இதயத்தைப் பாதுகாக்கும் 5 உணவுகள்!! (மருத்துவம்)

Read Time:3 Minute, 1 Second

நமது உடலில் சேரும் அதிகளவிலான கெட்ட கொழுப்பினால், ரத்த ஓட்டம் குறைந்து, நெஞ்சுவலி, திடீர் வலிப்பு நோய், ஹார்ட் அட்டாக் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். எனவே, கொழுப்பு குறைக்கும் உணவுகளை சரியான முறையில் சரியான அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை காப்பாற்றமுடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. அவை என்னென்ன என்று பார்ப்போம்:

*பீன்ஸ், பட்டாணி, சிவப்பு ராஜ்மா போன்ற பருப்பு வகைகள் புரதச்சத்து வாய்ந்தவை. இதயத்தைப் பாதிக்கும் ரத்தக் கொதிப்பு, ரத்தக்கொழுப்புக் கட்டிகள் ஆகியவற்றை குறைக்கும் தன்மை கொண்டவை.

*ஓட்ஸ், தினை, பார்லி போன்றவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இவற்றில் உள்ள பீட்டா குளு கன் உடலில் சேரும் கெட்ட கொழுப்பினை அழிக்கக்கூடிய திறன் கொண்டது.

*பூண்டில் அலிசின் என்ற ஆன்டிஆக்சிடன்ட் உள்ளது. இது உடலின் நோய் எதிர்ப்புச்சக்தியை அதிகரிக்கிறது.

ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் செயல்பாட்டை அதிகரிக்கிறது. மேலும்,, உடலில் காணப்படும் கொழுப்புப்புரதத்தை குறைத்து, இதயத்தைக் காக்கக்கூடியது.

*சிவப்பு ராஸ்பெரிஸ், செர்ரி, ப்ளூபெரி, ஸ்ட்ராபெரி போன்ற பெரிஸ் எனப்படும் பழவகைகள் நார்ச்சத்து அதிகம் கொண்டவை. அவை உடலின் கொழுப்பை சமநிலைப்படுத்தக்கூடியவை என்கிறது ஆய்வுகள். எனவே, இந்த ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த பழங்களை டயட்டில் சேர்த்துக்கொள்வதன் மூலமும் நமது இதயத்தைப் பாதுகாத்துக் கொள்ளலாம்.

*பாதாம், வால்நட், வேர்க்கடலை போன்ற நட் வகைகளையும் உணவில் சரிவிகித அளவில் சேர்த்துக்கொள்வது நன்மை பயக்கும். நல்ல கொழுப்பை உற்பத்தி செய்யும் தன்மைக் கொண்ட இவற்றால், இதயத்திற்கும் நலம். நார்ச்சத்து, மினரல்களையும் அதிகம் கொண்ட உணவுப்பொருட்கள் இவை.சரியான சரிவிகித உணவு முறையுடன் இந்த உணவுகளையும் எடுத்துக்கொண்டால், உடலில் கெட்ட கொழுப்பு சேர்வதில் இருந்து பாதுகாத்துக்கொள்ள முடியும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post உடற்பயிற்சிக்கு முன்னரும் பின்னரும்!! (மருத்துவம்)
Next post கொரோனா காலத்து மன அழுத்தங்கள்!! (மகளிர் பக்கம்)