
7 நாளில் அழகான உடல் பெற! (மகளிர் பக்கம்)
கல்யாணத்தின் போது எவ்வளவு ஸ்லிம்மாக, ஸ்மார்ட்டாக இருக்கும் பெண்கள், ஒரு குழந்தை பிறந்தவுடன் அவர்களின் உடலமைப்பு முற்றிலும் மாறிவிடுகிறது. தங்களின் உடலை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர…
*முதல் நாள்: பழங்கள் மட்டும். சீத்தா பழம், ஆப்பிள், சப்போட்டா, வாழைப்பழம் தவிர மற்ற எல்லாப் பழங்களையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். பழங்கள் சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான பலம் கிடைக்கும்.
*இரண்டாம் நாள்: காய்கறிகள், பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடலாம். எண்ணெய், தேங்காய் சேர்க்க வேண்டாம். காலையில் வேகவைத்த உருளைக்கிழங்கைச் சாப்பிடலாம். இதனால் தேவையான கார்ப்போஹைட்ரேட் கிடைக்கிறது. காய்கறிகளினால் தேவையான சத்துகளும் கலோரியும் கிடைக்கிறது.
*மூன்றாம் நாள்: பழங்கள் மற்றும் காய்கறிகள்.
*நான்காம் நாள்: வாழைப்பழம், பால், வெஜிடபிள் சூப் சாப்பிடலாம். இதனால் ேசாடியம், பொட்டாசியம் கிடைக்கும்.
*ஐந்தாம் நாள்: ஒரு கப் சாதம், ஆறு தக்காளிப் பழம் மற்றும் பன்னிரண்டு டம்ளர் தண்ணீர்… இதன் மூலம் உடம்புக்குத் தேவையான வைட்டமின் கிடைக்கிறது.
*ஆறாம் நாள்: ஒரு கப் சாதம் மற்றும் வேகவைத்த காய்கறிகள்.
*ஏழாம் நாள்: ஒரு கப் சாதம், பழச்சாறு மற்றும் காய்கறிகள்.
*எட்டாவது நாளில் எடையை செக் செய்து பாருங்கள். இந்த ஏழு நாட்கள் காபி, டீ குடிக்கக் கூடாது. கண்டிப்பாகத் தினமும் இருபது நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.