திருமணத்தில் மிடில்கிளாஸ் கனவை நிறைவேற்றுகிறோம்!(மகளிர் பக்கம்)

Read Time:11 Minute, 54 Second

மணப்பெண்ணின் பட்டுப் புடவையையும் அலங்காரத்தையும் கூடுதல் அழகோடு தூக்கலாகக் காட்டுவது ப்ரைடல் ஜூவல்லரிகள். பெண்கள் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஜூவல்லரி செட்களை வாடகைக்கு விடும் தொழிலை சென்னையில் மிக பிரமாண்டமாய் செய்து வருகிறார் விவாக ப்ரைடல் ஜூவல்லரி நிறுவன இயக்குநர் ஜனனி. சென்னை மற்றுமின்றி, ஆன்லைன் வழியே வெளியூர், வெளிமாநில வாடிக்கையாளர்களையும் தனது இன்ஸ்டா பக்கங்கள் மூலமாக கவர்ந்து வருகிறார். மணப் பெண்களின் கனவை நிறைவேற்றும் தொழிலில் இயங்குவது குறித்து அவரிடத்தில் மேலும் பேசியபோது…

தொடர்ந்து 12 வருடமாக இந்தத் தொழிலில் இயங்கி வருகிறேன். படிப்பை முடிச்சுட்டு என்ன பண்ணலாம் என யோசித்தபோது மேக்கப் எனக்கு பிடித்த ஏரியாவாக இருந்தது. 400 மணப்பெண்களுக்கு வெட்டிங் மேக்கப் போட்டுவிட்ட அனுபவமும் கைகளில் இருந்தது. ஆனாலும் திருமணத்திற்கு பின் ப்ரைடல் மேக்கப் துறையை என்னால் தொடர முடியாமல் போகவே, வெட்டிங் இன்டஸ்ட்ரியில் இருந்தும் என்னை முழுமையாக விலக்கிக்கொள்ள முடியாமல் தவித்தேன். வேறொரு கோணத்தில் ப்ரைட்ஸ் இன்டஸ்ட்ரியில் என்னை இணைத்துக்கொள்ள முடிவு
செய்தபோது உதயமானதே ப்ரைடல் ஜூவல்லரி ரெண்டல் திட்டம்.

ப்ரைடல் ஜூவல்லரிகளை வாடகைக்கு கொடுக்கலாம் என முடிவு செய்ததுமே, வீட்டில் இருந்துதான் தொழிலை தொடங்கினேன். ஜூவல்லரியில் லேட்டஸ்ட் டிரெண்ட்ஸ் அனைத்தையும் அப்சர்வ் செய்து தொடர்ந்து என்னை அப்டேட் செய்து கொண்டே வந்தேன். மேலும், ப்ரைட்ஸ் மேக்கப் துறையில் நான் ஏற்கனவே இருந்ததால் கஸ்டமர்களின் கான்டாக்ட்ஸ் அதிகமாக இருந்தது. ஓரளவு தொழில் டெவலப் ஆனதுமே மினிமெல் கலெக்‌ஷன்களுடன் சின்ன ஷோரூமுக்கு என்னை மாற்றிக்கொண்டேன். முதல் நாளே நல்ல ரீச் இருந்தது. ஆனால் எல்லோரும் செய்வதையே செய்யக்கூடாது என்பதில் உறுதியாக இருந்து கொஞ்சம் மாற்றி யோசிக்கவும் ஆரம்பித்தேன்.

ப்ரைடல் ஜூவல்லரி செட்டில் என்னோட ஸ்பெஷல் ‘கஸ்டமைஸ்ட்’ ஜூவல்லரிகள். அதாவது மார்க்கெட்டில் கிடைப்பதை அப்படியே வாங்கிவந்து நான் விற்பதில்லை. தனித்தனியாக ஜூவல்லரிகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டுவந்து, அதை அப்படியே செட்டாக்கி கொடுத்துவிடுவேன். வாடிக்கையாளர்களும் ஜூவல்லரிகளை என்னிடத்தில் செட்டாகத்தான் வாங்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. தங்களின் விருப்பத்திற்குத் தேவையானதை மாற்றி மாற்றி தேர்ந்தெடுத்து அவர்களே அதை செட்டாக்கிக் கொள்ளலாம். அல்லது தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து வாங்கிக்கொள்ளலாம். இந்த கான்செப்ட் கஸ்டமர் மத்தியில் ரொம்பவே ஹிட்டாச்சு.

