
குட்டிக் கடலையில் கொட்டிக் கிடக்கும் சத்துகள்!!(மருத்துவம்)
*நிலக்கடலையில் ‘போலிக் ஆசிட்’ நிறைய இருப்பதால், சாப்பிடும் பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படும். பெண்களின் கர்ப்பப்பை சீராக செயல்படுவதுடன், கர்ப்பப்பைக் கட்டிகள், நீர்க்கட்டிகள் ஏற்படுவதை தடுத்து குழந்தைப்பேறு கிட்டும்.
*நிலக்கடலை மூளை வளர்ச்சிக்கு டானிக்போல் உதவுகிறது. இதில் உள்ள விட்டமின் மூளையை பலப்படுத்தும். ரத்த ஓட்டத்தை சீராக்கும்.
*நிலக்கடலையில் ‘பரிப்டோபான்’ என்ற முக்கிய அமினோ அமிலம் நிறைந்துள்ளது. இந்த வகை அமினோ அமிலம் செரட்டோனின் என்ற மூளையை உற்சாகப்படுத்தும் உயிர் வேதிப்பொருள் உற்பத்திக்குப் பயன்படுகிறது. மூளை நரம்புகளைத் தூண்டுகிறது. மனஅழுத்தத்தைப் போக்குகிறது.
*நிலக்கடலையை தினமும் 30 கிராம் அளவுக்குச் சாப்பிட்டால், பித்தப்பை கல் உருவாவதைத் தடுக்க முடியும்.
*நிலக்கடலையில் பாலிபிளாய்ஸ் என்ற ஆன்டி ஆக்சிடெண்ட் உள்ளது. இது நமக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன், இளமையாக இருக்கவும் உதவுகிறது.
*நிலக்கடலை சாப்பிடுவதால், இருதய நோய்கள் வருவதை தடுக்கலாம்.
*பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. நிலக் கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்குக் கிடைக்கவும் பயன்படுகிறது.