செவ்வாழையின் சிறப்பு!! (மருத்துவம்)

Read Time:2 Minute, 55 Second

வாழைகளில் செவ்வாழை மிகவும் அற்புதமான பல மருத்துவக் குணங்கள் கொண்ட பழம். செவ்வாழைப்பழம் ஒன்று சாப்பிட்டால் போதும், வயிறு நிறைந்த உணர்வு நமக்கு ஏற்படும். வைரஸ் கிருமிகளால் நம் உடல் பாதிப்பு அடையாமல் இருக்கத் தினந்தோறும் காலையில் ஒரு செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே போதும்.

கண் பார்வை மங்குதல், கண் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஆகியவைகளுக்கு செவ்வாழைப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். செவ்வாழைப் பழத்தை நாள் தோறும் சாப்பிட்டு வந்தால் குளுகோமா என்ற கண் பார்வை இழப்பு எனும் கொடிய வியாதியைப் போக்கி விடலாம். இரண்டு மாதங்கள் வரை தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

செவ்வாழைப்பழத்தைச் சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி விடும். உடலுக்கு நல்ல பலத்தைத் தந்து உற்சாகத்தை ஊட்டும். தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு மண்டலத்தில் உள்ள நரம்புகள் அதிக அளவில் வலுவடையும்.

ஆண்மை இழந்தவருக்கு ஆண்மையை உண்டாக்கிக் குழந்தைப் பேற்றை உண்டாக்கும். இவர்கள் தொடர்ந்து ஒரு வருடமாவது செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்டு வர வேண்டும். ஆண்மை எழுச்சி பெறுவதுடன் குழந்தைப் பேறும் கிட்டும்.

செவ்வாழைப் பழத்தைச் சாப்பிட்ட பின்பு, ஒரு தேக்கரண்டி தேனை அருந்த வேண்டும். பல் தொடர் புள்ள பல்வேறு பிரச்னைகள் அனைத்தையும் செவ்வாழைப் பழம் தீர்த்து வைக்கும். பல் வலி பஞ்சாய் பறந்து போகும். செவ்வாழைப் பழம் உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது. உடம்பை விரைவாகத் தேற்றுகிறது. ஆண்மையைப் பெருக்குகிறது. நரம்புத் தளர்ச்சியைப் போக்குகிறது.

செவ்வாழை சக்தி நிறைந்த பரிபூரண உணவு ஆகும். இப்பழத்தில் உள்ள மக்னீசியம் மாரடைப்பு வராமல் தடுக்கும் சக்தி உடையதாகக் கருதப்படுகிறது. வைட்டமின் A, B1, B2, புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், தையமின், மக்னீசியம், ரிபோபிளேவின், நியாசின் என்று எல்லாச் சத்துக்களும் உள்ளன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post ராஷ்மிகா மந்தனாவின் ஃபிட்னெஸ் டிப்ஸ்! (மருத்துவம்)
Next post ஜாதிக்காய் நேச்சுரல் வயகரா!! (அவ்வப்போது கிளாமர்)