சின்ன ஷோரூமில் தொடங்கிய பிஸினஸ், கொஞ்சம் கொஞ்சமாய் விரிவடைந்தது. தி.நகர், அண்ணா நகர், வேளச்சேரி என எல்லைகள் விரிவடைந்தன.திருமணம் என்பது மணப்பெண்களுக்கு அவர்களின் கனவு நாள். திருமணத்திற்கு வரும் அனைவர் பார்வையும் அவர் மீதுதான் இருக்கும். எனவே கல்யாணப் பெண்கள் தங்களை ரொம்பவே ப்ரசென்டபிளாய் காட்டிக்கொள்ளவே விரும்புவார்கள். ஒரு மிடில் க்ளாஸ் ஃபேமிலியில் ஹெவியாக தங்கத்தில் நகைகளை அணிவிப்பது முடியாத காரியம். மேலும் திருமணத்தில் தங்க நகைகளுக்கு பாதுகாப்பும் இருக்காது. எனவே பலரின் விருப்பம் அணியும் நகைகள் கோல்ட் மாதிரி இருக்க வேண்டும் என்பதே.

திருமணத்தில் தன்னை நன்றாக அலங்கரித்துக்கொள்ள வேண்டும் என நினைக்கும் மணப் பெண்களுக்கு ப்யூர் சில்வர் ஜூவல்லரி நகைகள் பெஸ்ட் சாய்ஸ். ப்யூர் சில்வர் ஜூவல்லரியில் கோல்ட் பிளேட்டெட் கோட்டிங் செய்த நகைகளாக நாங்கள் செட் நகைகளாக வாடகைக்கு வைத்துள்ளோம். என்னுடையது பெரும்பாலும் 92.5 ஒரிஜினல் சில்வர் வித் கோல்ட் பிளேட்டெட் ஜூவல்லரிகள். ஒரு முழுமையான ப்ரைடல் செட் ஜூவல்லரியினை வடிவமைக்க நாங்கள் ஒரு லட்சத்திற்கு மேல் செலவு செய்கிறோம்.

எங்களிடத்தில் நிறையவே யுனிக்கான டிசைன்கள் பல்வேறு வெரைட்டிகளில் உண்டு. நோஸ் பின்னில் தொடங்கி, ஒட்டியாணம், கம்மல், நெற்றிசுட்டி, மாட்டல், ஜடை பில்லை என எல்லாமும் வாடகைக்குக் கிடைக்கும் என்றவர் நகைகளை பிரத்யேகமாக வடிவமைக்க எங்களிடத்தில் தனிப்பட்ட முறையில் ஆச்சாரிகள் உண்டு. தங்க ஆபரணங்களின் மாடல்களை அப்படியே டிராஃப்ட் செய்து கொடுத்து அதை வெள்ளியில் வடிவமைத்து அதன் மேல் தங்கமுலாம் பூசுகிறோம். அது பார்க்க தங்க நகைக்கு ஈடான அழகை அள்ளி வழங்கும் என்கிறார் இவர்.

ஒரு மிகப் பெரிய ஆரம் அல்லது பெண்கள் இடுப்பில் அணியும் ஒட்டியாணத்தில் 10 சவரன், 20 சவரன் என ஹெவியாக லட்சங்களில் செலவு செய்து, கோல்ட் ஜூவல்லரி ஒன்றிரண்டை மணப்பெண்ணிற்கு பெண் வீட்டார் வாங்குவதைவிட, 2 முதல் 3 சவரனுக்குள் வெரைட்டி ஆப் நகைகளை இரண்டு மூன்றாக வாங்கிக்கொண்டு பெரிய பெரிய ஆபரணங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம். கொஞ்சமாக செலவு செய்து, திருமணத்தில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிக்குமே ப்ரைடல் ஜூவல்லரி செட்களை வாடகைக்கு எடுத்து விதவிதமாக மாற்றி மாற்றி அணியலாம் என்ற ஜனனி, இதுவே புத்திசாலித்தனமான ஐடியாவும்கூட என மணப்பெண்களுக்கு டிப்ஸ்களை நிறையவே அள்ளி வழங்குகிறார்.

