும்போது, பழுப்புக் கொழுப்பு, வெள்ளைக் கொழுப்பாக மாறும். உடற்பயிற்சி மற்றும் சரியான டயட்டைப் பின்பற்றினால் இந்த வெள்ளைக் கொழுப்பு கரைந்துவிடும். இதன் மூலம், தொப்பையைக் குறைக்க முடியும். நீண்ட காலம் உடல் பருமனால் அவதிப்படுபவர்கள், இந்த சிகிச்சையை செய்துகொள்ளலாம். உடனே பலன் தெரியாது. குறுகிய காலத்தில் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும்.

திடீர் உயர் ரத்த அழுத்தம்

முதுகெலும்பில் ஐஸ் மசாஜ் கொடுத்திட, உயர் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். அதிர்ச்சி, விபத்து போன்ற காரணங்களால் திடீரென ரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது, இந்த ஐஸ் தெரப்பி செய்யலாம். இதனால், ரத்த நாளங்கள் விரிவடைந்து, ரத்த அழுத்தம் உடனே கட்டுப்படும்.

வெரிகோஸ் வெயின்

காலில் நீல நிறத்தில் தெரியும் வெரிகோஸ் வெயின் பிரச்னைக்கு ஐஸ் தெரப்பி நல்ல தீர்வு. தொடர்ந்து ஐந்து வாரங்கள் வரை, நோயாளி தனது காலில் ஐஸ் மசாஜ் செய்துவர, பாதிப்பு மறையும்.

தைராய்டு

தைராய்டு இருப்பவர்களுக்கு, ‘கோல்டு நெக் பேக்’ என்ற ஐஸ் தெரப்பி உண்டு. தைராய்டு தொல்லையால் ஏற்படும் மூட் ஸ்விங்ஸ் பிரச்னையைத் தீர்க்கும். தைராய்டு ஹார்மோன் பிரச்னையால் உணர்வுகள் மாறுபடும். கழுத்தில் ஐஸ் தெரப்பி கொடுக்கையில், தைராய்டு ஹார்மோன் நல்ல முறையில் செயல்பட்டு, பிரச்னையின் வீரியத்தைக் குறைக்கும். தைராய்டு தொந்தரவுகளான அதிக எடை, மாதவிடாய் பிரச்னைகள் சீராகும்.

முகப்பருக்கள்

ஐஸ் தெரப்பி செய்து, சுத்திகரிக்கப்பட்ட ஐஸ் வாட்டரில் முகம் கழுவினால் முகப்பருக்கள் வராது. சருமத்தின் எண்ணெய்ப் பசை நீங்கும்.

ஐஸ் தெரப்பியை வீட்டில் செய்ய முடியுமா?

வீட்டிலேயே செய்யக்கூடிய சிகிச்சை என்றாலும், தொடக்கத்தில் இதை சுயமாகச் செய்வது நல்லது இல்லை. தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று, அவர் வழிகாட்டுதலுடன் செய்வது நல்லது. என்ன பிரச்னை எனத் தெரியாமல், தானாகவே ஐஸ் தெரப்பி செய்துகொள்ளக் கூடாது. ஐஸ் தெரப்பி என்பது ஒரு கூடுதலான சப்போர்ட்டிவ் தெரப்பி. நோய்களைக் குணப்படுத்தும் பலவகை சிகிச்சை முறைகளில் ஒன்று.  துணை சிகிச்சையாகச் செயல்பட்டு பிரச்னையை விரைவில் தீர்க்க உதவும்.

சுத்தமான ஐஸ்கட்டிகள் அவசியம்

குடிநீரைக் கொதிக்கவைத்து, ஆறிய பிறகு, வடிகட்டி ஐஸ் ட்ரேயில் ஊற்றி, ஃப்ரீசரில் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால், ஐஸ்கட்டிகள் பாதுகாப்பானதாக இருக்கும். தொற்றுக்கள் ஏற்படாது. சருமப் பிரச்னைகள் வராது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சி… ஒழுங்காக்கும் ‘நச்’ டிப்ஸ்! (மகளிர் பக்கம்)
Next post நிணத்திசுப் புற்றுநோய் தடுப்பது எப்படி? (மருத்துவம்)