வைட்டமின் சி நிறைந்த குடை மிளகாய்!! (மருத்துவம்)
Read Time:1 Minute, 11 Second
வைட்டமின் சி என்றதும் நமக்கு ஆரஞ்சும், எலுமிச்சையும்தான் உடனே நினைவுக்கு வரும். அதற்கிணையாக கண்ணைக் கவரும் வண்ணங்களில் வகை வகையாக கிடைக்கும் குடைமிளகாயிலும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் ஒரு ஆரஞ்சு பழத்தில் இருப்பதை விடவும் குடைமிளகாயில் வைட்டமின் ‘ சி ‘ ஊட்டச்சத்து மிகுந்து உள்ளது.
சுவை மிகுந்த குடை மிளகாயை காய்கறி சாலட்டில் சேர்த்து பச்சையாகவே உண்ணலாம். பிரைடு ரைஸ், நூடுல்ஸ் போன்ற சைனீஸ் உணவுகளில் கலர்புல்லான அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவர் உங்களுக்கு வைட்டமின் சி ஊட்டச்சத்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள பரிந்துரைத்தால், நீங்கள் குடை மிளகாயை மட்டும் உணவில் சேர்த்துக் கொண்டால்கூட போதும்.