
ஐஸ் வாட்டரால் ஏற்படும் பாதிப்புகள்! (மகளிர் பக்கம்)
கோடைக் காலம் ஆரம்பித்துவிட்ட நிலையில் பலரும் தாகத்தைத் தணிப்பதற்கு குளிர்ச்சியான நீரைத்தான் பருக விரும்புவோம். அதிலும் வெளியே வெயிலில் சுற்றித் திரிந்து வீட்டிற்கு வந்ததும் ஃப்ரிட்ஜில் உள்ள நீரை அப்படியே எடுத்துப் பருகுவது வழக்கம். இது வெயிலில் இருந்து தற்காலிகமாக நல்ல நிவாரணத்தைத் தரலாம். இப்படியே எப்போதும் குளிர்ச்சியான நீரைப் பருகினால், அதனால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும். ஐஸ் வாட்டர் குடிப்பதால் சந்திக்கும் பிரச்னைகள் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.
*ஐஸ் தண்ணீரைக் குடிப்பதால், உணவுகள் செரிமானமாவதில் இடையூறு ஏற்படும். குளிர்ச்சியான நீரைப் பருகும் போது ரத்த நாளங்கள் சுருங்கும். இதன் காரணமாக செரிமான செயல்பாடு தாமதமாக்கப்படுவதோடு, உணவுகளும் முறையாக செரிமானமாகாது. இதனால் உணவுகளில் உள்ள முழுமையான சத்துக்களைப் பெற முடியாமல் போய்விடும்.
*நம் உடலில் சராசரி வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ். ஆனால் இதற்கு குறைவான வெப்பநிலையில் எதையேனும் பருகினால், அந்த வெப்பநிலைக்கு உடலை சீராக்க ஆற்றல் தேவைப்
படும். இப்படி ஆற்றலானது உண்ணும் உணவை செரிக்க பயன்படாமல், உடல் வெப்பநிலையை சீராக்க பயன்படுத்தினால். உணவுகளில் உள்ள சத்துக்கள் உறிஞ்ச முடியாமல், நாளடைவில் இதன் காரணமாகவே ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும்.
*குளிர்ச்சியான நீரைப் பருகும் போது, சுவாசப் பாதையை பாதுகாக்கும் படலமான சீதச்சவ்வு பாதிப்பிற்குள்ளாகும். இப்படி ஐஸ் தண்ணீரை தினமும் அதிகம் குடித்து வந்தால், அந்த சவ்வு மிகுதியாக பாதிக்கப்பட்டு, அதனால் எளிதில் நோய்த் தொற்றுக்கள் ஏற்பட்டு, தொண்டையில் புண் உருவாகும்.
*இதயத்துடிப்பு குறைய ஆரம்பிக்கும். மண்டையோட்டின் 10 ஆவது நரம்பானது உடலின் தன்னாட்சி நரம்பு மண்டலம். இந்த நரம்பு தான் உடலில் தன்னிச்சையற்ற செயல்களைக் கட்டுப்
படுத்துகிறது. குளிர்ச்சியான நீரைப் பருகும் போது இந்த நரம்பு இதயத்துடிப்பை குறையச் செய்யும்.
*குளிர்ச்சியான நீரை அதிகம் பருகினால், உடலினுள் உள்ள திசுக்களும், ரத்த நாளங்களும் அழுத்தத்திற்கு உள்ளாகி, பல பிரச்னைகளை உண்டாக்கும்.
*இவை எல்லாவற்றிற்கும் மேலாக உங்கள் பற்கள் குளிர்ந்த நீரினால் பாதிக்கப்படும்.
*திடீர் என்று குளிர்ந்த தண்ணீரை நீங்கள் குடிக்கும் போது, உங்கள் உடலில் தட்ப வெப்ப நிலை சொல்லிக் கொள்ளாமல் திடீர் என்று மாறும். இது பல வருடங்களுக்கு அடிக்கடி நிகழ்ந்தால் உங்கள் சிறுநீரகம் கூட பாதிப்படைய வாய்ப்புண்டு. ஐஸ் தண்ணீரை தவிர்ப்போம். உடல் ஆரோக்கியத்தை தக்க வைத்துக் கொள்வோம்.