அசிடிட்டியை தவிர்க்க சில எளிய வழிகள்! (மருத்துவம்)

Read Time:3 Minute, 34 Second

நாம் உண்ணும் உணவு துகள்களை கரைக்க வயிற்றின் உள்ளே ஹைட்ரோகுளோரிக் அமிலம் மற்றும் பெப்சின் ஆகியவை செரிமானத்திற்காக வயிற்றில் உற்பத்தியாகின்றன. இந்த அமிலமானது வயிற்றின் உள்ளே தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களை அழித்து வயிற்றின் உறுப்புகளை பாதுகாக்கிறது. அதேசமயம், வயிற்றில் சுரக்கும் இந்த அமிலத்தை வயிற்றின் அருகில் இருக்கும் தோலானது எதிர்க்கும் தன்மை கொண்டது. இதனால், வயிற்றிலிருக்கும் அமிலம் உணவுக் குழாய்க்கு மேலே செல்லும்போது, மார்பின் கீழ் பகுதியில் எரிச்சல் உணர்வை ஏற்படுத்துகிறது. இதனால் நெஞ்சு எரிதல், வயிற்றில் எரிச்சல் உணர்வு, வயிற்றுவலி, புளிப்பு ஏப்பம், வாயு போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.

இந்த நெஞ்செரிச்சலே அசிடிட்டி என்று அழைப்படுகிறது.சரிவர உண்ணாதது, புகைப்பிடித்தல், போதிய உடற்பயிற்சி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் அடிக்கடி அசிடிட்டி ஏற்படலாம். கர்ப்பிணிகள் மற்றும் உடற்பருமன் உள்ளவர்களுக்கும் அசிடிட்டி ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.உணவு மற்றும் வாழ்க்கை முறையில் எளிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அசிடிட்டி ஏற்படுவதை தவிர்க்க முடியும். அவை என்ன என்பதைப் பார்க்கலாம்:

கொழுப்பு சத்து மிகுந்த உணவுகள், கஃபீன், சோடா, புதினா, சிட்ரஸ் பழங்கள், தக்காளி, வெங்காயம் ஆகியவை குறைவாக உண்ண வேண்டும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். மூன்று வேளை உண்பதற்கு பதிலாக 4-5 வேளை பிரித்து உண்ணலாம்.செரிமானம் ஆகாத மாவுச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் பாக்டீரியா வளர வழிசெய்யும். இதனால் வயிற்றில் அழுத்தம் அதிகரித்து அமிலத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, மாவுசத்துகள் நிறைந்த உணவுகளை குறைந்த அளவிலேயே எடுத்துக் கொள்ள வேண்டும்.

மது அருந்துதல் அமிலத்தன்மையை அதிகரிக்கும். நெஞ்செரிச்சலை அதிகரிப்பதுடன், உணவுக்குழாயில் இருந்து அமிலம் நீங்குவதை தவிர்க்கும். எனவே, மது அருந்துவதை முற்றிலுமாக தவிர்த்தல் நல்லது. பைக்கார்பனேட் அடங்கிய சூவிங் கம் மெல்லுவதன் மூலம் எச்சில் அதிகம் ஊறி உணவுக்குழாய் வழியே சென்று வயிற்று அமிலத்தை சுத்தம் செய்யும்.அசிடிட்டி தொல்லை இருப்பவர்கள் உறங்குவதற்கு மூன்று மணிநேரம் முன்பாகவே உணவருந்தி முடிக்க வேண்டும். தூங்கும் முன் சாப்பிட்டால் அமிலத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post தேவை தேனிலவு!(அவ்வப்போது கிளாமர்)
Next post யோகம் அறிவோம்! (மருத்துவம்)