எங்களிடம் டெம்பிள் ஜூவல்லரி, ஆன்டிக் ஜூவல்லரி செட்கள், குந்தன் ஜூவல்லரிகள், கெம்பு ஜூவல்லரி, நகாஸ், போல்கி, அமெரிக்கன் டைமண்ட் நகைகள், Cz ப்ரைட்ஸ் ஜூவல்லரிகள் என வெரைட்டிகள் நிறையவே உண்டு. திருமணம் செய்துகொள்ளப் போகும் மணப் பெண்ணின் ஜூவல்லரி தேர்வுக்கு நாங்களும் நிறைய ஆலோசனைகளை வழங்கி வருகிறோம். தனக்கான ப்ரைடல் ஜூவல்லரிகளைத் தேர்வு செய்யும்போது, மணப்பெண்ணின் முக அமைப்பு, நிறம், பட்டுப்புடவையின் வண்ணம், ப்ரைடல் ப்ளவுஸின் டிசைன் போன்றவை கவனத்தில் கொள்ளப்பட்டு அதற்கேற்ற முறையில் ஆலோசனை வழங்கப்படும்.

இதில் மணமகள் ஒல்லியானவர், குண்டானவர், உயரமானவர், உயரம் குறைந்தவர் என அவரது தோற்றத்திலும் கவனம் வைத்து அதற்கேற்ற மாடல் தேர்வுக்கான ஆலோசனைகளை வழங்குவோம்.மணப்பெண் தனக்கு விருப்பமான ஜூவல்லரிகளை வாடகைக்கு, ஆன்லைன் மூலமாகவே தேர்வு செய்து வாங்கும் வசதி எங்களிடத்தில் உள்ளது. வெளி மாநிலம் மற்றும் வெளியூர்களில் வசிப்பவர்கள் எங்கள் இன்ஸ்டா பக்கங்களைப் பார்த்தே அவர்களுக்கான ஜூவல்லரி செட்களை தேர்ந்தெடுக்கிறார்கள். தேவைப்பட்டால் வீடியோ கால் மூலமாக ஆலோசனைகளை எங்களிடம் பெற்றுக்கொள்ளலாம்.

யுனிக்கான டிசைன்கள், வாங்கக்கூடிய விலை, குறைவான விதிமுறைகள், நாட்ஹவர்லி ரென்ட், ஜிப் லாக் பேக்கிங், சேஃப்டி ஜூவல்லரி பாக்ஸ், கன்வீனியன்ட் டெலிவரி டைம்… இவையே என் தொழிலின் தாரக மந்திரம் என்றவர், ஜூவல்லரிகளின் பாதுகாப்பிற்கு குறைந்த அளவு முன் பணம், இவற்றுடன் புகைப்படம் ஒட்டிய முகவரியுடன் கூடிய அடையாள அட்டை. பாதுகாப்பாக பஃபிள்ரேப் செய்யப்பட்ட ஜூவல்லரி செட்கள். பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான ஜூவல்லரி பாக்ஸ்கள். வீட்டு வாசலுக்கே டோர் டெலிவரி. நிகழ்ச்சி முடிந்ததும் ரிலாக்ஸாக டெலிவரி ஆப் மூலமாகவே திருப்பி அனுப்பும் வசதி. கூகுள்பே ரென்டல் முறை என அனைத்துமே திருமண வீட்டாரின் வசதிக்கு ஏற்பவே எங்களிடம் உள்ளது. ப்ரைட்ஸிடம் இருந்து ஜூவல்லரிகள் பாதுகாப்பாய் எங்களுக்கு கிடைத்ததும் முன்பணம் அப்படியே திருப்பி அனுப்பி வைக்கப்படும்.

ப்ரைடெல் ஜூவல்லரி தவிர்த்து நிகழ்ச்சிக்குத் தேவையான பூஜை சாமான்கள், மேடையில் வைக்கும் பெரிய வடிவிலான வெள்ளிக் குத்துவிளக்குகள், நிச்சயதார்த்த சீர்வரிசை வைக்கத் தேவையான வெள்ளியிலான ஒரே மாதிரியான சீர்வரிசை தட்டுகள், மணமக்கள் மஞ்சள் நீராட்டு விளையாடல், மோதிர விளையாட்டுக்கான வெள்ளிக் குடம், குழந்தை பிறந்ததும் தொட்டிலில் போடும் விழாவுக்கு வெள்ளியிலே செய்யப்பட்ட தொட்டில் என அனைத்துமே எங்களிடத்தில் வாடகைக்கு கிடைக்கும் என விடை பெற்றார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ‘ச்ச்ச்சீ..ப் போங்க!’(அவ்வப்போது கிளாமர்)
Next post மேக்கப் பாக்ஸ்-ஹைலைட்டர்!! (மகளிர் பக்கம்)