பார்லி அரிசியின் மருத்துவ குணங்கள்!(மருத்துவம்)

Read Time:2 Minute, 33 Second

*ஊட்டச்சத்து மிக்க பார்லி, உடல் வலிமைக்கு பெரிதும் உதவுகிறது. சிறுநீரில் அழற்சி ஏற்பட்டால் பார்லி அரிசியில் கஞ்சி அரை லிட்டர் எடுத்துக் கொண்டு, அத்துடன் கருவேலம் பிசினியையும் (1 அவுன்ஸ்) கலந்து உட் கொண்டு வந்தால் குணமாகும்.

*பார்லி அரிசியில் உள்ள பிசுபிசுப்புத் தன்மையில் ‘டெக்ஸ்ட்ரீ’ என்னும் சத்துப் பொருளும், சர்க்கரையும் அடங்கியுள்ளன. இதில் கஞ்சி தயாரிக்கும் போது சத்துக்கள் கரைந்து ஊட்டச்சத்தாக மாறி விடுகின்றன.

*பார்லி அரிசி ஒரு அவுன்ஸ் எடுத்து அரை லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்சி, தண்ணீர் பாதியாகச் சுண்டியவுடன், அந்த கஞ்சியுடன் சிறிது எலுமிச்சை சாறும், சர்க்கரையும் சேர்த்து சாப்பிட்டால் நோயின் காரணமாக ஏற்பட்ட பலவீனத்தைத் தரும் உடல் உறுப்புகளில் ஏற்பட்ட அழற்சியையும் குணமாக்கும்.

*கெட்ட கொலஸ்ட்ராலை போக்கி நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்வதில் பார்லி அரிசி சிறந்து விளங்குகிறது. பார்லியில் உள்ள பீட்டா குலுக்கோஸ் என்ற நார்ச்சத்து இதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.

*பார்லியில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. பார்லியில் உள்ள வைட்டமின் ‘பி’ நரம்புகளைப் பலப்படுத்தும். தினமும் ஒரு வேளை பார்லி அரிசிக் கஞ்சி அருந்தினால் கொலஸ்ட்ரால் கணிசமாகக் குறையும்.

*கோதுமையிலும் ஓட்ஸிலும் நார்ச்சத்து இருந்த போதிலும், ப்ராஸஸ் செய்யப்படும் போது சுவைகளிடமிருந்து நார்ச்சத்து ஓரளவு குறைந்து போகின்றன. ஆனால் பார்லியில் உள்ள நார்ச்சத்து எந்த வகையிலும் அழிவதில்லை. இதுதான் பார்லியின் சிறப்பு. இது உடம்பில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post பலன் தரும் பப்பாளி!!(மருத்துவம்)
Next post மேக்கப் ரிமூவர்!! (மகளிர் பக்கம்)