
பெண்களின் இடுப்புக்கு அழகூட்டும் ஒட்டியாணம்!(மகளிர் பக்கம்)
பெண்களின் ஒவ்வொரு அங்கங்களுக்கும் தனித்தனியான அணிகலன்கள் உண்டு. அதில் மிகவும் அழகானது ஒட்டியாணம் மட்டுமே. இதனை அணியும் பழக்கம் தொன்று தொட்டு நமது தமிழர்களின் கலாச்சாரத்தோடு இணைந்துள்ளது. ஒட்டியாணம் அணியும் பெண்களின் இடுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் தூண்டப்பட்டு, அவர்கள் இடுப்பு மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் பெருகும். வயிற்றுப் பகுதியும் பலம் பெறும்.
முந்தைய நாட்களில் குழந்தைகள் முதல் திருமணமான பெண்கள் வரை அனைவரும் ஒட்டியாணத்தை அணிந்து வந்தனர். காலப் போக்கில் அந்த பழக்கம் மாறிவிட்டது. தங்கம், வெள்ளி, வைரம் என பலவகை டிசைன்களில் உள்ளன. மேலும் உடைக்கு ஏற்ப ஃபேன்சி ஒட்டியாணமும் உள்ளது.
பாவாடை தாவணியோ, புடவையோ அல்லது பாவாடை சட்டையோ எந்த பாரம்பரிய உடையாக இருந்தாலும் அதற்கு ஒட்டியாணம் அணியும் ேபாது அதன் அழகே தனிதான். இதை அறிந்து கொண்ட வி.பி.ஜே. பங்காரு நகைக் கடையினர் ஒட்டியாணத் திருவிழாவை இம்மாதம் முழுதும் கொண்டாடி வருகிறது. 300க்கும் மேற்பட்ட பலவிதமான டிசைன்களில் ஒட்டியாணங்கள் மணமகளுக்காகவே பிரத்யேகமாக அமைக்கப்பட்டு இங்கு காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது. தங்கம், வைரம் மற்றும் இதர கற்கள் பதித்த ஒட்டியாணங்கள் பல வகை டிசைன்களில் இங்கு பார்ப்பது மட்டுமில்லாமல் அணிந்து பார்த்து அதன் அழகை ரசிக்கலாம்.
ஆண் மற்றும் பெண் இருவரும் முந்தைய காலத்தில் ஒட்டியாணத்தை அணிவது பாரம்பரிய வழக்கமாக இருந்தது. நாம் நவீனமாக மாறி இருந்தாலும், என்றும் பழங்கால பாரம்பரிய அணிகலனுக்கு மதிப்பு அதிகம். வி.பி.ஜே. குடும்பத்தினர் மூன்று தலைமுறையாக பாரம்பரியம் மாறாமல் இருப்பதற்காகவே ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் முழுதும் ஒட்டியாணம் கண்காட்சி திருவிழாவினை நடத்தி வருகின்றனர்.