ஹெல்த்தி ஜூஸ்…!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 48 Second

கோடை கொளுத்திக் கொண்டிருக்கிறது. எப்படியிருந்தாலும் ஏதேனும் குளிர்பானங்களைத் தேடி நம் நாக்கு தவிக்கத்தான்போகிறது. கண்டகண்ட குளிர்பானங்களை குடிப்பதைவிட, உடலுக்கு நலம் தரும் சில ஜூஸ் வகைகளை முயற்சித்துப் பாருங்களேன்…

முருங்கைக்கீரை ஜூஸ்

தேவையானவை:

முருங்கைக்கீரை – 1 கப்,
மிளகு – 5,
சீரகம், – 1 டீஸ்பூன்,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,
இந்துப்பு,
பனங்கற்கண்டு – தேவையான அளவு.

செய்முறை:

முருங்கைக் கீரையுடன் மிளகு சீரகம், எலுமிச்சைச்சாறு சேர்த்து மிக்ஸியில் அடித்து, வடிகட்ட வேண்டும். பிறகு, இந்துப்பு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாகத் தேனையும் பயன்படுத்தலாம்.

செம்பருத்தி ஜூஸ்

தேவையானவை:

செம்பருத்திப்பூ – 4,
பன்னீர் ரோஜா 2,
பனங்கற்கண்டு அல்லது தேன்  சிறிதளவு,
எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் – 1 கப்.

செய்முறை:

செம்பருத்தி, ரோஜா இதழ்களை நீரில் போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் கலக்கி ஆறவிடவும். பிறகு எலுமிச்சைச் சாறு அல்லது இளநீர் சேர்த்துக் கலந்து பருகலாம்.

கீழாநெல்லி ஜூஸ்

தேவையானவை:

கீழாநெல்லி இலை – 1 கைப்பிடி,
கொத்தமல்லித் தழை,
பனை வெல்லம்  சிறிது,
எலுமிச்சைச் சாறு – 1 டீஸ்பூன்,
இந்து உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் மிக்ஸியில் போட்டு அரைத்து வடிகட்ட வேண்டும். பிறகு தேவையான அளவு நீர் சேர்த்துப் பருகலாம்.
வாழைத்தண்டு – வெள்ளரி ஜூஸ்

தேவையானவை:

வாழைத்தண்டு (பொடியாக நறுக்கியது) 1 கப்,
வெள்ளரித் துண்டுகள் ½ கப்,
எலுமிச்சைச்சாறு – 1 டீஸ்பூன்,
பனங்கற்கண்டு- தேவையான அளவு.

செய்முறை:

அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைக்க வேண்டும். பிறகு, வடிகட்டிப் பருகலாம். பனங்கற்கண்டுக்குப் பதிலாக தேனும் பயன்படுத்தலாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தாகம் தணிக்கும் தர்பூசணி!! (மருத்துவம்)
Next post ஸ்கின் ஹேக்ஸ்: முல்தானி மெட்டி!! (மகளிர் பக்கம்)