நலம் பல தரும் பிரண்டை!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 53 Second

பிரண்டை மருத்துவப் பயன்பாடு மிக்க ஒரு தாவரம். உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பிரண்டை உதவுகிறது.

 • பிரண்டையை உட்கொள்ளும்போது உஷ்ணத்தால் ஏற்படும் நோய்கள் குறையும், உடல் சூடு சீராகும். பிரண்டை வயிற்றுப்புண்ணைகுணப்படுத்துவதோடு செரிமானக் கோளாறுகள், பசியின்மையையும் போக்கவல்ல ஆற்றல் கொண்டதாக இருக்கிறது.
 • பிரண்டையில் உடலுக்குத் தேவையான முழுமையான கால்சியம் சத்து அதிகம் இருக்கிறது.
 • வாய்வு பிடிப்பு, கை கால் குடைச்சல் உள்ளவர்களுக்கு பிரண்டை சிறந்த மருந்தாக உள்ளது. வயிற்றுப் பொருமல் ஏற்படும்போது பிரண்டையை சூப்பாக செய்து சாப்பிட்டால் பிரச்னை தீரும்.
 • நாவில் சுவை உணர்வு தன்மை குறைந்திருப்பவர்கள் பிரண்டையைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நாவின் சுவை தன்மை கூடும்.
 • காய்ச்சல் வந்துவிட்டால் கை, கால் மூட்டு வலியும் இலவச இணைப்பாக ஏற்பட்டு விடும். அதற்கு பிரண்டையை உணவில் அடிக்கடி எடுத்துக் கொள்ளும்போது மூட்டு வலிகளைத் தவிர்க்கலாம்.
 • வயிற்றுப் புண்ணால் அவதிப்படுபவர்கள் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி துவையல் செய்து சாப்பிடலாம். பிரண்டைத் துவையல் எலும்பு முறிவுக்கு மிகமிக சிறந்த மருந்தாகும்.
 • பிரண்டையைத் தொடர்ந்து உட்கொள்ளும்போது உடல்பருமனைக் குறைக்கலாம். இது உடலின் மெட்டபாலிசத்தை (Metabolism) அதிகப்படுத்தி கலோரிகளை வேகமாகக் குறைக்க உதவுகிறது என்பது ஆராய்ச்சிப்பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
 • நீரிழிவு உள்ளவர்கள் பிரண்டையை தொடர்ந்து பயன் படுத்தும்போது நீரிழிவை கட்டுப்படுத்தலாம்.
 • நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் வாரத்திற்கு 3 முறை பிரண்டையை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.
 • பிரண்டையைப் பயன்படுத்துவதற்கு முன் நார் சுத்தமாக நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் அதில் இருக்கும் சிறிய முட்களால் தொண்டையில் நமைச்சல், குத்தல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
 • இனிப்பு அதிகம் சாப்பிடுவதால் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சிகள் உருவாகியிருக்கும். நெய்யில் வதக்கி துவையல் அரைத்து சாதத்தோடு குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் வயிற்று பூச்சிகள் அழியும்.
 • பிரண்டையை துவையலாகவும், ஊறுகாயாகவும், குழம்பாகவும், ரசமாகவும், சட்னி, வடகம், சூப் போன்ற வடிவத்திலும் சேர்த்துக் கொள்ளலாம்.
 • பிரண்டைத் துவையலை எளிதாக புளி, காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு சேர்த்து வதக்கி அரைத்து வாரத்தில் இருமுறை உட்கொள்ளும்போது எலும்புகள் வலுவடையும்.
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post கோதுமை மாதிரி ஆனா கோதுமை இல்லை!(மருத்துவம்)
Next post செக்ஸ் வாழ்க்கை 70 வயதில் முடிகிறது :ஆய்வில் தகவல்(அவ்வப்போது கிளாமர்)